For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan 02 December 2022: இன்று இந்த ராசிக்காரர்களின் அவசர முடிவு வீண் அவஸ்தையில் முடியலாம்...

இன்றைய நாள் சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 02ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 02 December 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 02ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று பொருளாதார ரீதியாக உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக இருக்கவும். இன்று நீங்கள் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நேரத்தை நன்கு பயன்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள பணிகளை விரைவில் முடிக்க முயற்சிக்கவும். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். குடும்ப வாழ்வில் சூழ்நிலை இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். அன்புக்குரியவர்களுடனான உங்கள் உறவு இன்னும் வலுப்பெறும். பணத்தைப் பொறுத்தவரை, இன்று வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை பிரச்சனை இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நாள். முக்கியமாக வியாபாரிகள் அரசு விதிகளை மீறுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில், பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் இன்று நல்ல பலனைப் பெறலாம். இன்று உங்கள் கடின உழைப்பு நிச்சயம் வெற்றி பெறும். பணத்தின் அடிப்படையில் இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தினால் நல்லது. இல்லையெனில், கடன் சுமை உங்கள் மீது அதிகரிக்கும். உங்கள் வாழக்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்றைய நாள் கலவையான நாளாகவே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 7 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இன்று உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும். சக ஊழியர்களின் வேலையில் அதிகம் தலையிடாதீர்கள். உங்களின் இந்த பழக்கமே உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். வணிகர்களுக்கு இன்று நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி சிக்கலை தீர்க்க வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வீட்டில் உள்ள சிலருடன் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. கோபமும் அவசரமும் உங்கள் வீட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் சீர்குலைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரையில், அவசரத்தில் எந்த வேலையையும் செய்யாதீர்கள். இல்லையெனில், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: வயலட்

அதிர்ஷ்ட எண்: 37

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:25 மணி முதல் காலை 10 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்று வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரப் போகிறது. உங்கள் வாழ்க்கைத் துணையுடனான பிரச்சனைகள் முடிவடையும். குழந்தை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வேலை தொடர்பான புதிய முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெறலாம். வேலை அல்லது வியாபாரம் எதுவாக இருந்தாலும், இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்களால் முடிந்ததைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தடைப்பட்ட பண வரவு கிடைக்கப்பெறுவீர்கள. புத்திசாலித்தனமாக வேலை செய்தால், விரைவில் உங்கள் நிதி பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 37

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் இரவு 7:55 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, வீண் மனகுழப்பங்கள் இன்று உங்களைத் தொந்தரவு செய்யலாம். தொழில் தொடர்பான ஏதேனும் கவலைகள் இருந்தால், உங்களுக்கு நெருக்கமானவர்களின் ஆலோசனையைப் பெறலாம். வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் இன்று பாதகமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் உங்கள் வேலைக்கு ஆபத்து ஏற்படக்கூடும். இன்று வணிகர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். சிறிய முயற்சியில் பெரிய வெற்றியைப் பெறலாம். தடைபட்ட வேலைகள் முடிவடையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோரின் ஆசியைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், வெகுநேரம் தூங்காமல் இருப்பதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, இன்று நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் குழந்தைகளின் பிடிவாத குணம் இன்று உங்கள் சிரமங்களை அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதிக கண்டிப்புடன் இருக்க வேண்டாம். நீங்கள் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி வீட்டில் விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகரிக்கும் பணிச்சுமை உங்களை மிகவும் சோர்வடையச் செய்யும். நீங்கள் அலுவலகத்தில் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். வணிகர்களுக்கு நீண்ட தூர பயணத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், உங்கள் உடல்நிலை மோசமடைவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. எனவே, அலட்சியத்தைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 39

