For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வரவுக்கும் செலவுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தணும்..

இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 02 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…

|

Today Rasi Palan -02 November 2021 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 02 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

குடும்பத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. வீட்டுப் பொறுப்புகள் அதிகரித்து வருவதால் மன அழுத்தத்தை அனுபவிப்பீர்கள். இது தவிர இன்று உங்கள் பேச்சில் கசப்பு இருக்கும். உங்களுடைய இத்தகைய அணுகுமுறை உங்கள் அன்புக்குரியவர்களை வருத்தமடையச் செய்யும். நீங்கள் இதை மனதில் வைத்துக் கொள்வது நல்லது. வியாபாரிகள் இன்று நல்ல பலன்களைப் பெறலாம். பொருளாதார ரீதியாக பலம் பெறுவீர்கள். வேலை மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் நிதியைப் பற்றி பேசினால், இன்று திடீரென்று உங்களுக்கு பண வரவு இருக்கும். நீங்கள் பொழுதுபோக்கிற்காகவும் பணத்தை செலவிடலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு பிரச்சனை இருந்தால், அலட்சியமாக இருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

மாணவர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாளாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை நிலை மிகவும் நன்றாக இருக்கும். தேர்வில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் ஆசிரியர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். இன்று நீங்கள் பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், இன்று உங்களுக்கு வெற்றிக்கான வலுவான வாய்ப்புள்ளது. வேலையைப் பற்றி பேசினால், உத்தியோகஸதர்கள் மீது பொறுப்புகளின் சுமை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு ஏற்ற, இறக்கம் இருக்கும். இன்று உங்களின் சில முக்கியமான வேலைகள் பாதியில் தடைபடலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் நல்லிணக்கம் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9:00 மணி வரை

மிதுனம்

மிதுனம்

இன்று வணிகர்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். நீங்கள் பெரிய லாபத்தைப் பெற விரும்பினால், உங்கள் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். உத்தியோகஸ்தர்கள் சோம்பேறித்தனத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் வரும் நாட்களில் உங்கள் மீது பணிச்சுமை அதிகரிக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். இன்று நீங்கள் ஏதேனும் முக்கியமான முடிவை எடுக்க வேண்டியிருந்தால், சரியான முடிவை மன உறுதியுடன் எடுக்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் முரட்டுத்தனமான நடத்தை உங்களை வருத்தமடையச் செய்யும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பிரச்சனைக்கு உரையாடல் மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். நீங்கள் அவர்களுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும். இன்று ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 7:55 மணி வரை

கடகம்

கடகம்

மற்றவர்கள் சொல்வதைக் கண்டு அதிகம் பாதிக்கப்படாமல் உங்கள் முக்கியமான பணிகளில் முழு கவனம் செலுத்துங்கள். உங்கள் நல்லது கெட்டது உங்களுக்கு தான் நன்றாக தெரியும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு பல பணிகள் இருக்கும். அதை நீங்கள் சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். இன்று நீங்கள் மிகவும் பரபரப்பாக இருக்கப் போகிறீர்கள். வர்த்தகர்கள் இன்று மிகவும் கடினமாக போராட வேண்டியிருக்கும். தடைப்பட்ட வேலையை மீண்டும் தொடங்க கடினமாக உழைப்பீர்கள். நிதித்துறையில் இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். நீங்கள் இன்று கூடுதல் பணத்தை சம்பாதிக்கலாம். உங்கள் வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், நீங்கள் தொடர்ந்து உ்டகார்ந்து வேலை செய்தால், முதுகெலும்பு தொடர்பான பிரச்சனை இருக்கலாம். இடையிடையே சிறிது நேரம் ஓய்வெடுத்தால் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:45 மணி முதல் மதியம் 1:25 மணி வரை

சிம்மம்

சிம்மம்

பணம் சம்பந்தமான எந்த ஒரு முடிவையும் அவசரத்தில் எடுக்காதீர்கள். குறிப்பாக கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். நீங்கள் கடன் வாங்கினால், எதிர்காலத்தில் அதைத் திருப்பிச் செலுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். இன்று வேலையில் கலவையான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை கணிசமாக அதிகரிக்கும். இன்று சக ஊழியர்களுடன் வாக்குவாதமும் ஏற்படலாம். பயனற்ற விஷயங்களுக்குப் பதிலாக, உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். வணிகர்கள் வரி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் உங்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். உங்கள் கசப்பான வார்த்தைகள் அன்புக்குரியவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

கன்னி

கன்னி

இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் மங்களகரமான நாளாக இருக்கும். உங்கள் நீண்டகால முயற்சிகள் வெற்றியடையும். இன்று நீங்கள் விரும்பிய வேலையைப் பெறலாம். நீங்கள் ஏற்கனவே வேலையைச் செய்து கொண்டிருந்தால், உங்கள் எதிரிகளிடமிருந்து கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று அவர்கள் உங்களுடைய எந்த முக்கியமான வேலையையும் தடுக்கலாம். வியாபாரிகளின் தடைபட்ட வேலைகள் இன்று மீண்டும் தொடங்கும். உங்கள் பங்கில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இன்று வழக்கத்தை விட நிதி விஷயத்தில் சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் நீண்ட காலமாக ஏதேனும் வாங்க திட்டமிட்டிருந்தால், இன்று அதற்கு சரியான நாள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களை புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும். இதனுடன், நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

