Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
Today Rasi Palan 04 November 2022: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் ரொம்ப கவனமா இருக்கணும்...
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 04ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 04ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் முக்கியமான நாளாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. பணத்தைப் பொறுத்தவரை, இன்று சாதாரண நாளாக இருக்கும். பணம் தொடர்பான எந்தப் பரிவர்த்தனையையும் சிந்திக்காமல் செய்யாதீர்கள். வேலையைப் பொறுத்தவரை, பிஸியான நாளாக இருக்கும். அலுவலகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். வணிகர்கள் தங்களின் வேலையை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, காது தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று அலுவலக சூழல் நன்றாக இருக்கும். உயர் அதிகாரிகளின் மனநிலை நன்றாக இருக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வணிகர்களுக்கு இன்றைய தினம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்காது. தந்தையுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று நிலுவையில் உள்ள பணிகள் முடிக்கப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இருப்பினும் அதிக நம்பிக்கையைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகளுக்கு இன்றைய தினம் சவாலானதாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன் அமையும். நிதி நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே! தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, இன்று பொறுப்புகளின் சுமை அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். அதனால் கடன் வாங்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் எதை செய்வதற்கு முன்பும் நன்கு யோசித்த பின்னர் செய்யுங்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று உங்களுக்கு வயிறு தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரங்கள்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்களால் வேலையில் முழு கவனத்தை செலுத்த முடியும். நீங்கள் கடினமாக உழைத்தால், அதற்கு சிறப்பான பலன் கிடைக்கும். வியாபாரிகளின் தடைப்பட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். நாளின் இரண்டாம் பாதியில் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். பணம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உங்கள் நிதி நிலை மேம்படும். இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:50 முதல் இரவு 8:18 வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் உங்கள் கோபமானது இன்று பெரிய பிரச்சனையை உண்டாக்கும் வாய்ப்புள்ளது. வீட்டிலும், அலுவலகத்திலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலை பலவீனமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சோர்வு மற்றும் மன அழுத்தத்தால் ஆரோக்கியம் மோசமடையும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 12:55 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! வேலையைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வியாபாரிகள் பெரிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் சிறுசிறு விஷயத்திற்காக வாக்குவாதத்தில் ஈடுபடும் வாய்ப்புள்ளது. நிதியைப் பொறுத்தவரை, அதிர்ஷ்டமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் 2:30 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! நீங்கள் வணிகம் செய்பவராக இருந்தால், பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பொருளாதார ரீதியாக திருப்திகரமான நாளாக இருக்கும். இன்று சிறு சிறு செலவுகள் ஏற்படலாம். உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால், உணவில் அலட்சியமாக இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 40
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று வேலையைப் பொறுத்தவரை பிஸியான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் நடத்தை உங்களிடம் நன்றாக இருக்காது. வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறலாம். குடும்ப சூழல் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சுமாராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று நிதியைப் பொறுத்தவரை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். நிதி பிரச்சனையை சந்திக்க வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் இன்று அலட்சியமாக இருக்காதீர்கள். பணிபுரிபவர்களின் செயல்திறன்கள் பாராட்டப்படும். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் லாபம் ஈட்ட நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நல்ல நாளாக இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்:12
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 முதல் மதியம் 12:50 வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று நீங்கள் வேலையை மாற்ற நினைத்தால் நல்ல வாய்ப்பைப் பெறுவீர்கள். வியாபாரிகளின் நிலுவையில் உள்ள பணிகளை தொடங்க இன்று சிறந்த நாள். இருப்பினும் வெற்றி பெற நிறைய முயற்சி செய்ய வேண்டியிருக்கும். வணிகர்கள் தங்கள் திட்டங்களிலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அதிக மன அழுத்தத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:55 முதல் மாலை 6:50 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே! பணத்தைப் பொறுத்தவரை இன்று மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். நிதி தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆடம்பரத்திற்காக நிறைய செலவு செய்ய வாய்ப்புள்ளது. வேலை செய்பவர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வியாபாரிகளுக்கு சாதாரண நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் உள்ளோருடனான உறவு நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 34
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:25 முதல் மதியம் 2:15 வரை



Click it and Unblock the Notifications