For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan 06 December 2022: இன்று இந்த ராசிக்காரர்கள் கொடுக்கல் வாங்கல்களைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.

இன்றைய நாள் கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 06ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 06 December 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 06ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று அலட்சியத்தைத் தவிர்த்தால் நல்லது. அலுவலகத்தில் ஏதேனும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், அதை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். அலட்சியம் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்க செய்யும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த பணம், கிடைக்காததால் நீங்கள் மிகவும் ஏமாற்றமடையலாம். இன்று உங்கள் பேச்சில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். பெரியவர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று உங்களுக்கு உடற்சோர்வு, தலைவலி போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2:05 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டு உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று, தந்தையின் உதவியுடன், தடைப்பட்ட சில வேலைகள் முடியும். பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். தேவையற்ற செலவுகளால் உங்கள் நிதி நிலை சமநிலையற்றதாக இருக்கும். வேலையின் அடிப்படையில் இன்று நல்ல நாளாக இருக்கும். இன்று உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். வேலையில் உயர் அதிகாரிகளின் சகவாசம் கிடைக்கும். இன்று நீங்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. சில நாட்களுக்கு உங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அலட்சியத்தைத் தவிர்த்து, உடனடியாக மருத்துவரை அணுகவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3:45 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இன்று குடும்ப பிரச்சனைகள் உங்கள் வேலையில் பாதிப்பை உண்டாக்கலாம். நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்வதில் அதிகம் கவனத்தை செலுத்த மாட்டீர்கள். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தேவையில்லாமல் உங்கள் பொன்னான நேரத்தை பிற விஷயங்களில் வீணாக்காதீர்கள். அமைதியான மனதுடன் உங்கள் முடிவுகளை எடுக்க முயற்சி செய்யுங்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் தங்கள் கூட்டாளருடன் நல்ல ஒருங்கிணைப்பை வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். ஆணவமும் மோதலும் உங்களுக்கு நஷ்டத்திற்கு வழிவகுக்கும். பணத்தின் அடிப்படையில் இன்று சராசரியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், நீங்கள் அதிகமாக டீ மற்றும் காபி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் மதியம் 2 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்று வணிகர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். தடைபட்ட ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று நீங்கள் சில அனுபவமிக்கவர்களின் ஆதரவையும் பெறலாம். உத்தியோகஸ்தர்களின் பணிச்சுமை குறையும். இன்று நீங்கள் நன்றாக உணருவீர்கள். இன்று உங்கள் மேலதிகாரியுடன் ஒரு முக்கியமான விவாதம் நடத்தலாம். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வாழ்க்கைத் துணையுடனான உறவில் இணக்கம் ஏற்படும். இன்று நீங்கள் ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உணவு முறையில் சில மாற்றங்கள் தேவை. இல்லையெனில், வயிறு தொடர்பான சில நாள்பட்ட நோய்கள் தோன்றக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:55 மணி முதல் மதியம் 2 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்களை தேடி சில நல்ல செய்திகள் வரக்கூடும். சமீபத்தில் ஏதேனும் போட்டியில் பங்கேற்றிருந்தால், இன்று உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நீங்கள் பெரிய வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். நாளின் இரண்டாம் பகுதியில் நீங்கள் திடீர் பண வரவைப் பெறலாம். அலுவலக சூழ்நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உங்கள் கடின உழைப்பு முதலாளியை ஈர்க்கலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். இன்று வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் இன்று நீங்கள் நன்றாக உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு நிதி நிலையில் நல்ல நாளாக இருக்கும். இருப்பினும், கடன் கொடுக்கல் வாங்கல்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் நிதி முடிவுகளைப் புத்திசாலித்தனமாக எடுங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அதிகம் புறம் பேசாதீர்கள். அது உங்கள் வேலையையும் பாதிக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். இல்லையெனில் நீங்கள் ஏமாற்றப்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவை நன்றாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். உடல்நலம் சம்பந்தமான பிரச்சனை வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6:30 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று வேலை அடிப்படையில் சிறப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியதாக இருக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் இன்று நல்ல நாள். