For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் அதிகப்படியான கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது...

இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்டு 12ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 12 August 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்டு 12ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கலவையான நாளாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில், நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. சில சந்தர்ப்பங்களில் நீங்கள் ஏமாற்றத்தையும் உணரலாம். முதலில், உங்கள் வேலையைப் பற்றி பேசினாம், உத்தியோகஸ்தர்கள் நிலுவையில் உள்ள வேலையை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், முதலாளி சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம். வணிகர்கள் இன்று முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், உங்கள் நெருங்கியவர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே உங்கள் முடிவை எடுப்பது நல்லது. சில குடும்ப உறுப்பினர்களுடனான உறவில் விரிசல் ஏற்படலாம். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

வணிகர்கள் இன்றைய தினம் பெரிய முதலீடுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இது தவிர, எந்த ஒரு புதிய வேலையைத் தொடங்கும் முன்பு, பழைய நிலுவையில் உள்ள பணிகளை முதலில் முடிக்கவும். இல்லையெனில், உங்கள் மீதான அழுத்தம் அதிகமாகலாம். அலைச்சல் மற்றும் எரிச்சலில் நீங்கள் கவனக்குறைவாகவும் இருக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்றைய நாள் மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் ஒரு பெரிய திட்டத்தில் பணிபுரிந்தால், இன்று உங்கள் வேலையை முடிக்க முடியும். உங்கள் கடின உழைப்பை மேலதிகாரி பாராட்டுவார். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். உடன்பிறந்தோரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், நீங்கள் கவலையிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 40

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

மிதுனம்

மிதுனம்

வேலையுடன், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தைச் செலவிட முயற்சிக்கவும். நீங்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒன்றாக அதிக நேரம் செலவிட வேண்டும். அப்போது தான் உங்கள் உறவு மேலும் வலுவாக இருக்கும். நிதிக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு நல்ல அறிகுறியைக் கொடுக்கும். நீங்கள் திடீர் பண வரவைப் பெறலாம். வேலையைப் பற்றி பேசும்போது, உத்தியோகஸ்தர்கள் தங்கள் முக்கியமான ஆவணங்களை அலுவலகத்தில் பத்திரமாக வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று அவற்றைத் தவறவிடுவது உங்கள் வேலைக்கு தடையாக இருக்கலாம். அதே நேரத்தில் முதலாளி உங்கள் மீது கோபப்படக்கூடும். வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை

கடகம்

கடகம்

இன்று வணிகர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் செய்த முதலீடுகளின் சரியான பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலை வலுவடையும். அதே போல் உங்கள் வணிகமும் வேகமாக முன்னேறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் நேர்மறை ஆற்றலால் சூழப்பட்டிருப்பீர்கள். அதே போல் உங்கள் தன்னம்பிக்கை உயர் அதிகாரிகளையும் முதலாளியையும் பெரிதும் ஈர்க்கும். இன்று பண விஷயத்தில் கொஞ்சம் விலையுயர்ந்ததாக இருக்கக்கூடும். இருப்பினும், பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. இன்று வீட்டில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், பழைய உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:12

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 12:50 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்றைய நாள் உங்களுக்கு வேலை அடிப்படையில் மிகச் சிறந்த நாளாக இருக்கும். உயர் அதிகாரிகள் உங்களின் பணித்திறனைக் கண்டு மிகவும் ஈர்க்கப்படுவார்கள். மேலும் உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளின் வியாபாரத்தில் பெரிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. நீங்கள் சமீபத்தில் ஏதேனும் புதிய வேலையை ஆரம்பித்திருந்தால், இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களிடையே அன்பும் ஒற்றுமையும் நிலவும். இன்று நீங்கள் உங்கள் உயர் அதிகாரிகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பண விஷயத்தில் இன்று நன்றாக இருக்கும். உற்சாகத்தின் பேரில் வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். உங்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் இருந்தால், கவனக்குறைவாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:55 மணி முதல் மாலை 6:50 மணி வரை

கன்னி

கன்னி

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும். காலையில் சில நல்ல செய்திகள் கிடைத்து மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் உணர்வீர்கள். வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடனான உறவில் நல்லிணக்கம் இருக்கும். அவர்களுக்கு வழிகாட்டும் வாய்ப்பும் கிடைக்கும். அரசு ஊழியர்களின் வருமானம் உயரும் வாய்ப்புகள் அதிகம். வியாபாரிகளின் எந்த பெரிய பிரச்சனையும் தீர்க்கப்படும். இன்று உங்களின் அனைத்து வேலைகளும் நீங்கள் திட்டப்படி முடிவடையும். பொருளாதார நிலை மேம்படும். இன்று நீங்கள் சில மதிப்புமிக்க பொருட்களையும் பெறலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்களுக்கு மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: காலை 5:25 மணி முதல் மதியம் 2:15 மணி வரை

