For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிகாரர்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது… உஷார்…

இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்ட் 03 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…

|

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்ட் 03 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan -03 August 2021 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், இன்று நீங்கள் சில முக்கியமான ஆவணங்களைச் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். கவனக்குறைவாக இருக்காதீர்கள். பெரிய நிதி பரிவர்த்தனைகள் செய்யும் போதும் அதிக அவசரத்தைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புள்ளது. குறிப்பாக ஐடி துறையில் பணிபுரிவோருக்கு இன்று மிகவும் உகந்த நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். வீட்டில் ஏதேனும் மத சடங்குகளைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், இன்று அதற்கு நல்ல நாள். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தும் போது இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2:55 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

வேலையைப் பற்றி பேசுகையில், வணிகர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் ஒரு ஆடை வியாபாரி என்றால், இன்று நீங்கள் ஒரு பெரிய ஆர்டரைப் பெறலாம். உங்கள் வியாபாரம் அதிகரிக்கும். பழங்கள், பூக்கள், இனிப்புகள் போன்றவற்றை வியாபாரம் செய்வோருக்கு இன்று லாபகரமானதாக இருக்கும். நீங்கள் ஏதேனும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை புரிகிறீர்கள் என்றால் இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உங்களுக்கு அதிக பணிச்சுமை இருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். உடன்பிறப்பு மற்றும் தந்தையுடன் நல்லுறவைப் பேண முயற்சி செய்யுங்கள். பணத்தைப் பற்றி பேசினால், சிந்திக்காமல் செலவழிக்கும் உங்கள் பழக்கத்தால் இன்று திடீர் சிக்கல் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:35 மணி முதல் இரவு 7:20 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மின்னணு ஊடகங்களுடன் தொடர்புடையோருக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறலாம். நீங்கள் வேலையில்லாமல் நீண்ட காலமாக வேலை தேடிக்கொண்டிருந்தால், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு வெற்றி கிட்டும். கூட்டு வியாபாரம் செய்வோர் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவார்கள். பெற்றோரின் வணிகத்துடன் தொடர்புடையோருக்கு நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். நீங்கள் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று சேமிப்பில் கவனம் செலுத்த முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று காரசாரமான உணவைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் 10:20 மணி வரை

கடகம்

கடகம்

போக்குவரத்து தொடர்பான வேலை செய்வோர் நல்ல முடிவுகளைப் பெறலாம். உங்கள் நிதி சிக்கலைத் தீர்க்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சவாலான நாளாக இருக்கும். அலுவலகத்தில் ஒரு பெரிய திட்டத்தில் வேலை செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், நீங்கள் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால், உங்களுக்கு கொடுக்கப்பட்ட பெரிய பொறுப்பும் உங்களிடமிருந்து திரும்பப் பெறப்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், வாழ்க்கைத் துணையுடன் தகராறு ஏற்படலாம். தேவையற்ற விஷயங்களின் கோபப்படுவதைத் தவிர்க்கவும். இது உங்கள் திருமண வாழ்க்கையின் அமைதியை சீர்குலைக்கும். பணத்தின் அடிப்படையில் இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உணவை புறக்கணிக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மாலை 4 மணி வரை

சிம்மம்

சிம்மம்

நீங்கள் ஒரு பெரிய தொழிலதிபராக இருந்து ஏதேனும் முதலீடு செய்ய விரும்பினால், இந்த நேரத்தில் நீங்கள் அவசரப்பட வேண்டாம். தகுந்த ஆலோசனை பெற்ற பின்னரே உங்கள் முடிவை எடுங்கள். உத்தியோகஸ்ர்கள் அலுவலகத்தில் தங்கள் நடத்தையை சரியாக வைத்திருக்க வேண்டும். உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அவர்களின் எந்த ஒரு கருத்தையும் ஏற்கவில்லை என்றால், உங்கள் தரப்பை அமைதியாக முன்வைக்க முயற்சி செய்யுங்கள். கோபம் மற்றும் விவாதங்கள் விஷயங்களை மோசமாக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலை சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணத்தின் அடிப்படையில் இன்று சாதாரணமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, குளிர்ச்சியான மற்றும் பழைய உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:55 மணி முதல் இரவு 7 மணி வரை

கன்னி

கன்னி

மாணவர்கள் தங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். நீங்கள் வெளிநாடு சென்று உயர்கல்வி பெற விரும்பினால், இன்று உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் முக்கியமான சந்திப்பு இருக்கலாம். உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்தவும். நீங்கள் கூட்டு வியாபாரம் செய்தால், உங்கள் துணையுடன் பிளவு ஏற்பட்டால், அனைத்து கசப்புகளையும் விரைவில் அகற்ற முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் அது உங்கள் வியாபாரத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பணம் தொடர்பாக வீட்டில் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

