For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமாக செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள்...

இன்று மேஷம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 18 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 18 May 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மேஷம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 18 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு சவாலான நாளாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் அல்லது உயர் அதிகாரிகளுடன் உங்களுக்கு மோதல்கள் இருக்கலாம். வேலையில் இதுபோன்ற விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழிலதிபர்கள் பதவி உயர்வில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் உங்களுக்கு திறக்கப்படலாம். உங்களின் எந்த முக்கிய ஒப்பந்தமும் இன்று உறுதி செய்யப்படலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். இன்று வீட்டின் சூழ்நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று அன்பானவர்களுடன் மறக்கமுடியாத நாளாக இருக்கும். தாயின் மூலம் நிதி பலன்கள் உண்டாகும். இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தில் கலவையான நாளாக இருக்கும். உங்கள் மீது அதிக வேலை அழுத்தத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: காலை 5:10 மணி முதல் மதியம் 2 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று உங்கள் ஒவ்வொரு முடிவையும் மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். வீடாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி, எந்த ஒரு வேலையையும் அவசரத்தில் செய்வதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உங்களுக்கு ஏற்கனவே பல பொறுப்புகள் இருந்தால், மேலதிகாரியை திருப்திப்படுத்த உங்கள் மீது அதிக வேலைப்பளுவைச் சுமக்காமல் இருந்தால் நல்லது. இது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். உங்கள் செயல்திறன் குறையும். வியாபாரிகள் இன்று கலவையான லாபத்தைப் பெறலாம். எந்தவொரு சட்டவிரோத வேலையையும் தவிர்க்கவும். இல்லையெனில், உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமற்றதாக இருக்கும். சில குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் மோசமடையக்கூடும். உங்கள் உறவில் கசப்பு அதிகரிக்கும். இல்லையெனில் உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், வயிறு தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:10

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை

மிதுனம்

மிதுனம்

புதிதாக வேலை தேடும் நபர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களைத் தரும். நீங்கள் விரும்பும் வேலையைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. அதே போல், உங்கள் வருமானமும் அதிகரிக்கும். வணிகர்கள் இன்று தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இது உங்கள் நேரத்தையும் பணத்தையும் மட்டுமே வீணடிக்கும். வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று அன்புக்குரியவர்களுடன் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். உங்களுக்கு திடீர் பணம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அதே போல் செலவுகளின் பட்டியலும் சிறிது குறைக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் அலட்சியமாக இருக்காதீர்கள். குறிப்பாக உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

கடகம்

கடகம்

இன்று உங்களுக்கு வேலையில் கலவையான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை அழுத்தம் அதிகமாக இருக்கும். இதனால் நீங்கள் அதிக அழுத்தத்தை உணருவீர்கள். இருப்பினும், உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் எல்லா வேலைகளையும் விரைவாக முடிக்க முயற்சி செய்யுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வணிகர்கள் அதிக அளவு பொருட்களை இருப்பு வைப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் வணிக முடிவைப் புத்திசாலித்தனமாக எடுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் சரியான நேரத்தில் ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். இன்று அவர்களுடன் அதிக நேரம் செலவிட முயற்சித்தால் நல்லது. பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்களுக்கு தசைகள் தொடர்பான பிரச்சனை இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

சிம்மம்

சிம்மம்

நீங்கள் அரசு வேலை செய்து உயர் பதவியில் பணிபுரிபவராக இருந்தால், இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக நீங்கள் கூட்டு வியாபாரம் செய்தால், இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலைகளைச் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும். இன்று உங்கள் துணையின் நடத்தையில் மென்மை தன்மை இருக்கும். எல்லா கோபத்தையும் மறந்து, உங்கள் துணையை அன்புடன் நடத்துவது நல்லது. பண விஷயத்தில் அதிகம் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்கவும். சிந்திக்காமல் செலவு செய்யும் உங்கள் பழக்கம் பிரச்சனைகளை அதிகரிக்கும். இன்று உடல் நலம் சீராகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

கன்னி

கன்னி

கிரகங்களின் எதிர்மறையான தாக்கங்களால் இன்று உங்கள் வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி அல்லது தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, இன்று நீங்கள் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அலுவலகத்தில் உள்ள மேலதிகாரிகள் ஒரு சிறிய தவறுக்காக உங்கள் மீது கோபப்படுவார்கள். அதன் காரணமாக உங்கள் நம்பிக்கையும் குறையும். வணிகர்களின் ஏதாவது ஒரு வேலை பாதியில் தடைபடுவதால் நிதி இழப்பு சாத்தியமாகும். பெற்றோரை மரியாதையுடன் நடத்துங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். இன்று ஏதாவது பெரிய செலவுகளைச் செய்ய வேண்டும் என்ற மனநிலையில் நீங்கள் இருந்தால், அதற்கு இன்று சரியான நாள் அல்ல. ஆரோக்கியமாக இருக்க, உங்கள் தினசரி வழக்கத்தில் யோகா மற்றும் தியானத்தை சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மனரீதியாகவும் வலுவாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்:4

