Latest Updates
-
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா?
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த புதிய வேலைகளையும் தொடங்குவதைத் தவிர்க்கவும்...
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஏப்ரல் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஏப்ரல் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
இன்றைய நாள் உங்களுக்கு சிறந்த நாளாக அமையும். குடும்பத்தில் நிலவும் சில பிரச்சனைகள் நீங்கி உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை நன்கு செலவிடுவீர்கள். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். காதல் விஷயத்தில் கூட, நீங்கள் இன்று நல்ல முடிவுகளைப் பெறலாம். இன்று உங்கள் துணை தனது மனதை வெளிப்படையாக உங்களுடன் பகிர்ந்து கொள்வார். உங்கள் உறவு வலுவடையும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும், உங்கள் கடின உழைப்பின் பலனை விரைவில் பெறுவீர்கள். பணத்தின் அடிப்படையில் இன்று சராசரியாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருந்து, இந்த தருணங்களை முழுமையாக அனுபவிக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8:15 மணி வரை

ரிஷபம்
இன்று உங்கள் முழு கவனமும் உங்கள் வேலையில் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உங்கள் நிலுவை பணிகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டும். இன்று வணிகர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். நீங்கள் சில பெரிய மற்றும் முக்கியமான வணிக முடிவுகளை எடுக்கலாம். இன்று வீட்டில் சில பதற்றமான சூழல் உருவாகலாம். வயதான நபர் வீட்டில் இருந்தால் அவரது உடல்நிலை திடீரென மோசமடைய வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் வெளிப்படையாக இருங்கள். உங்கள் மனதில் ஏதேனும் குழப்பம் இருந்தால், உங்கள் அன்புக்குரியவருடன் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அமைதியாக இருப்பது உங்களிடையே தவறான புரிதலை அதிகரிக்கும். இன்றைய நாள் பண விஷயத்தில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு கை, கால் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:15 மணி முதல் இரவு 9 மணி வரை

மிதுனம்
திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் இல்லற வாழ்வில் முழு கவனத்தையும் செலுத்த முடியும். உங்கள் துணையை வெளியே அழைத்துச் செல்லலாம். நீங்கள் தனிமையில் இருந்தால், உங்களுக்கு வரன் ஏதேனும் தேடி வந்தால் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் புத்திசாலித்தனமாக உங்கள் முடிவை எடுங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை நீங்கள் அதிகமாக நம்புவது தீங்கு விளைவிக்கும். உங்களைப் பற்றிய ரகசிய விஷயங்களை அதிகம் பரப்புவதைத் தவிர்க்கவும். வியாபாரிகள் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் சில முக்கியமான பொருட்களை வாங்கலாம். இன்று உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை

கடகம்
வணிகர்கள் இன்று நல்ல பலன்களைப் பெறலாம். உங்களின் கடின உழைப்பு மற்றும் சிறந்த புரிதலுடன் இன்று நல்ல லாபம் ஈட்ட முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறவில்லை என்றால், நீங்கள் ஏமாற்றமடைய வேண்டியதில்லை. உங்களை நீங்கள் நம்புங்கள். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற சரியான பலன் நிச்சயம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பெற்றோரின் உடல்நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் அவரிடமிருந்து ஒரு சிறப்பு பரிசைப் பெறலாம். அதே போல் அவர் உங்களை மிகவும் பாராட்டுவார். உங்கள் அன்புக்குரியவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவதன் மூலம் நீங்கள் மிகவும் நேர்மறையாக உணருவீர்கள். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த இன்று நீங்கள் சில வலுவான நடவடிக்கைகளை எடுக்கலாம். நீங்கள் கர்ப்பப்பை தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த வகையிலும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:45 மணி முதல் மதியம் 1:25 மணி வரை

சிம்மம்
உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு பெரிய வெற்றியைத் தரும். நீங்கள் உயர் பதவியைப் பெறலாம். அதே போல் உங்கள் வருமானமும் உயர வாய்ப்புள்ளது. தொழில் விஷயங்களில் அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது. புதிய வணிகச் சலுகையைப் பெற்றால், அவசரப்பட்டு உங்கள் முடிவை எடுக்காதீர்கள். நிதி நிலைமை மேம்படும். இன்று உங்கள் கடின உழைப்பால் கூடுதல் பணம் சம்பாதிக்க முடியும். வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். இன்று அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் காதல் நிறைந்த நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் துணைக்கு ஒரு ஆச்சரியத்தையும் நீங்கள் திட்டமிடலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்கள் பரபரப்பான வழக்கத்திலிருந்து சிறிது நேரத்தை ஓய்விற்காக ஒதுக்க வேண்டும். தொடர்ந்து வேலை செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9 மணி வரை

கன்னி
வியாபாரிகளுக்கு இன்றைய நாள் சவாலான நாளாக இருக்கும். இன்று நீங்கள் எந்த புதிய வேலைகளையும் தொடங்குவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இந்த நேரத்தில் எந்த ஒரு புதிய வேலையையும் கையில் எடுக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற ஆணவத்தை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்களை விட மற்றவர்களை குறைவாக கருதும் தவறைச் செய்யாதீர்கள். அரசு ஊழியர்களுக்கு பெரிய பதவி கிடைக்கும். இன்று பண விஷயத்தில் கலவையான நாளாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கும் செலவுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் கசப்பான மற்றும் இனிமையான சச்சரவுகள் ஏற்படலாம். உங்கள் பரஸ்பர புரிதலின் காரணமாக உங்களுக்கிடையில் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. நீங்கள் உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்தவும். குறிப்பாக பழைய உணவைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