துலாம்

துலாம்

திருமண வாழ்க்கையில் பதற்றமான சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடனான சிறு தகராறு பெரிய சண்டையாக மாறும். நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்படவில்லை என்றால், எதிர்காலத்தில் நீங்கள் வருந்த வேண்டியிருக்கும். இன்று நீங்கள் ஆடம்பரமாக செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். தேவைக்கு அதிகமாக செலவு செய்வது சிக்கலில் சிக்க வைக்கும். வேலையின் அடிப்படையில், இன்று உத்தியோகஸ்தர்ளுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைக்கும். மேலதிகாரியின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு ஏதேனும் இரத்த சம்பந்தமான நோய் இருந்தால், நீங்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்:14

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:00 மணி முதல் மதியம் 2:55 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று உத்தியோகஸ்தர்கள் தங்கள் நாளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். இன்று அலுவலகத்தில் எந்த விதத்திலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். சோம்பேறித்தனத்தை தவிர்த்து, நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயற்சி செய்யுங்கள். இந்த நேரத்தில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய தொழிலைத் தொடங்கி, எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால், பொறுமையாக இருக்க வேண்டும். விரைவில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில கருத்தியல் வேறுபாடுகள் சாத்தியமாகும். தேவையில்லாத மன அழுத்தத்தை எடுத்துக்கொண்டால், உங்கள் வேலையில் கவனம் செலுத்த முடியாது. எனவே, இதுபோன்ற விஷயங்களில் உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காமல், அன்புடனும் அமைதியுடனும் விஷயத்தை கையாள முயற்சிப்பது நல்லது. உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் இரவு 7:40 மணி வரை

தனுசு

தனுசு

நிதி விஷயத்தில் இன்று கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். அதிகரிக்கும் செலவுகளைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், விரைவில் நீங்கள் ஒரு பெரிய நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். நீங்கள் ஒரு வேலையைச் செய்தால், உங்கள் முதலாளியின் முன்பு உங்கள் மரியாதையை வலுவாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். அதே போல் வேலையில் நீங்கள் எந்த அலட்சியமும் காட்டவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் மீண்டும் பழைய உற்சாகத்தைப் பெற விரும்பினால், உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் அன்புக்குரியவரின் விருப்பு வெறுப்புகளையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். இன்று நீங்கள் சில பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று ஒரு சாதாரண நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:29

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

மகரம்

மகரம்

இன்று நீங்கள் பொறாமை குணம் கொண்ட ஒருவரை சந்திப்பீர்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். அதே போல் உங்கள் நடத்தையை சமநிலையில் வைத்திருக்க வேண்டும். மனதில் சில குழப்பங்கள் இருந்தால், தியானம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் மனதிற்கு அமைதியைத் தரும். அலுவலகப் பணிகளில் சரிவு ஏற்படும். இன்று வேலைகளை குறித்த நேரத்தில் முடிக்க அழுத்தம் ஏற்படும். வியாபாரிகளுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமஅளவு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்கவும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் உடலின் எந்தப் பகுதியிலும் வலியால் கவலைப்படுவீர்கள். தினமும் காலையில் எழுந்து லேசான உடற்பயிற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்துங்கள். இல்லையெனில் உங்கள் வார்த்தைகள் உங்களுக்கு எதிராக மாறலாம். வேலையின் அடிப்படையில் இன்று சாதாரணமாக இருக்கும். அனைத்து வேலைகளையும் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புடன் முடிப்பீர்கள். இன்று வியாபாரிகளுக்கு சிறந்த முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமற்றதாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடு வீட்டில் பதற்றத்தை ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மன அழுத்தம் மிகவும் அதிகரிக்கும். நீங்கள் அதிக மன அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கும் செலவுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை

மீனம்

மீனம்

இன்று உங்கள் குடும்பத்தில் ஏதாவது ஒரு சர்ச்சை ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், வீட்டின் சூழல் நன்றாக இருக்காது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதீர்கள். அதே போல் இளையவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். நாளின் இரண்டாம் பகுதியில் நண்பர்களுடன் சிறிது நேரம் செலவழிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நண்பர்களுடன் உங்கள் மனதைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இன்று நீங்கள் மிகவும் நன்றாக இருப்பீர்கள். இன்று எந்த நிதி பரிவர்த்தனையும் செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் சாத்தியமாகும். இருப்பினும், நீங்கள் நிதி விஷயங்களில் அவசரப்படாமல் இருந்தால் நல்லது. இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். வேலையின் அடிப்படையில் இன்று சாதாரணமாக இருக்கும். உத்தியோகம், வியாபாரம் எதுவாக இருந்தாலும் உங்கள் பணி சுமூகமாக முடியும். திடீரென்று சில செய்திகள் வந்து உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan -02 November 2021 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 02 November 2021 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Monday, November 1, 2021, 20:25 [IST]
Desktop Bottom Promotion