Today Rasi Palan 15 December 2022: இன்று இந்த ராசிக்காரர்கள் கடினமான சவாலையும் எளிதாக கையாளுவார்கள்...

இன்றைய நாள் மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 15ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 15 December 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 15ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்றைய நாள் வேலையின் அடிப்படையில் சிறந்த நாளாக இருக்கும். குறிப்பாக உங்கள் தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டால் இந்த நேரம் சாதகமாக இருக்கும். நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்த பொன்னான வாய்ப்பைப் பெறலாம். இன்று உங்களுக்கு பிடித்த திட்டத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் கடினமாக உழைப்பது நல்லது. நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படும். வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு நெஞ்செரிச்சல், அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். அலட்சியமாக இருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 8:15 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்களின் முடிக்கப்படாத வேலைகள் அனைத்தும் குறித்த நேரத்தில் முடிவடையும். உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். வருமானம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படும். தொழிலதிபர்கள் புதிதாக கூட்டு வியாபாரம் தொடங்கவிருந்தால், இன்று உங்கள் திட்டங்கள் முன்னேறி செல்லும். நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், எந்த ஒரு பெரிய தொகையையும் யோசிக்காமல் செலவு செய்யாதீர்கள். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று கூர்மையான பொருட்களை கவனமாக பயன்படுத்தவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இன்று அலுவலகத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். இன்று உங்கள் பாதையில் ஒரு பெரிய தடை ஏற்படலாம். பாதகமான சூழ்நிலைகளில் நம்பிக்கையுடன் இருங்கள். வியாபாரிகள் லாபம் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் இயல்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் மனதில் ஏதேனும் குழப்பம் இருந்தால், இன்று உங்கள் எண்ணங்களை அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இன்று பண விஷயத்தில் மிகவும் விலை உயர்ந்த நாளாக இருக்கும். இன்று எதிர்பாராத பெரிய செலவுகள் வீட்டில் ஏற்படலாம். நிதி நெருக்கடியைத் தவிர்க்க, வரவு செலவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று சுமாரான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வயலட்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசியத்தை உணர்வீர்கள். நீங்கள் தேவையான மாற்றங்களையும் செய்யவும் வாய்ப்புள்ளது. கலை, ஃபேஷன், ஊடகம் போன்றவை தொடர்பான வேலை செய்பவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் தற்போதைய வேலையை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்டால், உங்களுக்கு நெருக்கமானவர்களின் முழு ஆதரவையும் பெறலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், உங்கள் உடற்சோர்வு குறையும் மற்றும் நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 45

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இன்று பொருளாதாரக் கண்ணோட்டத்தில் உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. பணப்பற்றாக்குறையால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். வரும் நாட்களில் இந்த கடின உழைப்புக்கு ஏற்ற பலனாக பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. சிறு தொழில் செய்பவர்கள் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறலாம். நீங்கள் பங்குகளை அதிகரிக்க திட்டமிட்டிருந்தால், இந்த நேரம் அதற்கு பொருத்தமானது. வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை, தேவையற்ற கவலைகளிலிருந்து விலகி இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:25 மணி முதல் இரவு 9 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, உங்களின் தேவையில்லாத கோபங்கள் வீட்டின் சூழலை கெடுத்துவிடும். மேலும், இது உங்கள் குழந்தைகளுக்கும் மோசமான விளைவை ஏற்படுத்தும். பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிந்தித்து செயல்பட்டால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் பதவி உயர்வு பெறலாம் அல்லது உங்கள் வருமானம் அதிகரிக்கலாம். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறலாம். குறிப்பாக நீங்கள் ரியல் எஸ்டேட் சம்பந்தமாக வேலை செய்தால், இன்று உங்களுக்கு பெரிய ஒப்பந்தம் உறுதி செய்யப்படும். இன்றைய நாள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறந்த நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் முக்கியமான சில வேலைகளை மேலதிகாரி உங்களிடம் ஒப்படைத்திருந்தால், அதைப் பற்றி யாரிடடும் அதிகம் பேச வேண்டாம். இது தவிர, எந்த ஒரு வேலைக்கும் மற்றவர்களை நம்பாமல் இருந்தால் நல்லது. தொழிலதிபர்களுக்கு முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். எதிர்காலத்தில் நீங்கள் சரியான முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், உங்கள் நிதி முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் தினமும் தியானம் செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இன்று வருமானத்திற்கு அதிகமாக செலவுகள் இருக்கும். இப்படியே அலட்சியமாக நடந்து கொண்டால், பெரும் சிக்கலில் சிக்க நேரிடும். இன்று மாணவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். இதெல்லாம் உங்கள் கடின உழைப்பின் பலன். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகச் சூழல் சாதகமாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் எல்லா வேலைகளையும் முழு ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். இன்று மேலதிகாரி கூட உங்களைப் புகழ்வார். தொழிலதிபர்கள் இன்று கவனமாக இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான எந்த பரிவர்த்தனையும் செய்யாமல் இருந்தால் நல்லது. வாழ்க்கைத் துணையிடம் தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்படுவதைத் தவிர்க்கவும். உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 44