துலாம்

துலாம்

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். குழந்தை மூலம் சில பிரச்சனை வர வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் மிகவும் கவலைப்படுவீர்கள். இருப்பினும் நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. விரைவில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணலாம். இன்று உங்களுக்கு பண விஷயத்தில் அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும். அதிகப்படியான செலவு காரணமாக உங்கள் நிதி நிலை சமநிலையற்றதாக இருக்கலாம். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சித்தால் நல்லது. வேலை பற்றி பேசினால் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். எனவே, நீங்கள் நேரத்தைக் கண்காணிக்க வேண்டும். திட்டமிட்டபடி அனைத்து வேலைகளையும் செய்து முடித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் லாபம் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியம் குறையலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 3:15 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று உங்கள் வீட்டின் சூழ்நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தோர் விஷயமாக வெளியூர் செல்ல நினைத்தால் இன்று நல்ல சலுகை கிடைக்கும். பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். இன்று நீங்கள் நல்ல புரிதலுடன் பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள். வேலையைப் பற்றி பேசும்போது, உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களை அதிகம் நம்புவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்களின் இந்த பழக்கம் வரும் நாட்களில் உங்களை சிக்கலில் தள்ளும். தொழிலதிபர்கள் இன்று சில சவால்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சிந்திக்காமல் எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தால், இன்று உங்கள் பிரச்சனை அதிகரிக்கக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்:29

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 6:20 மணி வரை

தனுசு

தனுசு

இன்று பழைய சொத்து சம்பந்தமான பிரச்சனை தீரும். நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுதலை பெறலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். பரபரப்பான கால அட்டவணை காரணமாக, இன்று நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு போதுமான நேரத்தைக் கொடுக்க முடியாது. தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில் வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இன்றைய நாள் மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் ஒரு புகழ்பெற்ற நபரைச் சந்திக்கலாம். நீங்கள் புதிதாக கூட்டு வியாபாரம் தொடங்கப் போகிறீர்கள் என்றால், இன்று உங்கள் திட்டம் தொடரும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இரவில் லேசான உணவை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்:11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9:30 மணி வரை

மகரம்

மகரம்

மாணவர்கள் தங்கள் படிப்பிலும் தேர்விலும் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில் அது கடினமாகிவிடும். குடும்ப வாழ்க்கையில் பதற்றமான சூழ்நிலைகள் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் உங்களுக்கு தகராறு ஏற்படலாம். இன்று நீங்கள் ஒருவருக்கு ஆலோசனைகளை வழங்குகிறீர்கள் என்றால், நீங்கள் இந்த வேலையை மிகவும் கவனமாக செய்ய வேண்டும். வேலையில் இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். மேலும், உங்கள் நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். வியாபாரிகள் சில வேலைகளை செய்து முடிப்பதற்காக நீண்ட நாட்களாக கடினமாக உழைத்தால், இன்று நீங்கள் வெற்றி பெறலாம். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், நீங்கள் சரியான நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை

கும்பம்

கும்பம்

வியாபாரிகள் இன்று எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம். இன்று உங்கள் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பீர்கள். இவை அனைத்தும் உங்கள் சரியான முடிவுகளின் விளைவு. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவார்கள். இன்று உங்களுக்கு முக்கியமான விவாதம் கூட நடக்கலாம். நிதி நிலை வலுவடையும். பணம் தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். இன்று வீட்டில் உள்ளவர்களுடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இது தவிர, இன்று நீங்கள் நிறைய பொருட்களை உங்களுக்காக வாங்கலாம். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதன் தாக்கம் உங்கள் வேலையிலும் காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை

மீனம்

மீனம்

இன்று வியாபாரிகளுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். விரைவான லாபம் ஈட்ட, நீங்கள் தவறான பாதையைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் பெரிய சிக்கலில் சிக்கலாம். நீங்கள் கடினமாக உழைத்தால் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். சிறு விஷயத்துக்காக வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். பண விஷயத்தில் இன்று கலக்க வாய்ப்புள்ளது. புத்திசாலித்தனமாக செலவு செய்தால் பெரிய பிரச்சனை இருக்காது. உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், கவனக்குறைவால் சில நாள்பட்ட நோய்கள் வெளிப்படும். உடல்நலக் குறைவால் சில பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்:37

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:25 மணி முதல் இரவு 10 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 12 August 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 12 August 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Thursday, August 11, 2022, 19:34 [IST]
Desktop Bottom Promotion