துலாம்

துலாம்

அலுவலகத்தின் சூழல் இன்று ஓரளவு பதற்றமாக இருக்கும். உங்களுக்கு ஒரு சவாலான பணி ஒதுக்கப்படலாம். நீங்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். தேவையற்ற மோதல் அல்லது ஆணவத்தை தவிர்க்கவும். வணிகர்கள் சட்ட விஷயங்களில் மிகவும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். இல்லையெனில், இன்று நீங்கள் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் விஷயங்கள் இயல்பானதாக இருக்கும். வீட்டின் உறுப்பினர்களுடனான உறவில் அன்பும் இனிமையும் அதிகரிக்கும். இன்று வாழ்க்கைத் துணை மிகவும் காதல் மனநிலையில் இருப்பார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் அவருடன் நேரத்தை நன்கு செலவிடுவீர்கள். பணத்தைப் பற்றிய கவலைகள் திடீரென அதிகரிக்கலாம். உங்கள் நிதி நிலையை வலுவாக்க சற்று கடினமாக உழைக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

வியாபாரிகளுக்கு இன்று கலவையான நாளாக இருக்கும். கூட்டு வியாபாரம் செய்வோருக்கு இன்று போராட்டங்கள் நிறைந்ததாக நீங்கள் பொறுமையாக வேலை செய்து உங்கள் எல்லா முடிவுகளையும் அமைதியான மனதுடன் எடுக்க முயற்சிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அவசரப்பட வேண்டாம். சிறிய தவறுகள் உங்களுக்கு அதிக பிரச்சனையை கொடுக்கலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமற்றதாக இருக்கும். குடும்பத்தின் இளைய உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்பு மோசமடையக்கூடும். வாழ்க்கைத் துணையின் மனநிலை நன்றாக இருக்காது. அன்புக்குரியவரின் உடல்நிலை பலவீனமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களைப் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் வைத்திருக்க, தினமும் லேசான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:40 மணி முதல் மதியம் 12:25 மணி வரை

தனுசு

தனுசு

வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடின உழைப்பின் சரியான முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இன்று முதலாளி உங்களின் வேலையால் மிகவும் மகிழ்ச்சியடைவார். நீங்கள் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தால், உங்கள் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் பதவி உயர்வில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். வரி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உடன்பிறப்பிடமிருந்து ஒரு பரிசைப் பெறலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்று நெருக்கமான ஒருவரை சந்திக்கலாம். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். எவ்வளவு சேமிப்பில் கவனம் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனை இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை

மகரம்

மகரம்

இன்று நீங்கள் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் வேடிக்கைக்கான மனநிலையில் இருப்பீர்கள். முதலில், உங்கள் வணிகத்தைப் பற்றி பேசினால், கடினமான போராட்டத்திற்குப் பிறகு நீங்கள் நல்ல லாபம் பெறலாம். உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த நினைத்தால், இந்த நேரம் அதற்கு சாதகமானது. உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரணமான நாளாக இருக்கும். இன்று கடினமான பணிகளையும் எளிதாக முடிக்க முடியும். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் அருமையான நேரத்தை செலவிடுவீர்கள். இன்று பணத்தைப் பொறுத்தவரை சற்று விலையுயர்ந்ததாக இருக்கும். பொழுதுபோக்குகள் மற்றும் இன்பங்களுக்கு சற்று அதிகம் செலவிடலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், மாறிவரும் வானிலை காரணமாக உடல்நலம் மோசமடைய வாய்ப்புள்ளது. எனவே, கவனக்குறைவாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 23

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை

கும்பம்

கும்பம்

அரசு ஊழியர்களுக்கு இன்று மிகவும் உகந்த நாளாக இருக்கும். நீங்கள் பதவி உயர்வு பெற வலுவான வாய்ப்புகள் உள்ளன. தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு வேலைச் சுமை அதிகமாக இருக்கும். இருப்பினும், கடினமாக உழைப்பதை நிறுத்த வேண்டாம். உங்கள் கடின உழைப்பு விரைவில் உங்களுக்கு வெற்றியின் பாதையைத் திறக்கும். வியாபாரிகளுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் விஷயங்கள் சாதாரணமாக இருக்கும். வீட்டின் பெரியவர்களிடம் பேசும்போது, உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்துங்கள். உங்கள் தவறான அணுகுமுறை அவர்களின் உணர்வுகளை காயப்படுத்தலாம். உங்கள் துணையுடன் நல்லுறவைப் பேண முயற்சி செய்யுங்கள். இன்று ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஒரு கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

மீனம்

மீனம்

இன்று குடும்பத்தில் சில பதற்றம் சாத்தியமாகும். குடும்ப பிரசசனைகளைப் புத்திசாலித்தனமாக தீர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். வேலையைப் பற்றி பேசுகையில், அலுவலகத்தில் நிலுவையில் உள்ள உங்கள் வேலையை விரைவில் முடிக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் முதலாளியின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வங்கித் துறையுடன் தொடர்புடையோருக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். சில்லறை வியாபாரிகள் நல்ல லாபம் பெறலாம். இரும்பு வியாபாரிகளும் எதிர்பார்த்த முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், அதிகப்படியான கோபத்தையும் மன அழுத்தத்தையும் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan -03 August 2021 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 03 August 2021 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Desktop Bottom Promotion