Latest Updates
-
ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்!
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் அலுவலகத்தில் சுறுசுறுப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது...
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 12ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 12ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
உங்களின் எந்த ஒரு முக்கியமான வேலையும் நீண்ட நாட்களாக அலுவலகத்தில் முடங்கிக் கிடக்கும் பட்சத்தில் இன்று அது முடிவடைய வாய்ப்பு அதிகம். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் பிரச்சனைகள் தீரும். இன்று வியாபாரிகளுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். நீங்கள் ஒரு பெரிய ஆர்டரை பெறலாம். வெற்றியை அடைய, நீங்கள் முழு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். செலவகளின் பட்டியலைக் குறைப்பதன் மூலம் நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கசப்பான மற்றும் இனிமையான சச்சரவுகள் இருக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:45 மணி முதல் இரவு 9:30 மணி வரை

ரிஷபம்
இன்று உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஒருவரின் மனதைப் புண்படுத்தும் வகையில் நகைச்சுவைக்காக கூட எந்த செயலையும் செய்யாதீர்கள். இன்று நீங்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் பணம் திருடு போகவோ அல்லது இழக்கப்படவோ வாய்ப்புள்ளது. உங்கள் வேலையைப் பற்றி பேசுகையில், அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைவில் முடிக்க முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் இன்று உங்கள் முதலாளி உங்களை மிகவும் கண்டிப்பாக நடத்துவார். வியாபாரிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படக்கூடும். இருப்பினும், இந்த நேரத்தில் அவர்கள் ஓய்வில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்:25
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

மிதுனம்
வணிகர்கள் ஒரு இக்கட்டான திட்டத்தில் சிக்கிக் கொள்ளலாம். இது உங்களுக்கு பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும். உங்கள் முக்கிய வணிக முடிவுகளை எடுக்கும்போது அவசரப்பட வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். தேவையற்ற விஷயங்கள் பற்றி பேசி உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும். உங்களுக்குள் இருக்கும் திறமையை நீங்கள் அடையாளம் காண வேண்டிய நேரமிது. இன்றைய நாள் உங்களுக்கு பண விஷயத்தில் மிகவும் நல்ல நாளாக இருக்கும். உங்கள் சேமிப்பு தொகை அதிகரிக்கலாம். இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் புதிய வாகனம் அல்லது சொத்து வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் போன்றவை இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 34
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை

கடகம்
நீங்கள் அலுவலகத்தில் உயர் பதவியில் பணிபுரிகிறீர்கள் என்றால், இன்று உங்களை நீங்களே கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களின் தவறுக்காக அதிகமாக கோபப்படுவதைத் தவிர்க்கவும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் சில பெரிய சவால்களைச் சந்திக்க நேரிடும். இருப்பினும், உங்கள் புரிதலின் மூலம் இந்த சிரமத்தை நீங்கள் எளிதில் சமாளிக்க முடியும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடும். வீட்டில் எந்த ஒரு உறுப்பினரிடம் இருந்தும் நல்ல செய்தி கிடைப்பதால் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செலவழித்து சேமிப்பில் கவனம் செலுத்தினால், விரைவில் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்காது. இன்று உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்:4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:05 மணி முதல் இரவு 8:55 மணி வரை

சிம்மம்
இன்று சில காரணங்களால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். அத்தகைய தவறை நீங்கள் தவிர்க்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு இனிமை கிடைக்கும். தொழிலதிபர்களின் எந்தவொரு பெரிய பிரச்சனையும் தீர்க்கப்படும். அதே போல் இன்று நீங்கள் தடைப்பட்ட லாபத்தையும் பெறுவீர்கள். உங்கள் அலுவலகத்தில் சூழல் நன்றாக இருக்கும். இன்று வேலைப்பளுவும் குறையும். நிதி நிலையில் சரிவு ஏற்படலாம். பண இழப்புக்கான அறிகுறிகள் உள்ளன. நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் எதிர்கால திட்டங்களில் சில தடைகள் இருக்கலாம். ஆரோக்கியமாக இருக்க, அதிகரித்து வரும் உடல் எடையைக் கட்டுப்படுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:05 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

