For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் யாரிடமும் எதையும் எதிர்பார்த்திட வேண்டாம்...

|

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்டு 15ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால்ள, இன்று நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு உங்களுக்காக கூடுதல் நேரத்தைப் பெறலாம். தொழிலதிபர்களின் வியாபாரம் வேகமாக முன்னேறும். நீங்கள் பங்குச் சந்தை தொடர்பான வேலைகளைச் செய்தால், இன்று நீங்கள் மிகப்பெரிய நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும். தேவையற்ற விஷயங்களுக்காக உங்கள் துணையுடன் சண்டையிடுவதைத் தவிர்க்கவும். குழந்தை மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்:11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று அமைதியான நாளாக இருக்க விரும்பினால், முதலில் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்களின் கோபத்தினால் வீட்டின் சூழலைக் கெடுப்பது மட்டுமின்றி நீங்கள் செய்யும் வேலைகளையும் கெடுத்துவிடும். ஆன்மீகத்தின உதவியை நாடுவது உங்களுக்கு நேர்மறை ஆற்றலைக் கொடுக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பதவி உயர்வு பற்றிய கனவு கண்டால், இன்று உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரிகளும் எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம். பொருளாதார ரீதியாக, இன்று கலவையான முடிவுகளைத் தரும். பண வரவு நன்றாக இருக்கும். ஆனால், திடீரென்று ஒரு பெரிய செலவு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 9:30 மணி வரை

மிதுனம்

மிதுனம்

இன்று உங்களுக்கு வேலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழிவதிபர்களுக்கு அவர்களின் ஏதேனும் முக்கியமான ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம். இது தவிர, நீங்கள் உங்கள் வணிகத்தை வளர்க்க விரும்பினால், நீங்கள் விரைவில் வெற்றியைப் பெறலாம். இன்று, உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளுடன் உரையாடும் போது தங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடனான உறவில் அன்பும் பற்றும் அதிகரிக்கும். உங்கள் துணையின் உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். மாலை நேரத்தில் சில இனிமையான செய்திகள் கிடைத்து மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:18

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் மதியம் 2 மணி வரை

கடகம்

கடகம்

இன்று மாணவர்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். நீங்கள் ஒரு வேலையைத் தேடி, சமீபத்தில் ஒரு பெரிய நிறுவனத்திற்கு நேர்காணல் கொடுத்திருந்தால், இன்று உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் விஷயங்கள் சாதாரணமாக இருக்கும். நீங்கள் கூட்டுக் குடும்பத்தில் வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு போதுமான நேரத்தை வழங்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணைக்காக நீங்கள் ஏதாவது சிறப்பாக செய்ய விரும்பினால், அதற்கு இன்று சரியான நாள். ஆரோக்கியமாக இருக்க, உங்கள் வழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்:26

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்று வியாபாரிகளின் பெரிய கவலைகள் அனைத்தும் நீங்கும். தடைப்பட்ட உங்களின் பணி மீண்டும் தொடங்கப்படலாம். உத்தியோகஸ்தர்கள் சோம்பேறத்தனத்தை கைவிட வேண்டும். அலுவலகத்தில் சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டே இருந்தால், தவறான விளைவை சந்திக்க வேண்டி வரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்பு அதிகரிக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் விலைமதிப்பற்ற ஒன்றை வாங்க உங்கள் மனதை தயார் செய்யலாம். இன்று உங்கள் மனதில் பல கவலைகள் இருக்கும். அதனால் நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பீர்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலுவாக இருக்க தினமும் யோகா மற்றும் தியானம் செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்:27

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:45 மணி முதல் மாலை 4:30 மணி வரை

கன்னி

கன்னி

இன்று மன அழுத்தத்தில் இருந்து விலகி நிம்மதியாக நாளைக் கழிப்பீர்கள். வேலையில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் சிறந்த செயல்திறனைக் கருத்தில் கொண்டு, உங்கள் பதவி உயர்வுக்கு உயர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள். உங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். அதே நேரத்தில், வணிகர்களும் பெரிய பயனடையலாம். இன்று நீங்கள் சில பெரிய வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளலாம். குடும்ப வாழ்க்கையில் விஷயங்கள் சாதாரணமாக இருக்கும். சின்னச் சின்ன பிரச்சனை வந்தாலும், அன்பானவர்களின் உதவியால் அதைச் சமாளித்து விடுவீர்கள். இன்று, நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஒருவருக்கு ஒருவர் உள்ள குறைகளை களைய முயற்சி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:20 மணி முதல் மாலை 6 மணி வரை