துலாம்
காதல் விஷயத்தில் இன்று உங்களுக்கு மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் தனிமையில் இருந்து, யாரையாவது முன்மொழிய திட்டமிட்டால், இன்று அதற்கு சாதகமான நாள். உங்கள் மனதை நம்பிக்கையுடனும் வெளிப்படையாகவும் பேசினால், நேர்மறையான பதிலைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். வேலையுடன், உங்கள் அன்புக்குரியவருக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் இன்று வேலை சம்பந்தமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். மறுபுறம், வர்த்தகர்கள் பண நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் அதிகரித்து வரும் செலவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆரோக்கியம் குறையலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:30 மணி முதல் இரவு 7 மணி வரை

விருச்சிகம்
இன்று மாணவர்களுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும். கல்வியில் இருந்து வந்த தடை நீங்கி விடாமுயற்சியுடன் முன்னேறுவீர்கள். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு வேறு சில நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். வேலையைப் பற்றி பேசினால், உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலையைச் சந்திக்க நேரிடும். இன்று உங்கள் செயல்திறனில் மேலதிகாரி மிகவும் மகிழ்ச்சியற்றவராக இருப்பார். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைக்காது. வியாபாரிகள் தேவையில்லாமல் அலைய வேண்டியிருக்கும். இன்று நீங்கள் தேவையற்ற விஷயங்களுக்கு நிறைய பணம் செலவழிக்கலாம். உங்கள் தந்தையுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அவர்களின் மனதைப் புண்படுத்தும் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், சாப்பிடுவதில் அதிக கவனக்குறைவு வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

தனுசு
இன்றைய நாள் உங்களுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும். காலையில் சில நல்ல செய்திகள் கிடைக்கும். மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மகிழ்ச்சியை அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு தங்கள் முக்கியமான பணிகளில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக முதலாளி உங்களுக்கு ஏதேனும் வேலையை ஒதுக்கியிருந்தால், உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கவும். விரைவில் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படலாம். வியாபாரிகள் இன்று பெரிய நிதி ஆதாயங்களைப் பெறலாம். உங்கள் வியாபாரம் செழிக்கும். பண விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். திடீர் பண வரவு ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் காலை 10:30 மணி வரை

மகரம்
இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உங்களுக்காக ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். உங்களின் இந்தப் பயணம் வேலை சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். சொத்து, போக்குவரத்து, ஊடகம், அச்சகம் போன்றவை தொடர்பான வேலை செய்வர்கள் இன்று நல்ல பலன்களைப் பெறுவார்கள். உங்களின் கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். இன்று வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாம். இன்று நீங்கள் சுதந்திரமாக உல்லாசமாக இருப்பீர்கள். பணத்தைப் பற்றி பேசும்போது, உங்கள் வருமாத்தை மனதில் வைத்து மட்டுமே செலவு செய்ய வேண்டும். நீங்கள் சில காலமாக தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:30 மணி முதல் மாலை 4 மணி வரை

கும்பம்
இன்று உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும். கிரகங்களின் எதிர்மறை விளைவுகளால், உங்கள் நடத்தை மற்றும் பேச்சில் நிறைய கசப்பு தன்மை இருக்கலாம். உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபம் ஏற்படலாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உயர் அதிகாரிகளின் அழுத்தமும் உங்கள் மீது இருக்கும். வணிகர்கள் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு நல்ல லாபத்தைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் விஷயங்கள் சாதாரணமாக இருக்கும். பரபரப்பான கால அட்டவணை காரணமாக இன்று உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நேரத்தை ஒதுக்க முடியாமல் போகலாம். உங்கள் வார்த்தைகள் குழந்தைகளை தொந்தரவு செய்யலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். மன அழுத்தம் மற்றும் சோர்வு காரணமாக ஆரோக்கியம் மோசமடையலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

மீனம்
பழைய நண்பர் இன்று திடீரென வீட்டிற்கு வரலாம். இன்று உங்கள் நண்பருடன் மிகவும் வேடிக்கையாக நேரத்தை செலவிடுவீர்கள். வேலையைப் பற்றி பேசினால், உங்கள் தன்னம்பிக்கை நிலை மிகவும் நன்றாக இருக்கும். அதே போல் உங்கள் கடின உழைப்பு மற்றும் நேர்மறை எண்ணத்தைப் பார்த்து, முதலாளியும் மிகவும் ஈர்க்கப்படுவார். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இன்றைய நாள் மிக முக்கியமான நாளாக இருக்கும். துணையுடன் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும். உங்கள் துணையுடன் அவர்களின் விருப்பமான இடத்திற்கு நீங்கள் சென்று வரலாம். இன்று அதிக நேரம் வெயிலில் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12:30 மணி வரை



Click it and Unblock the Notifications











