Latest Updates
-
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-புதன்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாக் அடிக்கப்போகுது.. -
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏன் ஜிகர்தண்டாவை அவசியம் குடிக்கணும் தெரியுமா? -
ரம்ஜான் ஸ்பெஷல் திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026 IPL T20-யில் உள்ள டாப் 5 இளம் வீரர்கள்.. சிஎஸ்கே அணியிலும் ஒருவர் உள்ளார்.. யாருன்னு பாருங்க.. -
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பாவக்காயை இப்படி தொக்கு செய்யுங்க.. கசப்பே தெரியாது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க... -
இந்த சட்னியை தினமும் 2 ஸ்பூன் சாப்பிடுங்க.. உடம்பில் இரத்தமும் ஊறும்.. முடி உதிர்வும் குறையும்.. -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
பீர்க்கங்காய் வாங்குனா டக்குனு இந்த மாதிரி பருப்பு மசியல் செய்யுங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்! -
கோதுமை தோசையும்.. தக்காளி சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... தாறுமாறா இருக்கும்..
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்...
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். அக்டோபர் 05 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...
இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். அக்டோபர் 05 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...


மேஷம்
இன்றைய தினம் நீங்கள் பயமாகவும், சற்று குழப்பமாகவும் உணரலாம். உங்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது, நீங்கள் மிகவும் உறுதியாக இருக்க முயற்சிக்க வேண்டும். எனவே, யாரிடமாவது மனம் விட்டு பேசுவதன் மூலம் நீங்கள் சிறந்தது எது என்பதை தீர்மானிக்க உதவும். நீங்கள் வெற்றிபெற விரும்பினால் முதலில் ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்க வேண்டும். வணிகர்கள் இந்த நாளில் முதலீடு செய்யலாம். ஆனால் நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி மற்றும் மாலை 5:30 மணி

ரிஷபம்
இன்றைய தினம் நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடனும் இருக்க உதவும். இன்று எந்த விதமான சச்சரவு அல்லது விவாதங்களில் ஈடுபடாதீர்கள். அமைதியான மனதுடன், நேர்மறையாக யோசித்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த திட்டமிட்டால், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் அமைதியான முறையில் பேசி உங்கள் கருத்தை வெளிப்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ராயல் ப்ளூ
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி மற்றும் மதியம் 12:30 மணி

மிதுனம்
இன்று நீங்கள் அமைதியற்ற மனிநலையில் இருந்தால், சிறிது நேரம் மனம் விட்டு பேச வேண்டும். இது உங்களது நிறைய சிக்கல்களை தீர்க்கும். அமைதியற்ற மனநிலையில் எந்த முடிவையும் எடுக்காதீர்கள. இல்லையெனில் கிடைக்கும் வாய்ப்பு கை தவற வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் இன்று வேலையில் மிகவும் திறமையானர் என்பதை அனைவரிடமும் நிரூபிக்க முடியும். நீங்கள் எந்த புதிய தொழில் திட்டம் அல்லது வேலையைப் பெற மேற்கொள்ளலாம். அது உங்களுக்கு பெரிய வெற்றியை கொடுக்கும். உங்கள் உறவுகளில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பராமரிக்க குடும்ப முன்னணியில் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். இந்த நாளில் நீங்கள் நேர்மறை ஆற்றலையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:15 மற்றும் 3:15

கடகம்
இன்று உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கம் இருக்கும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் திருப்தியை உணரலாம். உங்கள் வாழ்க்கையில் இருந்த ஒரு பெரிய பிரச்சனை தீர்க்கப்படலாம். எதுவாக இருந்தாலும், இந்த மகிழ்ச்சியான சூழலில் உங்கள் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் நிச்சயம் நீங்கிவிடும். அலுவலகத்தில் உங்கள் நிலை உயர்ந்ததாக இருக்கும். இன்றைய தினம் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக கருதப்படுகிறது. எனவே உங்கள் தினசரி வழக்கத்திற்கு மாறாக புதிதாக எதையும் திட்டமிடுவதற்கு முன்பு பலமுறை சிந்தியுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சாம்பல்
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி மற்றும் மாலை 6:30 மணி

சிம்மம்
உங்களுக்கு ஆன்மீகப் பயிற்சிகள் மற்றும் முயற்சிகளில் ஆர்வம் அதிகரிக்கலாம். கடவுள் மீதான உங்களது நம்பிக்கை அதிகரித்து, தன்னம்பிக்கையும் உயருவதை உணரலாம். ஆலய தரிசனங்கள் உங்களுக்கு நிறைய நன்மைகள் மற்றும் மன அமைதியைத் தரும். இது உங்கள் ஆரோக்கிய நன்மைகளை அதிகரிக்க செய்யும். உங்கள் வீட்டின் சூழலும் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், நீங்கள் எந்தவொரு நோயிலிருந்தும் பாதுகாக்கப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கை தொடர்பான சில முக்கியமான முடிவுகளை எடுக்க இது ஒரு நல்ல நேரம்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

கன்னி
நீங்கள் எப்பொழுதும் போல் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். எனவே, அது உங்கள் பிரச்சனைகளை முற்றிலும் தீர்த்திடும். இன்றிரவு நீங்கள் உங்கள் நண்பர்களுடன் வெளியே செல்ல வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு, இந்த நேரம் உங்களுக்கு சரியான பொருத்தத்தைக் கண்டறிய சரியான நாளாக இருக்கும். எனவே, கூடிய விரைவில் உங்கள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் எந்தவிதமான முக்கிய முடிவுகளிலும் அவசரப்படாதீர்கள். ஏனெனில் இவை மனதின் பிரச்சனைகளை தீர்க்க சிறிது காலம் ஆகலாம். நீங்கள் முக்கியமான எதையும் செய்ய விரும்பினால் இன்று மிகவும் ஏற்ற நாளாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் ஒருபோதும் கவனக்குறைவாக இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 மணி மற்றும் பிற்பகல் 1:00 மணி