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று உங்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தின் பலத்தால், அனைத்து சவால்களையும் சமாளிக்க முடியும். வீடாக இருந்தாலும் சரி, பணியிடமாக இருந்தாலும் சரி, உங்கள் பொறுப்புகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். உங்கள் ஆலோசனைகளுக்கு மேலதிகாரி அதிக முக்கியத்துவம் கொடுப்பார். வர்த்தகர்களின் பொருளாதார நிலையில் ஏற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. நீங்கள் சமீபத்தில் ஏதேனும் முதலீடு செய்திருந்தால், அதன் மூலம் இரட்டிப்பு பலன்களைப் பெறலாம். வீட்டுச் சூழலில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. அன்புக்குரியவர்களுடன் உங்கள் உறவை வலுப்படுத்த உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெறலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு ஒவ்வாமை அல்லது தொற்று இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, இன்று வானிலை மாற்றத்தால் உங்கள் உடல்நிலை மோசமடையலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. குளிர்ச்சியான பொருட்களைத் தவிர்க்க வேண்டும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். தடைப்பட்ட பண வரவைப் பெறலாம். புதிய வருமான ஆதாரம் உண்டாகும். வேலையைப் பற்றிப் பேசும்போது, ​​அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை வைத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். அவர்களின் ஆலோசனையை நீங்கள் பின்பற்ற வேண்டும். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் சாதாரண நாளாக இருக்கும். எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு முக்கியமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் கூடுதல் பணிகள் ஒதுக்கப்பட்டால், தயங்காமல் செய்து முடிக்கவும். உங்களின் கடின உழைப்புக்கு விரைவில் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம் அல்லது உங்கள் வருமானமும் அதிகரிக்கலாம். வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். நீங்கள் திருமணமானவராக இருந்தால், இன்று உங்கள் திருமண வாழ்க்கையில் ஒரு புதிய அழகான திருப்பம் ஏற்படலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், நீங்கள் சோர்வாகவும் பலவீனமாகவும் உணரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 மணி முதல் இரவு 8 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, இன்று அலுவலகத்தில் உங்கள் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருக்கும். மேலதிகாரியும் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீங்கள் பெரிய முன்னேற்றம் அடையலாம். வியாபாரிகள் இன்று எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம். உங்களுக்கு நல்ல நிதி பலன்கள் கிடைக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும். நாளின் இரண்டாம் பகுதியில், உங்களுக்கு பணம் கிடைக்கு வாய்ப்புள்ளன. உங்கள் முயற்சி வெற்றியடையலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்கள் அன்றாட வழக்கத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, December 15, 2022, 5:00 [IST]
Desktop Bottom Promotion