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

துலாம்

துலாம்

நீங்கள் அரசு வேலைக்கு முயற்சித்து கொண்டிருந்தால் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. தனியார் நிறுவன ஊழிர்களும் முன்னேற்றத்தை அடையலாம். உங்களுக்கு உயர் பதவி கிடைக்கலாம். சிறு வணிகர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக அமையும். உங்கள் நிதி நிலை மேம்படும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருந்தால், அவற்றிற்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். தேவையில்லாமல் கவலைப்படுவது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். அதே போல் உங்கள் பிரச்சனைகளையும் அதிகரிக்கும். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதே போல் உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு வாயு, அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:05 மணி முதல் மாலை 4 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

நீங்கள் அலுவலகத்தில் உயர் பதவியில் இருந்து முக்கியமான திட்டத்தில் பணிபுரிபவராக இருந்தால், உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் உங்கள் நடத்தை சரியாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். சிறிய விஷயங்களுக்கு கோபப்படுவதைத் தவிர்க்கவும். அதே போல் இன்று பிறருடன் பேசும்போது வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். உணவு, பானங்கள் தொடர்பான வேலைகளைச் செய்பவர்கள் இன்று நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இரும்பு வியாபாரிகளுக்கும் இன்று எதிர்பார்த்த பலன் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களுடனான உறவு வலுவடையும். பழைய சொத்து சம்பந்தமான விஷயம் உங்களை நீண்ட நாட்களாக தொந்தரவு செய்து கொண்டிருந்தால், இன்று உங்களுக்கு பெரிய நிம்மதி கிடைக்கும். உங்கள் நிதி நிலையும் மேம்படும். உங்களுக்கு கல்லீரல் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், உணவில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்:18

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மாலை 3:05 மணி வரை

தனுசு

தனுசு

இன்று வணிகர்களுக்கு மிகவும் நல்ல அறிகுறிகளைக் கொடுக்கும். குறிப்பாக நீங்கள் மருந்து வியாபாரம் செய்தால், இன்று உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சோர்வாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளின் பட்டியல் அதிகரிக்கலாம். அதே போல் இன்று நீங்கள் வேலை தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், நீங்கள் புத்திசாலித்தனமாக செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல உறவைப் பேண முயற்சி செய்யுங்கள். தேவையற்ற விஷயங்களில் சந்தேகப்படுவதைத் தவிர்க்கவும். இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும். நீங்கள் மிகவும் நன்றாக உணருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 மணி முதல் மதியம் 12:45 மணி வரை

மகரம்

மகரம்

பொருளாதார கண்ணோட்டத்தில் இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். குறைந்த முயற்சியில் நல்ல வெற்றியைப் பெறலாம். உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வேலையைப் பற்றி பேசினால், உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் முதலாளியின் சகவாசம் கிடைக்கும். உங்கள் நேர்மறை எண்ணத்தைப் பார்த்து, இன்று முதலாளி உங்களை மிகவும் ஈர்க்கப்படுவார். விரைவில் நீங்களும் பெரிய முன்னேற்றம் அடையலாம். வியாபாரிகள் தங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன்களைப் பெறுவார்கள். இன்று நீங்கள் சில புதிய யுக்திகளையும் செய்யலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். உங்கள் பெற்றோர் நலமாக இருந்தால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். உங்கள் அன்புக்குரியவர்கள் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்:41

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12:55 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்றைய நாள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் அன்பான நாளாக இருக்கும். உங்கள் துணையுடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உங்களது இந்த பயணம் மறக்க முடியாததாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நிறைய செலவு செய்யலாம். வேலையைப் பற்றி பேசினால், உத்தியோகஸ்தர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்காது. உங்கள் சில வேலைகள் இன்று முழுமையடையாமல் இருக்கும். இப்படி தொடர்ந்து அலட்சியமாக இருந்தால், வரும் நாட்களில் உங்கள் மீது பணிச்சுமையை உணரலாம். தொழிலதிபர்கள் பண விஷயத்தில் அவசரப்படுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக நீங்கள் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால், கவனமாக சிந்தித்து உங்கள் முடிவை எடுங்கள். இன்றைய நாள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். அதே போல், உங்கள் உணவுப் பழக்கத்திலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:4

அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மாலை 3:45 மணி வரை

மீனம்

மீனம்

இன்று வணிகர்களுக்கு மிகவும் நல்ல அறிகுறிகளைக் கொடுக்கும். திடீர் விற்பனை அதிகரிப்பால் நல்ல லாபம் கிடைக்கும். இன்று நீங்கள் நேர்மறையாக இருப்பீர்கள். மேலும் உங்கள் எல்லா வியாபார முடிவுகளையும் மிகவும் புத்திசாலித்தனமாக எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் இந்த நேரத்தில் எந்தவித மாற்றத்தையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக நீங்கள் வேலைக்காக வெளிநாடு செல்ல விரும்பினால், அவசரமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் செலவுகளின் பட்டியலைக் குறைத்தால், விரைவில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், வானிலை மாற்றத்தால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்:20

அதிர்ஷ்ட நேரம்: காலை 5 மணி மணி முதல் காலை 11 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 18 May 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 18 May 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Tuesday, May 17, 2022, 19:16 [IST]
Desktop Bottom Promotion