Latest Updates
-
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க..
Today Rasi Palan 19 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசித்து முடிவெடுத்தால் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்
இன்றைய நாள் ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 19ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 19ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள். அதன் தாக்கம் உங்கள் வேலையிலும் தெரியும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒரு முக்கியமான விவாதம் நடத்தலாம். குழந்தை தொடர்பான பெரிய முடிவையும் இன்று நீங்கள் எடுக்கலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், பொழுதுபோக்கிற்காக அதிக பணம் செலவழிப்பதைத் தவிர்க்கவும். நீங்கள் உங்களது வேலையை மாற்றத் திட்டமிட்டால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பங்குச் சந்தையில் பணிபுரிபவர்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:40 மணி முதல் மாலை 6:10 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று பண விஷயத்தில் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம். அதிகரிக்கும் செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. வேலையைப் பற்றி பேசுகையில், அலுவலகத்தில் உயர் அதிகாரிகளை மரியாதையுடன் நடத்துவது நல்லது. தேவையற்ற ஆணவம் உங்களுக்கு பிரச்சனையை உண்டாக்கும். நீங்கள் கூட்டு வியாபாரம் செய்தால், எந்த முக்கியமான வணிக முடிவையும் எடுக்க இன்றைய நாள் சரியாக இருக்காது. வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். அன்புக்குரியவர்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவு கிடைக்கும். உடல்நலம் குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் இரவு 7:40 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு காதல் விஷயத்தில் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இன்று உங்கள் துணையும் உங்களுக்கு திருமணத்திற்கு முன்மொழியலாம். திருமணமானவர்கள் இன்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மூன்றாம் நபரின் குறுக்கீட்டால் வாழ்க்கைத்துணையுடன் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் உதவியால் இன்று எந்த ஒரு கடினமான வேலையையும் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 11:30 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பாகவும் சோர்வாகவும் இருக்கும். பொறுப்புகளின் சுமை உங்கள் மீது அதிகமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அவசரப்பட்டு எந்த வேலையும் செய்யாதீர்கள். தொழிலதிபர்கள் இன்று புதிதாக முதலீடு செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். நன்கு ஆராய்ந்த பிறகே உங்கள் முடிவை எடுத்தால் நல்லது. உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். உங்கள் செலவுகளின் கணக்குகளை சரியாகக் கண்காணிக்க வேண்டும். இன்று நீங்கள் வீட்டைப் பழுதுபார்த்தல் போன்றவற்றுக்கு நிறைய பணம் செலவழிக்கலாம். ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் ஓய்வில் கவனம் செலுத்த வேண்டும். அதே போல் நேரத்திற்கு சாப்பிட பழக வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 33
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 மணி முதல் மாலை 3:05 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று உங்களுக்காக போதுமான நேரத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தாருடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடலாம். இன்று மனதளவில் மிகவும் நன்றாக இருப்பீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்தினால், விரைவில் உங்கள் எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபம் பெறலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 5 மணி முதல் காலை 11:30 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. தேவையற்ற கோபம் உங்களை சிக்கலில் மாட்டிவிடும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். இன்று நீங்கள் பணம் தொடர்பான எந்த ஒரு வேலையையும் செய்யப் போகிறீர்கள் என்றால், அதைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் முக்கியமான கூட்டத்திற்கு திடீர் அழைப்பு வரலாம். இதற்கு நீங்கள் முன்கூட்டியே தயாராக இருப்பது நல்லது. தொழிலதிபர்கள் இன்று பெரிய சவாலைச் சந்திக்க நேரிடலாம். உங்களின் எந்த ஒரு வேலையிலும் அரசு தடை ஏற்படலாம். இன்று உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 3:20 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே, நீங்கள் மனதளவில் மிகவும் வலுவாக இருப்பீர்கள். உங்கள் எல்லா முடிவுகளையும் மிகவும் சிந்தனையுடன் எடுப்பீர்கள். இதனால், உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று நீங்கள் விலையுயர்ந்த பொருள் ஒன்றைப் பெறலாம். தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்க திட்டமிட்டால், இன்று உங்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும். அதே சமயம் உத்தியோகஸ்தர்களும் இன்று முன்னேறலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். வீட்டின் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 8 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்று காதல் விஷயத்தில் உங்களுக்கு சர்ச்சைக்குரிய நாளாக இருக்கும். உங்கள் துணையுடனான உறவில் உங்களுக்கு விரிசல் ஏற்படலாம். பேச்சுவார்த்தை மூலம் உங்களுக்கிடையே உள்ள மனக்கசப்பைக் குறைக்க முயற்சிப்பது நல்லது. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், எந்த பெரிய செலவும் செய்ய இன்று ஏற்ற நாள் அல்ல. அலுவலகத்தில், சக ஊழியர்களுடன் நல்லுறவை வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். பிறர் வேலையில் அதிகம் தலையிடாதீர்கள். வியாபாரிகள் இன்று பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே, உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கலாம், இதனுடன், திடீர் பண வரவிற்கான வாய்ப்புகளும் உள்ளன. இன்று நீங்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஒரு முக்கியமான விவாதத்தை நடத்தலாம். உங்களின் சிறப்பான செயல்பாட்டினால் அனைவரின் மனதையும் வெல்வீர்கள். தொழிலதிபர்களின் எந்த பெரிய பிரச்சனையும் இன்று முடிவுக்கு வரும். உங்கள் வணிகமும் வேகமாக வளரும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடனான உறவும் வலுவாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 6 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று அலுவலகச் சூழல் மிகவும் சாதகமாக இருக்கும். இன்று உங்கள் வேலைகள் அனைத்தும் மிக வேகமாக முடிவடையும். உங்கள் கடின உழைப்பை முதலாளி கருத்தில் கொள்ளலாம். விரைவில் அதன் சரியான முடிவுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்க்கவும். நெருங்கியவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் நிதி முயற்சி வெற்றியடைவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் உறவில் இணக்கம் ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று சராசரியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:55 மணி முதல் மாலை 6:50 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையின் தவறான நடத்தை உங்களை வருத்தமடையச் செய்யலாம். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. வேலை தொடர்பான முயற்சி ஏதாவது தோல்வியடைந்தால் இன்று நீங்கள் மிகவும் ஏமாற்றமடைய நேரிடலாம். இருப்பினும், நீங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும். சரியான நேரம் வரும்போது உங்கள் பிரச்சனை கண்டிப்பாக தீரும். பணம் தொடர்பான கவலைகள் அதிகரிக்கலாம். இன்று நீங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடலாம். திடீர் உடல்நலக் குறைவு உங்கள் அன்றாடத் திட்டங்களில் தடைகளை உருவாக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் இரவு 7:20 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே, இன்று குடும்பத்தில் பெரியவர்களின் ஆசியைப் பெறுவீர்கள். இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். இன்று உங்கள் திருமண வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம் ஏற்படலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்தால் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. இன்று வேலையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் பாதையில் சில தடைகள் இருக்கலாம். உங்கள் உடல்நலம் சீராகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:40 மணி முதல் மதியம் 2:30 மணி வரை



Click it and Unblock the Notifications











