For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக முடிவுகளை எடுக்க வேண்டும்...

இன்று கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்டு 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 14 August 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்டு 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று, உங்கள் வாழ்க்கைத் துணையின் மனநிலை இன்று நன்றாக இருக்காது. ஒரு சிறிய விஷயத்தில் உங்களுக்கு தகராறு ஏற்படலாம். அலுவலகத்தில் வீண் பேச்சு, வதந்திகளில் இருந்து விலகி இருங்கள். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயற்சிக்க வேண்டும். இன்று பொருளாதார ரீதியாக நல்ல நாள். உங்கள் நிதி முயற்சிகள் வெற்றியடையும். பயணம் செய்வதற்கு இன்றைய நாள் ஏற்றதல்ல. குறிப்பாக நீண்ட பயணங்களைத் தவிர்க்கவும். இது உங்களைச் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர வைக்கும். நாளின் இரண்டாம் பாதியில் திடீர் பிரச்சனை வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்:7

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் நிறைய செலவழிக்கும் மனநிலையில் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் உணர்வுடன் வேலை செய்ய வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில மனஅழுத்தம் இருக்கும். சில குடும்ப பிரச்சனைகளுக்கு நீங்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், அது உங்கள் வேலையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். தொழிலதிபர்களின் முக்கியமான வேலைகள் சில காலம் பாதியில் நின்று போனால், இன்று உங்களின் வலுவான தன்னம்பிக்கை இந்த வேலையில் உங்களுக்கு வெற்றியைத் தரும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இரவில் தாமதமாக தூங்கும் பழக்கத்தை மாற்றவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்:12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:40 மணி முதல் மாலை 6:10 மணி வரை

மிதுனம்

மிதுனம்

அலுவலகத்தில் இன்று சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தகவல்தொடர்பு திறன் மற்றும் உங்கள் புத்திசாலித்தனம் ஆகியவற்றால், நீங்கள் பெரிய வெற்றியை அடையலாம். இன்று நிதி ரீதியாக நீங்கள் முன்னேறலாம். பண விஷயத்தில், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் கடினமாக உழைத்து சம்பாதித்த பணம் உங்கள் கையை விட்டு எளிதில் நழுவிவிடும். வாழ்க்கைத்துணையுடன் தகராறு ஏற்படலாம். உங்களின் ஆடம்பர செலவால் அன்பானவர்கள் மிகவும் கோபப்படுவார்கள். இன்று வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். இல்லையெனில், ஒரு சிறிய விஷயம் பெரிய பிரச்சனையை வரவழைக்கும். மாலையில் சில நல்ல செய்திகளின் வருகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பரபரப்பான நாளாக இருந்தாலும் இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:15

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் இரவு 7:40 மணி வரை

கடகம்

கடகம்

இன்றைய நாள் பண விஷயத்தில் உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நீங்கள் ஒரு புதிய வருமான ஆதாரத்தைப் பெறலாம். அதே போல் நாளின் இரண்டாம் பாதியில் பெரிய நிதி ஆதாயமும் உண்டு. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டாம். உங்கள் குழந்தைகளால் இன்று சில பிரச்சனைகள் வரலாம். இன்று அவரது உடல்நிலை குறித்து நீங்கள் கவலைப்படலாம். வேலையில் சூழ்நிலை இன்று நன்றாக இருக்காது. நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்ய விரும்ப மாட்டீர்கள். அதுதவிர, நீங்கள் எதிர்மறையான ஆற்றலை உணருவீர்கள். வியாபாரிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மன அமைதியை நீங்கள் பராமரிக்க விரும்பினால், அதிகமாக கவலைப்படுவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:11

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் காலை 11:30 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்று நீங்கள் மனதளவில் மிகவும் நன்றாக இருப்பீர்கள். இன்று நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சில முக்கியமான விவாதங்களை நடத்தலாம். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். குறிப்பாக நீங்கள் தனிமையில் இருந்தால் இன்று உங்கள் காதல் வாழ்க்கை தொடங்கும். நீங்கள் வேலையில் நல்ல வெற்றியைப் பெறலாம். வணிகர்கள் தங்கள் எதிரிகளை சுலபமாக வென்றிடலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 33

அதிர்ஷ்ட நேரம்: காலை 5:20 மணி முதல் மாலை 3:05 மணி வரை

கன்னி

கன்னி

இன்று அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும். உங்கள் சொந்த அடையாளத்தை உருவாக்கும் உங்கள் கனவு இன்று நிறைவேறும். இவை அனைத்தும் உங்களின் தொடர் முயற்சி மற்றும் கடின உழைப்பின் பலன். உங்கள் தொழிலை மேலும் உயர்த்துவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்கள் காதல் வாழ்க்கையைப் பற்றி பேசினால், உங்கள் துணையின் தவறான புரிதல்களை அகற்ற இதுவே சரியான நேரம். உங்கள் கருத்தை அவர்கள் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. திருமணமானவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும். உங்கள் பணம் நீண்ட காலமாக எங்காவது தேங்கி இருந்தால், இன்று நீங்கள் பெரும் நிவாரணம் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதாரண நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்:20

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:00 மணி முதல் காலை 11:30 மணி வரை