துலாம்
இந்த நாளில் நீங்கள் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். எனவே, உங்கள் வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்யலாம். அவ்வாறு செய்வது உங்களைப் பற்றி நீங்களே நன்றாக உணர வைக்கலாம். இன்றைய தினம் பிறருக்கு உதவ சிறிது நேரம் ஒதுக்குங்கள். இதன்மூலம், நீங்கள் நன்றாக உணருவீர்கள். ஒரு வேலையை முடிக்க மற்றவர்களிடமிருந்து அதிகம் உதவி எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில் அது உங்களின் தன்னம்பிக்கை குறைய செய்துவிடும். நீங்கள் முக்கியமான ஒன்றைச் செய்யத் திட்டமிட்டால், தாமதிக்காதீர்கள். அன்புக்குரியவரின் ஆதரவுடன் எதையும் துணிந்து செய்யும் தைரியத்தைப் பெறுவீர்கள். நீங்கள் நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கத்தைப் பழகி கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி மற்றும் மாலை 3:30 மணி

விருச்சிகம்
இன்று நீங்கள் குறுகிய மனநிலையுடன் இருப்பதை உணரலாம். எனவே அதைக் கட்டுப்படுத்துவது நல்லது. சிறிய விஷயங்களில் நீங்கள் விரக்தியையும் எரிச்சலையும் உணரலாம். வேலையிலோ அல்லது பொது இடத்திலோ எந்த எதிர்மறை எண்ணமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வருத்தமாக இருந்தால், உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டாம். அமைதியான மனதுடன் இருப்பது பிரச்சனைகளை துரத்திடும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவிட்டால் மனதளவில் நன்றாக இருக்க முடியும். இதனால் உங்களைச் சுற்றி நேர்மறையான அதிர்வுகள் இருக்கும். இன்று பிறருடன் வாக்குவாதம் செய்யாதீர்கள். உங்களை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அலுவலக வேலைப்பளு மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். எனவே, போதுமான ஓய்வு எடுப்பது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி மற்றும் மாலை 6:30 மணி

தனுசு
நீங்கள் ஒரு முக்கியமான பொது விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பைப் பெறலாம். இதுபோன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது, தற்போதைய தொற்று பரவலை கருத்தில் கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது. உங்கள் துறை சார்ந்த சாதனை மனிதரை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். இந்த சந்திப்பு உங்கள் எதிர்காலத்தில் நிச்சயம் உதவும். எதை காட்டிலும் உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலையே முக்கியம் என்பதை மறவாதீர்கள். தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பேசுகையில், உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி மற்றும் மாலை 6:00 மணி

மகரம்
இன்று நீங்கள் மிகவும் நிதானத்துடன் இருப்பீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள். நீங்கள் உங்கள் நண்பர்களுடன் நேரத்தை நன்கு அனுபவித்து மகிழ்வீர்கள். சமூக ரீதியாக உங்களுக்கு இன்று பரபரப்பான நேரமாக இருக்கும். திடீர் விருந்தினர் வருகையால் வீட்டின் சூழல் மிகவும் மகிழ்ச்சியாக மாறும். நீங்கள் அவர்களை உற்சாகத்துடன் வரவேற்று உபசரிக்க வேண்டும். ஏனெனில் அவர்களால் வீட்டின் பதற்றம் மறைந்து மகிழ்ச்சி கூடும். குடும்பம் பற்றிய உங்கள் மன அழுத்தமும் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 முதல் 7:00 வரை

கும்பம்
இன்று நீங்கள் என்றும் இல்லாத அளவிற்கு மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்களுக்கு கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் குழப்பமான சூழல் நிலவலாம். ஏனெனில் இன்று நிறைய மாற்றங்களை கொண்டு வர வேண்டியிருக்கும். ஆனால் இதிலிருந்து உடனே வெளிவந்து மனதை அமைதிப்படுத்துவது நல்லது. வணிகர்களுக்கு உங்கள் தொழில் எல்லைகளை விரிவுபடுத்தக்கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரலாம். புதிய முயற்சிகளுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்கள் உணவுப் பழக்கத்தைப் கட்டுப்பாட்டில் வைத்து, ஆரோக்கியமாக இருக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7:00 முதல் இரவு 8:00 வரை

மீனம்
இன்று, உங்கள் மனநிலை மற்றும் எண்ணங்களில் எதிர்மறையான விளைவு ஏற்படக்கூடும். உங்கள் அன்புக்குரியவர் அல்லது நெருங்கிய நண்பருடனான உறவு இன்று மோசமடைய வாய்ப்புள்ளது. எந்தவொரு கோபத்தையும் அல்லது எதிர்மறை உணர்ச்சிகளையும் கையாளுவதில் ஏற்படும் தவறுகளால் இன்றைய தினம் மோசமடையலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை நன்றாக இருக்கும். உறவுகளுக்கு இடையே நல்லிணக்கம் இருக்கும். உங்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் இடையிலான விஷயங்களைச் சிறப்பாக மாற்ற முயன்றளவு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நல்லிணக்கத்தை நோக்கி உங்களது முதல் அடியை எடுத்து வைக்க இன்று சிறந்த நாள். விட்டுகொடுத்து செல்வது உங்களது வாழ்வை பிரகாசமாக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் நேர்மறை ஆற்றல்களால் ஈர்க்கப்படுவீர்கள். ஆரோக்கியம் பற்றிய கவலைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சாம்பல்
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி மற்றும் மாலை 5:00 மணி



Click it and Unblock the Notifications











