For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணம் திருடு போக வாய்ப்புள்ளது. உஷார்...

இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 09 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 09 March 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 09 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

குடும்பத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. வீட்டில் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் நீங்கள் அதிக அழுத்தத்தை உணர முடியும். நீங்கள் அதிகம் கவலைப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம். தொழிலதிபர்களின் சிரமங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. வியாபாரத்தில் வேகம் குறைவதால், பல எதிர்மறை எண்ணங்கள் இன்று மனதில் தோன்றலாம். இருப்பினும், வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். உங்கள் பங்கில் கடினமாக உழைக்கவும். விரைவில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரணமாக இருக்கும். இன்று நீங்கள் பண விஷயத்தில் அதிர்ஷ்டமானதாக இருக்கும். குறைந்த முயற்சியில் நல்ல பணத்தைப் பெறலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்கள் பரபரப்பான வழக்கத்திலிருந்து உங்களுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி முதல் இரவு 9:45 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். இன்று உங்கள் அன்புக்குரியவர்களுடன் போதுமான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக உங்கள் பெற்றோரின் ஆதரவு மற்றும் ஆசீர்வாதத்துடன், நீங்கள் நேர்மறையாக உணருவீர்கள். இன்று வீட்டில் ஒரு சிறிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்படலாம். உங்கள் வேலையைப் பற்றி பேசினால், வியாபாரிகளின் தடைபட்ட வேலைகள் இன்று முடியும். நாளின் இரண்டாம் பாதியில் நிதி ஆதாயம் சாத்தியமாகும். இன்று வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். சொத்து சம்பந்தமான வேலைகளைச் செய்பவர்களுக்கு பெரிய ஒப்பந்தங்கள் செய்ய வாய்ப்பு கிடைக்கும். பண விஷயத்தில் இன்று நன்றாக இருக்கும். உங்கள் நிதி நிலை வலுப்பெறலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், குளிர்ச்சியான விஷயங்களைத் தவிர்க்க உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்:17

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் இரவு 8:05 மணி வரை

மிதுனம்

மிதுனம்

உத்தியோகஸ்தர்களுக்கு, குறிப்பாக வங்கித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது, இந்த நேரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது. உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று அலுவலகத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் வணிகம் இரண்டு மடங்கு வேகமாக வளரும். இதுமட்டுமின்றி, இன்று ஒரு பெரிய நேர்மறையான மாற்றமும் வரலாம். பண விஷயத்தில் இன்று நன்றாக இருக்கும். இன்று நீங்கள் ஏதேனும் நிதி பரிவர்த்தனை செய்யப் போகிறீர்கள் என்றால், அவசரப்படுவதைத் தவிர்க்கவும். கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், நீங்கள் முழங்கால் வலியால் சிரமப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் இரவு 9:25 மணி வரை

கடகம்

கடகம்

வியாபாரிகளுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். உங்கள் வேலை தானியம், மரம், மருந்துகள் போன்றவற்றுடன் தொடர்புடையதாக இருந்தால், நீங்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். போக்குவரத்து தொடர்பான வேலை செய்பவர்களும் இன்று எதிர்பார்த்த முடிவுகளைப் பெறலாம். உங்கள் பணியில் இருந்துவந்த தடைகள் நீங்கும். நீண்ட நாட்களாக அரசு வேலைக்காக கடினமாக உழைத்துக்கொண்டிருந்த உங்களுக்கு இன்று நல்ல செய்தி கிடைக்கும். இதெல்லாம் உங்கள் கடின உழைப்பின் பலன். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாள் அல்ல. தேவையில்லாத விஷயங்களுக்கு நிறைய பணம் செலவழிக்கலாம். இருப்பினும், அத்தகைய தவறைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் சிக்கலில் சிக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஆழமாகலாம். இன்று உங்களுக்குள் சண்டை ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ரீதியாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க, நீங்கள் மன ரீதியாகவும் வலுவாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 37

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் இரவு 7:55 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. முதலில், உங்கள் வேலையைப் பற்றி பேசினால், வணிகர்களின் பொருளாதார நிலையில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். இன்று நீங்கள் தடைப்பட்டிருந்த முக்கியமான வேலைகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உங்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவார்கள். உங்கள் நம்பிக்கையும் அதிகரிக்கும். உங்கள் வீட்டின் சூழல் மேம்படும். அன்புக்குரியவர்களுடனான உறவில் இடைவெளி குறையும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மனதை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்கள் துணையுடன் அத்தகைய நேரத்தை செலவிடுவதன் மூலம் நீங்கள் மிகவும் நன்றாக உணர முடியும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்வீர்கள். ஆரோக்கியமாக இருக்க, உங்கள் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்:5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை

கன்னி

கன்னி

இன்று உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தொழிலதிபர்கள் உங்களின் வேலையைப் பற்றி பேசினால், நிதி இழப்பு ஏற்படலாம். உங்களின் முக்கியமான வேலைகள் எதிலும் அரசாங்கத் தடைகள் இருக்கலாம். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகள் உங்களை மிகவும் கடுமையாக நடத்துவார்கள். இன்றே வேலையை விட்டுவிடுவதற்கும் நீங்கள் முடிவு செய்யலாம். இருப்பினும், அவசரப்பட்டு இதுபோன்ற முடிவுகளை எடுக்காமல் இருந்தால் நல்லது. பண விஷயத்தில் இன்று கலங்க வாய்ப்புள்ளது. உங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்தால் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. நிதி பரிவர்த்தனைகளுக்கு இன்று நல்ல நாள் அல்ல. உங்கள் வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் உடல்நலக் குறைவு நாள் முழுவதும் உங்கள் திட்டங்களைத் தடுக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 39