கன்னி
உங்கள் உடனடி கவனம் தேவைப்படும் சில தீவிரமான குடும்ப பிரச்சனைகள் உள்ளன. அலட்சியம் தீங்கு விளைவிக்கும் என்பதை அந்த பிரச்சனைகள் நிரூபிக்கலாம். இந்த முக்கியமான விஷயங்களை இன்று வீட்டில் உள்ளவர்களிடம் விவாதிப்பது நல்லது. சில நாட்களாக உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அவர்களை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். முடிந்தால், இன்று மருத்துவரை அணுகவும், அதே போல் அவர் ஓய்விலும் கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். திடீரென்று உங்கள் மீது பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது தவிர, உங்கள் முதலாளி உங்களுக்கு கடினமான பணியை ஒதுக்கலாம். நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் உயர் அதிகாரிகளின் உதவியையும் நீங்கள் பெறலாம். தொழிலதிபர்கள் இன்று தேவையில்லாமல் அலைய வேண்டி இருக்கும். மொத்தத்தில் இன்று உங்களுக்கு மிகவும் சோர்வான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

துலாம்
வேலையின் அடிப்படையில் இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. விரைவில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் ஒரு வர்த்தகர் மற்றும் ஒரு பெரிய திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கான இந்த நேரம் சரியானது. குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். நீங்கள் அவர்களுக்கு சில அத்தியாவசிய பொருட்களை வாங்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன், உங்களின் எந்த முக்கியமான வேலையையும் செய்து முடிக்க முடியும். ஒருவருக்கொருவர் அன்பும் மரியாதையும் அதிகரிக்கும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

விருச்சிகம்
அலுவலகத்தில் உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் ரகசிய தகவல்களை சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். இன்று ஒரு சட்ட விவகாரம் வியாபாரிகளை தொந்தரவு செய்யலாம். உங்களின் முக்கியமான வேலை பாதியில் நிற்கும் வாய்ப்புள்ளது. இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். இன்று நீங்கள் பழைய கடனை திரும்ப செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் வீட்டின் சுற்றுப்புறத்தை அமைதியாக வைத்திருக்க, உங்கள் வீட்டிற்கு வெளியே உள்ள பதற்றத்தை உள்ளே கொண்டு வரக்கூடாது. உங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படலாம். அதிக கவலை உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்:10
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை

தனுசு
காதல் விஷயத்தில் இன்று உங்களுக்கு மிகவும் சர்ச்சைக்குரிய நாளாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் மூன்றாம் நபர் தலையிட அனுமதிக்காமல் இருந்தால் நல்லது. நீங்கள் ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு தாமதமாக சென்றால், இந்த பழக்கத்தை சீக்கிரம் மாற்ற முயற்சிக்கவும். இல்லையெனில், அது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். வியாபாரிகளுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். குறைந்த முயற்சியில் நல்ல வெற்றியைப் பெறலாம். உங்கள் நிதி நிலை வலுவடையும். முன்னோர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் ஆஸ்துமா பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், வானிலை மாற்றத்தால் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

மகரம்
இன்று நீங்கள் மிகவும் வேடிக்கையான மனநிலையில் இருப்பீர்கள். நீங்கள் உங்கள் நண்பர்களுடன் வெளியே செல்லலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு, நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும், நன்றாகவும் உணர்வீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். நிதி விஷயங்களில், தந்தையின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வேலையைப் பற்றி பேசுகையில், அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்களைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் உங்கள் வேலையைப் பாதிக்கலாம். அது உங்கள் பெயரையும் மோசமாக பாதிக்கும். வணிகர்கள் அரசு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நீங்கள் சிறிய தவறு செய்தால், நீங்கள் நஷ்டம் அடையலாம். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்:15
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

கும்பம்
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் உடன்பிறப்பின் திருமணத்தில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால், இன்று அந்த பிரச்சனை தீர்ந்து அவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். உங்கள் பெற்றோரின் ஆசியைப் பெறுவீர்கள், அவர்கள் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கலாம். உங்கள் எல்லா வேலைகளையும் விரைவாக முடிக்க முயற்சிப்பது நல்லது. வணிகர்கள் சிறிய நிதி ஆதாயங்களைப் பெறலாம். நாளின் இரண்டாம் பகுதியில், நீங்கள் ஒரு வழிபாட்டு தலத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மனதளவில், நீங்கள் மிகவும் நன்றாக உணருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை

மீனம்
பங்குச் சந்தை தொடர்பான பணிகளைச் செய்பவர்கள், இன்று பெரிய நிதி ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது. அதே சமயம், நிதித்துறையில் வேலை செய்பவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய வேலையில் சேர்ந்திருந்தால், அலுவலகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த பொன்னான வாய்ப்பைப் பெறலாம். உங்கள் கடின உழைப்பு மற்றும் நேர்மறையான செயல்பாடு உங்கள் உயர் அதிகாரிகளால் பெரிதும் பாராட்டப்படும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் பொழுதுபோக்கிற்காக கொஞ்சம் பணம் செலவழிக்கலாம். உங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் அலட்சியமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு நாளும் உங்கள் மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை



Click it and Unblock the Notifications











