For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த வித சர்ச்சையிலும் சிக்கி விடாதீர்கள்...

இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்டு 04ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 04 August 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்டு 04ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உங்கள் தன்னம்பிக்கை இன்று வெற்றி அடைய பெரிதும் உதவும். மாறாக, நீண்ட காலமாகத் தேங்கிக் கிடக்கும் பிரச்சனைகளையும் இதன் மூலம் தீர்க்க முடியும். கடந்த காலத்தில் செய்த முதலீடு மூலம் இன்று பெரிய லாபத்தைப் பெறலாம். இன்று நீங்கள் ஏதேனும் முக்கியமான முடிவை எடுக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக உங்கள் பெற்றோரின் ஆலோசனையைப் பெறுங்கள். இன்று தனிமையில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும், ஏனென்றால் இன்று நீங்கள் உங்கள் வருங்கால துணையைச் சந்திக்க முடியும். மறுபுறம், திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் காதல் நிறைந்த தருணங்களை அனுபவிப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று உங்களுக்கு தொல்லைகள் நிறைந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் பணத்தை சேமிக்க கடினமாக முயற்சி செய்வீர்கள். ஆனால், திடீர் செலவுகள் உங்கள் திட்டத்தைக் கெடுத்துவிடும். இன்று ஏதேனும் தவறான புரிதல் உங்கள் தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கையைப் பாதிக்கலாம். எனவே, உங்கள் புரிதலில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலக வதந்திகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் அது உங்கள் பெயரைக் கெடுக்கும். இன்று வியாபாரிகள் வேலை சம்பந்தமாக திடீரென்று பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். மேலும், இந்த பயணம் உங்களுக்கு குறைந்த பலனையும் அதிக மன அழுத்தத்தையும் தரும். காதல் வாழ்க்கையில் நல்லிணக்கத்தைப் பராமரிக்க, அமைதியாக இருப்பது நல்லது. இல்லையெனில், கோபத்தில், உங்கள் வாயிலிருந்து தவறான வார்த்தைகள் வரலாம். இது உங்கள் உறவின் இனிமையைக் குறைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்:20

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:40 மணி முதல் மதியம் 12:25 மணி வரை

மிதுனம்

மிதுனம்

இன்று நீங்கள் உங்கள் நண்பர்களின் உதவியால் நிதி சிக்கல்களைத் தீர்க்க முடியும். புதிய வேலையைத் தொடங்க இந்த நாள் நல்லதல்ல. எனவே இந்த நாளில் இதுபோன்ற ஆபத்தான முடிவு எதையும் எடுக்க வேண்டாம். திருமணமானவர்களுக்கு இந்த நாள் சாதாரணமாக இருக்கும். காதல் வாழ்க்கைப் பொறுத்தவரை, உங்கள் துணையுடன் விரிசல் அதிகரிக்கும். எனவே, உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள். இன்று, குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளும் உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:22

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

கடகம்

கடகம்

இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இதில் நீண்ட காலமாக சிக்கியிருக்க பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. இது உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும். இது தவிர, இன்று சில நல்ல செய்திகளையும் கேட்கலாம். இந்த நாள் காதல் நிறைந்ததாக இருக்கும். இதில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிட வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபருடன் இணைவது இன்று சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தமட்டில், இன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் கடந்து செல்லும். மாறாக இன்று நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்:11

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். நாளின் ஆரம்பம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், நாளின் நடு பகுதியில் சில எதிர்பாராத சம்பவங்கள் நடக்கலாம். இது உங்கள் மனநிலையைக் கெடுக்கும். இன்று நீங்கள் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்க நினைத்தால், நிச்சயமாக நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தவரை, பொரித்த உணவுப் பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். இல்லையெனில், வயிறு தொடர்பான பிரச்சனைகள் உங்கள் நாளைக் கெடுத்துவிடும். இன்றைய நாள் எதிர்காலத் திட்டங்களில் வேலை செய்ய வேண்டிய நாளாகும். எனவே, அனைத்து மன அழுத்தத்தையும் மறந்துவிட்டு உங்கள் எதிர்காலத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இன்று காதல் வாழ்க்கைக்கு ஏற்ற நாள். இதில் உங்கள் துணையுடன் நல்ல புரிதல் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்:12

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:55 மணி முதல் இரவு 7 மணி வரை

கன்னி

கன்னி

இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். ஆனால், வருமான ஆதாரம் இருக்கும். இந்த நாள் உங்கள் காதல் வாழ்க்கைக்கு சற்று பலவீனமாக இருக்கும். இதில் உங்கள் துணையுடன் உங்களுக்கு விரிசல் ஏற்படலாம் மற்றும் உங்கள் துணை உங்கள் மீது கோபப்படலாம். இருப்பினும், இன்று அலுவலகத்தில் மிகவும் நல்ல நாளாக இருக்கும். நிலுவையில் உள்ள திட்டங்கள் முடிவடையும். அதன் காரணமாக நீங்கள் நிம்மதி அடைவீர்கள். இன்று வழிபாட்டு தலங்கள் அல்லது உறவினர்கள் வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 முதல் மாலை 4 மணி வரை