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

துலாம்

துலாம்

இன்றைய நாள் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும் நாளாக இருக்கும். இன்று வேலையில் உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் அதிகரிக்கக்கூடும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டில் எந்த ஒரு உறுப்பினரின் உடல்நிலை சரியில்லை என்றால், இன்று அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவுகள் வரலாம். உங்கள் அன்புக்குரியவருடன் சிறிய விஷயங்களுக்கு வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். இதுபோன்ற விஷயங்கள் உங்கள் உறவை பலவீனப்படுத்தலாம். பணம் தொடர்பான கவலைகள் தொந்தரவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நல்ல நாள் அல்ல. திடீரென்று உங்கள் உடல்நலம் குறையலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். மனதளவில் நீங்கள் மிகவும் நன்றாக இருப்பீர்கள். அதே போல் உடல் ரீதியாகவும் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தொழிலதிபர்களுக்கு உங்கள் வேலையைப் பற்றி பேசினால் லாபம் அதிகரிக்கும். இன்று திடீரென்று நீங்கள் பெரிய லாபம் ஈட்டலாம். இது தவிர, கடந்த காலத்தில் ஏற்பட்ட பெரிய இழப்பை ஈடுசெய்யும் வாய்ப்பைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். மேலும், இன்று முன்னேற பொன்னான வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்கள் வீட்டின் சூழல் மிகவும் நன்றாக இருக்கும். இந்த நாள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக கழியும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

தனுசு

தனுசு

உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் எதையும் பேசாதீர்கள். நிதி தொடர்பான வேலை செய்பவர்களுக்கு இன்றைய நாள் சவாலான நாளாக இருக்கும். நீங்கள் நஷ்டத்தில் சிக்கலாம். இன்று அவசரப்பட்டு எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் இன்று நல்ல பலன்களைப் பெறலாம். உங்களின் பதவி உயர்வு பற்றிய தகவல்களை அலுவலகத்தில் பெறலாம். நேர்மறையாக இருந்து, தொடர்ந்து கடினமாக உழைக்கவும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நெருங்கிய நபரின் உதவியுடன், கூடுதல் வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:40 மணி முதல் மாலை 3:00 மணி வரை

மகரம்

மகரம்

அதிகரித்து வரும் மன இறுக்கம் காரணமாக, உங்கள் இயல்பிலும் எரிச்சல் காணப்படும். இன்று சில இனம் அறியாத பயம் உங்களை வாட்டக்கூடும். இருப்பினும், கடினமான சூழ்நிலைகளில், உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள், ஏதேனும் போட்டித் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், இன்று சில நல்ல செய்திகளைப் பெறலாம். பொருளாதார நிலை சீரழிவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இன்று உங்கள் பணம் தொலைந்து போகலாம் அல்லது திருடு போகலாம். உத்தியோகஸ்தர்களின் வேலையைப் பற்றி பேசுகையில், அலுவலகத்தில் கவனமாக இருப்பது நல்லது. அங்கும் இங்கும் அதிகம் பேசாதீர்கள். இது தவிர சக ஊழியர்கள் பிரச்சனையில் அதிகம் தலையிடுவதைத் தவிர்க்கவும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இன்று உடல்நிலை நன்றாக இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை

கும்பம்

கும்பம்

எந்தவொரு பெரிய திட்டத்திலும் முதலீடு செய்வதற்கு முன்பு வணிகர்கள் கவனமாக சிந்திக்க வேண்டும். இது தவிர லாட்டரி, பந்தயம் போன்றவற்றில் இருந்து விலகி இருந்தால் நல்லது. உத்தியோகஸ்தர்கள் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க முயற்சிக்க வேண்டும். உங்கள் கவனக்குறைவே பிரச்சனைகளை அதிகரிக்கலாம். உங்கள் வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். இன்று உங்களுக்கு விருப்பமான உணவுகளை உண்ணும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். உங்கள் துணைக்கு ஒரு ஆச்சரியத்தைத் திட்டமிட விரும்பினால், இன்று அதற்கு நல்ல நாள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் பொழுதுபோக்கிற்காக கொஞ்சம் பணம் செலவழிக்கலாம். இது தவிர, இன்று நிதி ரீதியாகவும் நீங்கள் தேவைப்படும் ஒருவருக்கு உதவலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 13

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 12:25 மணி வரை

மீனம்

மீனம்

நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்து, ஒரு புதிய தொழிலைத் தொடங்க விரும்பினால், உங்கள் வழியில் இருந்தவந்த சட்டரீதியான தடைகள் இன்று முடிவுக்கு வரும். விரைவில் உங்கள் திட்டம் நிறைவேறும். அலுவலகத்தில் சக பெண்களுடன் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பிரச்சனையில் மாட்டிக்கொள்ளலாம். உங்கள் கட்டுபாடற்ற பேச்சினால் இன்று உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படலாம். இன்றைய நாள் பண விஷயத்தில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். இருந்தாலும் அது பெரிய பிரச்சனையாக இருக்காது. இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் துணையின் விருப்பமான இடத்திற்கு நீங்கள் அவர்களை அழைத்து செல்லலாம். ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். அதே போல் வெளி உணவையும் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் காலை 11:30 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 09 March 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 09 march 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Tuesday, March 8, 2022, 23:13 [IST]
Desktop Bottom Promotion