துலாம்

துலாம்

இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடனான கசப்பான உறவுகளால் நீங்கள் சற்று மனச்சோர்வடைந்திருப்பீர்கள். உங்களுக்கிடையில் உள்ள நீண்டகால கருத்து வேறுபாடுகள் ஒருவரையொருவர் விலக்கி வைக்கின்றன. உங்கள் உறவுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்குவது மற்றும் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒன்றாக தீர்வு காண்பது நல்லது. வேலையில் இன்று உங்களுக்கு நல்ல நாள். இன்று நீங்கள் உங்கள் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். யாரையும் குறை சொல்ல வாய்ப்பளிக்க மாட்டீர்கள். உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இருப்பினும், நீங்கள் லாட்டரி மற்றும் பந்தயங்களில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் நீங்கள் இழக்க நேரிடும். இன்றைய பயணம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 3:20 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

காதலைப் பொறுத்தவரை இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். இன்று நீங்கள் அதிக காதல் மனநிலையில் இருப்பீர்கள். இன்று உங்கள் துணையுடன் நீங்கள் ஒரு புதிய இடத்திற்குச் செல்வது சாத்தியமாகும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் சமீபத்தில் யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால், இன்று நீங்கள் அதை திரும்பப் பெற முடியும். வணிகர்களைப் பொறுத்தவரை, உங்கள் கூட்டாளருடன் ஏதாவது ஒரு சர்ச்சை ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் அதிகம் கோபப்படாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் இழப்பு உங்களுக்குத்தான். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு இருக்கும். இன்று சில செல்வாக்கு மிக்கவர்களின் ஒத்துழைப்பு உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். இன்று உடல்நிலை நன்றாக இருக்கும். இருப்பினும் உங்கள் உணவில் அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்:21

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 10:00 மணி வரை

தனுசு

தனுசு

தொழிலதிபர்கள் வேலை சம்பந்தமாக பயணம் செய்யப் போகிறார்கள் என்றால், உங்களின் முக்கிய ஆவணங்களை பத்திரமாக வைத்திருக்க மறக்காதீர்கள். நீங்கள் கவனக்குறைவாக இருந்தால், உங்களின் இந்த பயணம் உங்கள் நேரத்தை மட்டும் வீணடிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். இன்று உங்களுக்காக கூடுதல் நேரம் கிடைக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் இணக்கம் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். உங்கள் உடன்பிறப்பால் சில பிரச்சனைகள் வரலாம். சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உங்களுக்குள் விரிசலை உண்டாக்கும். இந்த விஷயத்தில், நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். உங்களைக் கட்டுக்கோப்பாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள, தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதே போல் சத்தான உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:7

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

மகரம்

மகரம்

வேலையில் இன்று உங்களுக்கு நல்ல நாள் இல்லை. நீங்கள் உங்கள் வேலையில் கவனம் செலுத்த முயற்சிக்கவில்லை என்றால், இன்று உங்கள் உயர் அதிகாரிகள் உங்கள் மீது கோபப்படலாம். வணிகர்கள் குறுக்கு வழிகளில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். நிதி ரீதியாக, இன்று உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு தேடி வரும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்களால் உங்கள் வாழ்க்கைத் துணை வருத்தப்படலாம். உங்கள் நடத்தை மற்றும் வார்த்தைகளில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மனதில் ஏதேனும் இருந்தால், அதை உங்கள் அன்புக்குரியவருடன் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளலாம். நாளின் இரண்டாம் பகுதியில், நீங்கள் உறவினர் அல்லது நண்பரின் வீட்டிற்குச் செல்லலாம். இன்று உங்கள் உடல்நிலை மிகவும் சிறப்பாக இருக்கும் மற்றும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:55 மணி முதல் மாலை 6:50 மணி வரை

கும்பம்

கும்பம்

பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாள். திடீர் நிதி ஆதாயங்களால், உங்கள் நிதி நிலை வலுப்பெறும். உங்கள் தந்தை உங்களுடன் சற்று மகிழ்ச்சியற்றவராக இருப்பார். உங்களின் எந்த முடிவையும் அவர்கள் ஏற்காமல் இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் நிதானமாக செயல்பட வேண்டும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான அனைத்து சர்ச்சைகளையும் அகற்ற முயற்சிக்கவும். காதல் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் உறவில் வெளிப்படைத்தன்மையை வைத்திருங்கள். எந்த வகையிலும் பொய் சொல்ல வேண்டாம். வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி பெறலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். மாலையில் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்:21

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் இரவு 7:20 மணி வரை

மீனம்

மீனம்

வேலையில், இன்று நீங்கள் ஏமாற்றத்தை உணரலாம். நீங்கள் எதிர்பார்த்த முடிவைப் பெறவில்லை என்றால், நேர்மறையாக இருங்கள். நீங்கள் கடினமாக உழைத்து, உங்களின் சிறு சிறு தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அன்பும் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். சிலர் உங்கள் தாராள மனப்பான்மையைப் பயன்படுத்தி உங்களை முட்டாள்தனமான வார்த்தைகளில் சிக்க வைக்க முயற்சிப்பார்கள். நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக வேலை செய்ய வேண்டும். இன்று பண இழப்புக்கான அறிகுறிகள் இருப்பதால் நிதி விஷயத்தில் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுங்கள். உங்கள் உடல்நிலை குறித்து அலட்சியமாக இருக்காதீர்கள். உங்களுக்காகவும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:40 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 14 August 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 14 August 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Saturday, August 13, 2022, 18:26 [IST]
Desktop Bottom Promotion