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். நன்கு யோசித்து முடிவெடுத்தால், விரைவில் உங்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். வாழ்க்கைத் துணையுடன் சிறு விஷயத்தில் வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:55 மணி முதல் மதியம் 2 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நண்பர்களுடன் இனிமையாக நேரத்தை செலவிடுவீர்கள். நீங்கள் சில புதிய நண்பர்களையும் சந்திக்கலாம். அலுவலகத்தில் அதிகமாக கேலி செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் முதலாளியின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும். இது உங்கள் முன்னேற்றத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். வணிகர்கள் இன்று நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று புதிய வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் அக்கறை அதிகரிக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், அதிகரித்து வரும் மன உளைச்சல் காரணமாக இன்று உங்கள் உடல்நிலை பாதிக்கப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8:05 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்றைய நாள் குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று இளைய சகோதரர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் வேலை முழுமையடையாமல் இருந்தால், அதை இன்றே முடிக்க முயற்சி செய்யுங்கள். அலட்சியம் நல்லதல்ல. வணிகர்கள் பணம் தொடர்பான எந்தவொரு பரிவர்த்தனையையும் அவசரத்தில் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளின் இரண்டாம் பகுதியில், உறவினர்கள் சிலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்கள் கண்களை நன்றாக கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6:30 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, இன்று குடும்பத்தாருடனான உறவு மேம்படும். பேச்சுவார்த்தை மூலம் உங்களுக்கிடையே உள்ள மனகசப்பைக் குறைக்க முயற்சிக்கவும். பணத்தைப் பொறுத்தவரை, இன்று நல்ல நாளாக இருக்கும். நீங்கள் பெரிய செலவு செய்ய திட்டமிட்டால், அதைத் தவிர்க்க வேண்டும். வேலையைப் பற்றி பேசும்போது, ​​அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதீர்கள். அவர்கள் உங்களுக்கு வேலை தொடர்பான அறிவுரை வழங்கினால், அதை கேட்டு கொள்ளுங்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக நீங்கள் மரச்சாமான்கள், அழகுசாதனப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்றவை தொடர்பான வேலை செய்தால் உங்கள் வணிகம் வளர்ச்சியடையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:45 மணி முதல் இரவு 8:30 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்று பெரும் இழப்பை சந்திக்க நேரிடலாம். எனவே, எந்த செயலையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்யாமல், நன்கு யோசித்து செய்வது நல்லது. வணிகர்கள் அரசு விதிகளை மீறினால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் நேரத்தை அதிகம் கவனித்துக் கொள்ள வேண்டும். முதலாளி உங்களிடம் ஒரு முக்கியமான பொறுப்பை ஒப்படைத்திருந்தால், உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். இல்லையெனில், அந்த பொறுப்பை உங்களிடமிருந்து திரும்பப் பெறலாம். இன்றைய நாள் பணத்தின் அடிப்படையில் நல்ல அறிகுறி தென்படும். புதிய வருமான ஆதாரத்தை பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் புதிய உறுப்பினர் சேர்க்கை இருக்கக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:55 மணி முதல் இரவு 8:05 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, இன்று புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் ஒரே நேரத்தில் பல பணிகளைக் கையாள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இன்று பண விஷயத்தில் சாதாரணமாக இருக்கும். இந்த நேரத்தில் சேமிப்பில் அதிக கவனம் செலுத்தினால் நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் எதற்கும் உடன்படவில்லை என்றால், உங்கள் பக்கத்தை அமைதியாக முன் வைக்க முயற்சி செய்யுங்கள். சண்டைகள் மற்றும் தொந்தரவுகள் உங்கள் வீட்டின் சூழலைக் கெடுக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:15 மணி முதல் இரவு 9:50 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 06 December 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 06 December 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Tuesday, December 6, 2022, 5:35 [IST]
Desktop Bottom Promotion