துலாம்

துலாம்

இன்றைய நாள் உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும். இதில் உங்கள் துணையுடன் அதிக நேரத்தைச் செலவிட விரும்புவீர்கள். உங்கள் துணை உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்வார் மற்றும் உங்கள் உறவு முன் எப்போதும் இல்லாததை விட வலுவாக மாறும். தொழில் வாழ்க்கையில் இன்று ஒரு கலவையான நாளாக இருக்கும். ஆனால், இன்று எந்த வித சர்ச்சையிலும் சிக்காதீர்கள். இன்று நீங்கள் வெளிநாட்டில் இருந்து சில நல்ல செய்திகள் அல்லது வணிக முன்மொழிவுகளைப் பெறலாம். நல்ல ஆரோக்கியத்திற்கு, சிறிது ஓய்வு மற்றும் சத்தான உணவு உங்களின் ஆற்றல் மட்டத்தை அதிக அளவில் வைத்திருக்க உதவும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:17

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 10:20 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். இன்று ஒரு பயணத்திற்கு செல்லும் திட்டம் இருந்தால், அதை ஒத்திவைக்கவும். ஏனெனில், இந்த பயணம் உங்களுக்கு சிக்கலாக மாறும். மாறாக, இந்த நாளை குடும்ப உறுப்பினர்களுடன் செலவிட முயற்சி செய்யுங்கள். நிதி விஷயங்களில் இன்று சாதாரணமாக இருக்கும். எது அதிக செலவாகும். இன்று உங்கள் ஆரோக்கியம் வலுவாக இருக்கும். இதில் நாள்பட்ட நோய்களில் இருந்து விடுதலை பெறுவீர்கள். இன்று எல்லாவற்றிலும் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்:8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:35 மணி முதல் இரவு 7:20 மணி வரை

தனுசு

தனுசு

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் உள்ள இளைய உறுப்பினர்களின் தேவைகளை நீங்கள் முழுமையாக கவனிக்கவும். மேலும், தேவைப்படும்போது அவர்களுக்கு உதவவும் செய்யும். இன்றைய பயணம் உங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இன்று உங்கள் பழைய நண்பர்களைச் சந்திக்கலாம். அதே நேரத்தில், ஒரு சிறப்பு நபரின் வருகை உங்கள் வாழ்க்கையில் இருப்பது இன்றைய நாளை சிறந்த நாளாக மாற்றும். இந்த நாள் திருமண வாழ்க்கைக்கு சாதகமாக இருக்கும். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே அன்பான உரையாடல் இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்:36

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2:55 மணி வரை

மகரம்

மகரம்

இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். எந்த விதமான மன அழுத்தமும் உங்களைத் தொந்தரவு செய்தால், அது இன்று நீங்கும். இது உங்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தும். நீங்கள் பணத்தை நன்றாக சேமிக்க முடியும். இது உங்கள் நிதி நிலைமையை வலுப்படுத்தும். உடல்நலம் இன்று பலவீனமாக இருக்கலாம். இதில் சிறப்பு கவனம் தேவைப்படும். திருமண வாழ்க்கையில் கலவையான முடிவுகள் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நடத்தையைப் பேணுவது அவசியம். இல்லையெனில், உங்களுக்கிடையேயான உறவு மோசமடையக்கூடும். நீதிமன்றப் பணிகளில் உங்களுக்கு வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். கடந்த காலங்களில் அதிகமாகி வந்த செலவுகள் இன்று ஓரளவு குறையும். மனரீதியாகவும் வலுவாக உணர்வீர்கள். உங்கள் முடிவெடுக்கும் திறன் முன்பை விட இன்று சிறப்பாக இருக்கும். நீங்கள் சுப நிகழ்ச்சிகளுடன் இணைந்திருப்பதை உணரலாம். இந்த நாள் திருமண வாழ்க்கைக்கு சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்லிணக்கத்துடன் நடக்கவும். காதலர்களுக்கு திருணமத்திற்கு ஒப்புதன் தொடர்பாக இன்று சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். குடும்ப உறுப்பினர்களின் நடத்தை இன்று உங்களுடன் நன்றாக இருக்கும். மேலும், இந்த நாள் அலுவலகத்தில் சில சாதனைகளை அடைவதற்கான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2 மணி வரை

மீனம்

மீனம்

இன்று நீங்கள் பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. ஆனால் திடீர் செலவுகள் அதிகரிப்பதால் உங்கள் மனம் சோகமாக இருக்கும். இன்று அலுவலகத்தில் சிறப்பான நாளாக இருக்கும். இதில் அனைத்து வேலைகளும் சிரமமின்றி முடிவடையும். உங்களின் வேலை செய்யும் விதம் மக்களை பெரிதும் ஈர்க்கும். எனவே இன்று அலுவலகத்தில் அதிக முக்கியத்துவம் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையும் இன்று சிறப்பாக இருக்கும். அதில் உங்கள் குடும்பத்துடன் நல்ல தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் மனகசப்பைத் தூண்டும் அனைத்து தவறான புரிதல்களையும் நீங்கள் அகற்ற முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 மணி முதல் இரவு 10 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 04 August 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 04 August 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Wednesday, August 3, 2022, 20:38 [IST]
Desktop Bottom Promotion