Just In
- 1 hr ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 2 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 3 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 4 hrs ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
Don't Miss
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கப்போகுது...
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்டு 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...
இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்டு 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...
மேஷம்
இன்று எந்த அவசர முடிவுகளையும் எடுக்காதீர்கள். இல்லாவிட்டால் அது பிரச்சனைகளை அதிகரிக்கலாம். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் சராசரியாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சற்று குறைவாகவே இருப்பார்கள். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். கூடுதல் பணம் செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் துணையுடன் நல்ல உறவைப் பேண முயற்சி செய்யுங்கள். சிறு விஷயங்களுக்காக வாக்குவாதங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரங்கள்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளுடன் அற்புதமான நேரத்தை செலவிடுவீர்கள். பணியில் இருந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இன்று தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். மனதளவில் மிகவும் சிறப்பாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்:26
அதிர்ஷ்ட நேரங்கள்: காலை 4 மணி முதல் 8:30 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்நாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகளை இன்று உங்களால் சமாளிக்க முடியும். அனைத்து வேலைகளும் திட்டப்படி நடக்கும். அலுவலகத்தில் அவசர அவசரமாக எந்த வேலையும் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலை சாதாரணமாக இருக்கும். பொழுதுபோக்கிற்காக அதிக பணம் செலவழிப்பதை தவிர்க்கவும். இது தவிர, கடன் பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்நாள் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்:8
அதிர்ஷ்ட நேரங்கள்: மாலை 5 மணி முதல் 7:15 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று பொறுப்புகளின் சுமை அதிகமாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் முக்கியமான வேலைகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. சிறு வணிகர்கள் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களை கவனித்துக்கொள்வதோடு, உங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சிகளை வேகப்படுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்:14
அதிர்ஷ்ட நேரங்கள்: மாலை 6:30 முதல் இரவு 8 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்கார மாணவர்களுக்கு இந்நாள் அற்புதமான நாளாக இருக்கும். படிப்பை முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் அதிக லாபம் அடைவார்கள். இன்று உங்கள் வேலையில் சாதகமான மாற்றங்களைக் காணலாம். உங்கள் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் தெரியும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தாமதமாக தூங்கி எழுவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்:10
அதிர்ஷ்ட நேரங்கள்: காலை 5 முதல் 9:20 வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். வியாபாரத்தில் சிரமங்கள் அதிகரிக்கும். நிதி நெருக்கடியை சந்திக்க வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். பெற்றோருடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். நிதியைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும். பண விஷயத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, எந்த வேலையையும் அவசரத்திலும் பீதியிலும் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்:25
அதிர்ஷ்ட நேரங்கள்: மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை
துலாம்
துலாம் ராசியைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு நல்ல நாளாக இருக்கும். பாதியில் நின்று போன வேலையை நண்பர்களின் உதவியால் முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு நிதி நன்மைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் அனைத்து வேலைகளையும் முழு முயற்சியுடனும் அர்ப்பணிப்புடனும் செய்து முடிப்பீர்கள். வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். அலட்சியம் தீங்கு விளைவிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தேவையற்ற கவலைகளிலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்:27
அதிர்ஷ்ட நேரங்கள்: காலை 8 மணி முதல் 9:45 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று தங்களின் பேச்சால் வெற்றி பெறுவார்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முக்கிய விவாதம் நடத்த வாய்ப்புள்ளது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். தொழில் கூட்டாளருடன் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் ரொமான்டிக் நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வானம்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரங்கள்: மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சவாலான நாளாக இருக்கும். அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். இன்று உங்கள் வேலையுடன், உங்கள் நடத்தையையும் கவனித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இரும்பு வியாபாரிகளுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். இன்று உங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பொறுப்புகளின் சுமை உங்களை மிகவும் சோர்வடையச் செய்யும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்:11
அதிர்ஷ்ட நேரங்கள்: பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று அதிக வேலைப்பளு காரணமாக நேரம் போதுமானதாக இருக்காது. வேலை தொடர்பான நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கையில் பதற்றமான சூழ்நிலைகள் இருக்கும். தந்தையின் உடல்நிலை மோசமாகலாம். தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தலைவலி, சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்:5
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 முதல் 10 மணி வரை
கும்பம்
வியாபாரம் செய்யும் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். தடைப்பட்ட திட்டங்களைத் தொடங்குவதற்கு கடினமாக உழைக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும். வேலையில் அதிக அலட்சியமாக இருக்கக்கூடாது. உங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவழிக்காதீர்கள். இல்லையெனில் பிரச்சனையை சந்திப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஆஸ்துமா நோயாளிகளின் பிரச்சனை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வானம்
அதிர்ஷ்ட எண்:36
அதிர்ஷ்ட நேரங்கள்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. சொத்தை விற்க திட்டமிட்டிருந்தால், இன்று நல்ல வாய்ப்பு கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது. தாமதமாக சென்றால் பிரச்சனையை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சட்ட விஷயங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஏனெனில் ஒரு சிறிய தவறு பெரிய சேதத்தை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்:19
அதிர்ஷ்ட நேரங்கள்: மதியம் 1 மணி முதல் 3 மணி வரை