துலாம்

துலாம்

இன்று நீங்கள் மனதளவில் அதிக அழுத்தத்தை உணர்வீர்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டும். நிச்சயமாக நீங்கள் நன்றாக உணருவீர்கள். வேலையைப் பற்றி பேசினால், இன்று வணிகர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். எதிர்பாராமல் பயணம் செய்ய நேரிடலாம். எப்படியானாலும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். உத்தியோகஸ்தர்களின் சில முக்கியமான நிலுவையில் உள்ள பணிகள் இன்று முடிக்கப்படலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் நிறைய சேமிக்க முடியும். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், உங்கள் கல்வியில் சில தடைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்:5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இது புதிய விஷயங்களைத் தொடங்குவதற்கு சாதகமான நேரம். எனவே உங்கள் மனதில் இருந்து அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் அகற்றவும். கடினமாக உழைத்து முன்னேறுங்கள். காதல் விஷயத்தில் இன்று நல்ல அறிகுறியைக் கொடுக்கும். நீங்கள் இன்று ஒரு காதல் முன்மொழிவைப் பெறலாம். ஆனால் கடந்த காலத்தில் காதலில் சந்தித்த துரோகம் உங்களை முன்னேற அனுமதிக்காது. திருமண வாழ்வில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத்துணையுடன் இணக்கம் கெடலாம். வேலையைப் பற்றி பேசும்போது, ​​​​அலுவலகத்தில் முதலாளியின் வார்த்தைகளைப் புறக்கணிக்காதீர்கள். இந்த நேரத்தில் செய்யும் ஒரு சிறிய கவனக்குறைவின் விளைவு கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பை வீணாக்கிவிடும். வியாபாரிகள் புதிய வேலை தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:20

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் இரவு 9 மணி வரை

தனுசு

தனுசு

நீங்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. திடீரென்று உங்கள் உடல்நலம் குறையலாம். எந்த வித அலட்சியமும் காட்டாமல் இருப்பது நல்லது. பணத்தைப் பற்றி பேசும்போது, தேவையில்லாமல் அதிகரிக்கும் செலவுகள் உங்களுக்கு பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். சிந்திக்காமல் செலவு செய்வதைத் தவிர்க்கவும். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் கலவையான நாளாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் தகராறு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்:35

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் மாலை 3:40 மணி வரை

மகரம்

மகரம்

இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் துணையுடன் சில விசேஷ தருணத்தைச் செலவிடுவீர்கள். இன்று உங்கள் மனநிலை மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் மிகவும் வேடிக்கையாக இருப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் காதல் நிறைந்ததாகவே இருக்கும். உங்கள் துணையுடன் நல்லுறவு மேம்படும். பொருளாதார ரீதியாக, இன்று சிறப்பாக இருக்கும். இருப்பினும், பண விஷயத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். கடந்த சில நாட்களாக உங்கள் உடல்நிலை குறித்து கவலைப்பட்டால், இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்:8

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:50 மணி முதல் மதியம் 12:05 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்றைய நாளின் ஆரம்பம் உங்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஆனால், படிப்படியாக நிலைமை சீராகும். இன்று வேலையின் அடிப்படையில் பரபரப்பான நாளாக இருக்கும். ஆனால் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வியாபாரிகளின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவையும் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். மற்றவர்களைக் கவர அதிக பணம் செலவழிப்பதைத் தவிர்க்கவும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பரபரப்பான வழக்கத்தால் நீங்கள் சோர்வாக உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்:15

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மாலை 3:15 மணி வரை

மீனம்

மீனம்

பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாள் அல்ல. உழைத்து சம்பாதித்த பணம் பயனற்ற காரியங்களில் வீணாகலாம். பணம் சம்பந்தமான எந்த வேலையையும் அவசரப்பட்டு செய்யாமல் இருப்பது நல்லது. வேலையின் அடிப்படையில் இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, நல்ல வெற்றியைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமற்றதாக இருக்கும். வீட்டில் தகராறு ஏற்படலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று உங்களுக்கு தொண்டை தொடர்பான பிரச்சனை இருக்கலாம். குளிர்ச்சியான பொருட்கள் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்:3

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:05 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Today Rasi Palan - 15 August 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 15 August 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Monday, August 15, 2022, 5:00 [IST]
Desktop Bottom Promotion