Just In
- 29 min ago
குரு-சனி உருவாக்கும் அகண்ட சாம்ராஜ்ய யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 49 min ago
நீங்க டீ அல்லது காபியை சூடா குடிக்கிறீங்களா? அப்ப உங்களுக்கு இந்த புற்றுநோய் வர அதிக வாய்பிருக்காம்!
- 1 hr ago
சாணக்கிய நீதியின் படி உங்க வீட்டில் இந்த அறிகுறிகள் இருந்தால் கெட்ட நேரம் உங்களை நெருங்கிவிட்டதாம்...ஜாக்கிரதை
- 2 hrs ago
கொலஸ்ட்ரால் மற்றும் பிபி-க்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'வெங்காய டீ'.. அதைத் தயாரிப்பது எப்படி?
Don't Miss
- News
45 நொடிகளில்.. கண்முன் கொடூரம்.. அதிகாலையில் ஓடிய மக்கள்.. துருக்கி நிலநடுக்கத்தில் நடந்தது என்ன?
- Movies
இந்த நடிகை யாருனு தெரியுதா? அடையாளமே தெரியாமல் மாறிய விஷால் பட நடிகை!
- Automobiles
இப்படியொரு சூப்பரான ஆடி கார் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கவே இல்ல!! ரூ.2 லட்சத்தில் புக் பண்ணிடலாம்!
- Sports
தரமான செய்கை இருக்கு.. ஹர்பஜனின் முக்கிய சாதனையை உடைக்கும் அஸ்வின்.. ஆஸி, தொடரில் பெரும் வாய்ப்பு!
- Finance
அதானி குழுமத்திற்கு அடுத்த அடி.. ஸ்டாண்டர்டு சார்ட்டர்டின் கவலையளிக்கும் அறிவிப்பு!
- Technology
டிஜிட்டல் கேமராக்களுக்கு வேலை இருக்காது போலயே: சோனி கேமராவுடன் அறிமுகமான 2 புதிய Vivo போன்கள்.!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Today Rasi Palan 10 December 2022: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண பிரச்சனையால் கவலைகள் அதிகரிக்கும்...
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 10ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று அலுவலகத்தில் மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் வார்த்தைகளை மிகவும் சிந்தனையுடன் பயன்படுத்தவும். குறிப்பாக பெண் சக ஊழியர்களுடன் பேசும் போது கூடுதல் கவனம் தேவை. இன்று வணிகர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். விரைவில் உங்கள் தொழிலில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். பண விஷயத்தில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் இன்று திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம். அலட்சியமாக இருக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று வேலை தொடர்பான உங்கள் கவலை சற்று அதிகரிக்கலாம். உங்களின் வேலைகளில் சில தடைபடுவதால் உங்களுக்கு நிறைய நஷ்டம் ஏற்படலாம். நீங்கள் உங்கள் வேலையை விட்டுவிட்டு சொந்தமாக தொழிலைத் தொடங்க விரும்பினால், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமற்றதாக இருக்கும். வீட்டில் உள்ள ஒருவரின் உடல்நிலை திடீரென மோசமடையக்கூடும். இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், மன அழுத்தம் அதிகரிக்கும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்று ஆன்மீகத்தின மீதான உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலை மேம்படும். சொத்து சம்பந்தமான பலன்கள் உண்டாகும். தங்கள் முன்னோர் தொழிலில் ஈடுபடுபவர்கள், அவசரப்பட்டு முக்கியமான முடிவை எடுக்க வேண்டாம். பெரியவர்களுடன் கலந்தாலோசித்த பிறகே உங்கள் முடிவை எடுப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். இன்று நீங்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தேவையற்ற பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படும். இன்று நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறீர்கள். வேலையில் கடினமாக உழைத்தும், முன்னேற முடியவில்லை என்றால், நீங்கள் சரியான திசையில் முயற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆபத்தான எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று உடல்நிலை பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 9:00 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று உங்கள் துணையுடன் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்களுக்கிடையில் இருந்த மனக்கசப்புகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும், எந்த பெரிய செலவும் செய்ய இன்றைய நாள் பொருத்தமானது அல்ல. நீங்கள் அவசர அவசரமாக உங்கள் நிதி முடிவுகளை எடுத்தால், சிக்கலில் சிக்கக்கூடும். அலுவலகத்தில் எந்த வித அலட்சியமும் வேண்டாம். முதலாளி உங்களுக்கு ஒரு பணியை ஒதுக்கியிருந்தால், அதை கவனமாக முடிக்க முயற்சிக்கவும். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் மிகவும் சவாலான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருங்கள். குறிப்பாக, உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் பிரச்சனை இருந்தால் உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 9 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்கள் மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். இன்று உங்களுக்கு மன நிலை நன்றாக இருக்காது. எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் சில ஆலோசனைகளை வழங்கினால், அவர்களின் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதீர்கள். வணிகர்கள் விரைவான லாபம் ஈட்டுவதற்கு குறுக்குவழிகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் நீங்கள் சிக்கலில் சிக்கக்கூடும். நிதி நிலை நன்றாக இருக்கும். பணம் சம்பந்தமான வேலைகள் அனைத்தும் இன்று சுமூகமாக முடிவடையும். ஆரோக்கியமாக இருக்க போதுமான ஓய்வு பெற வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்கள் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்று நீங்கள் உங்களுக்காக மதிப்புமிக்க ஒன்றை வாங்கலாம். வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். இன்று வேலையில் குறைவாக ஈடுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரிகளின் பொருளாதார நிலையில் ஏற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் கடின உழைப்புக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மாலை 3 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்றைய நாளின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் நிச்சயம் நன்றாக உணருவீர்கள். இன்று உங்களுக்காக போதுமான நேரம் கிடைக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும் செலவைக் குறைத்து, சேமிப்பில் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு விரைவில் உங்கள் நிதிப் பிரச்சனைகள் தீரும். வேலை தொடர்பான புதிய முயற்சிகளில் வெற்றி பெறலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வீண் வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்று நீங்கள் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் குடும்ப சூழலால் மன அழுத்தத்தைப் பெறலாம். புத்திசாலித்தனமாக வேலை செய்யவில்லை என்றால், விஷயம் பெரிதாகலாம். பணத்தைப் பற்றிய உங்கள் கவலை அதிகரிக்கலாம். உங்கள் நிதி முயற்சியின் தோல்வி மிகவும் ஏமாற்றமளிக்கும். இருப்பினும், உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். விரைவில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். வேலையில், இன்று உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். இன்று நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க கடினமாக உழைக்கவும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2:05 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று வீட்டில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் உங்கள் நெருங்கியவர்களின் பாசத்தையும் ஆதரவையும் பெறுவீர்கள். வேலையைப் பற்றிப் பேசினால், உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் முதலாளியின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களின் அனைத்து வேலைகளையும் முழு ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். தொழிலதிபர்கள் இன்று சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். உங்கள் வணிகத் திட்டங்களிலும் மாற்றங்களைச் செய்யலாம். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பண பிரச்சனையால் உங்கள் கவலை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வானிலை மாற்றத்தால், உங்கள் ஆரோக்கியம் மோசமடையலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:45 மணி முதல் மதியம் 12 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று எந்த முக்கிய முடிவாக இருந்தாலும் நீங்களே எடுங்கள். மற்றவர்களை அதிகம் சார்ந்திருக்காதீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை அதிகமாக நம்புவது சரியாக இருக்காது. வியாபாரிகளுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், இன்று சில தடைகளை சந்திக்கலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமற்றதாக இருக்கும். இன்று உங்கள் உடன்பிறப்புடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்களுக்கு பல் வலி தொடர்பான பிரச்சனை ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 மணி முதல் மதியம் 12 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே, கலை, ஊடகம், ஃபேஷன் போன்றவை தொடர்புடையவர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். நீங்கள் வெளிநாடு சென்று வேலை செய்ய வேண்டும் என்று கனவு கண்டால், உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் துணையின் வித்தியாசமான ரூபத்தைக் காணலாம். நாளின் இரண்டாம் பகுதியில் நீங்கள் ஒரு சிறிய பயணம் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் பயணம் வேலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 37
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:25 மணி முதல் காலை 10 மணி வரை