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்கள் இலக்கில் முழு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேறி சென்றால் வெற்றி நிச்சயம். இன்று நீங்கள் பணி நிமித்தமான பயணங்களையும் மேற்கொள்ளலாம். வணிகர்கள் தங்கள் வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்யலாம். உத்தியோகஸ்தர்கள் தங்களின் கடின உழைப்பிற்கான பலனை பெற்றிடலாம். பணத்தைப் பொறுத்தவரை, இன்று சிறப்பான நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குழந்தையின் ஆரோக்கியத்தில் காணப்படும் முன்னேற்றம் உங்கள் பெரிய கவலையை நீக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் காலை 11:30 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. மாணவர்களுக்கு தேர்வுகள் விரைவில் வரப் போகிறது என்றால், சோம்பலை விடுத்து, படிப்பில் முழு கவனம் செலுத்துவது நல்லது. அலட்சியமாக இருந்தால் அழகான எதிர்காலம் பற்றிய உங்கள் கனவுகள் பொய்த்து போகலாம். இன்று வீட்டின் சூழல் உங்களால் சரியாக இருக்காது. உங்களின் கவனக்குறைவு பெற்றோரை தொந்தரவு செய்யலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்றைய தினம் பெரிய செலவுகள் செய்வதைத் தவிரப்பது நல்லது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் உங்கள் ஒருங்கிணைப்பு மோசமடையலாம். தொழிலதிபர்கள் அதிகம் அலைய வேண்டியிருக்கும். இருப்பினும் உங்கள் கடின உழைப்பு வீண் போகாது. இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 13

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 12:25 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்றைய நாள் உங்களுககு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். வேலையில் இருக்கும் பிரச்சனைகளை நினைத்து அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். சரியான நேரம் வரும்போது, ​​விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். பணத்தைப் பொறுத்தவரை, இன்று மிகவும் விலை உயர்ந்த நாளாக இருக்கும். நாளின் இரண்டாம் பகுதியில் உங்களின் பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்று அவர்களிடமிருந்து சில நல்ல ஆலோசனைகளையும் பெறலாம். இன்று உங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இருப்பினும், எந்த வகையிலும் அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, இன்று உங்கள் பேச்சில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இன்று பண விஷயத்தில் அவ்வளவு சிறப்பாக இருக்காது. உங்கள் நிதி நிலையில் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அலட்சியமாக இருந்தால் எதிர்காலத்தில் இதனால் பெரிய பிரச்சனையைச் சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் ​அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும். அவர்கள் உங்களுக்கு வேலை தொடர்பான ஆலோசனைகளை வழங்கினால், அதற்கு கவனம் செலுத்த வேண்டும். வியாபாரிகள் இன்று பெரிய பலன்களைப் பெறலாம். குறிப்பாக, உங்கள் பணி வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடையதாக இருந்தால், நீங்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:40 மணி முதல் மாலை 3:00 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்கள் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உங்கள் வீட்டில் திருமணம் பற்றி பேச்சு தொடங்கலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், எந்தவொரு பெரிய நிதி பரிவர்த்தனையையும் செய்ய இன்று நல்ல ஏற்றதல்ல. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் எதிர்பார்த்த பலன்களைப் பெறவில்லை என்றால், சரியான திசையில் முயற்சி செய்யவும். இன்று வியாபாரிகளுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தடைப்பட்ட வேலையை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று நீங்கள் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், உங்கள் பிரச்சனை இன்று அதிகரிக்கலாம். எனவே, கவனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மதியம் 2 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, இன்று உங்களை மீறி செலவுகள் அதிகரிக்கலாம். வீட்டிற்கு சில விருந்தினர்களின் திடீர் வருகையால், உங்களின் திட்டங்களும் தடைப்படலாம். மற்றவர்களை கவருவதற்காக உங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவழிக்காதீர்கள். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளால் மேலதிகாரியின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடலாம். தற்போதைய வேலையை விட்டுவிட்டு சொந்தமாக சிறுதொழில் தொடங்க திட்டமிட்டால், இதுபோன்ற விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து ஆலோசனையைப் பெற்று, கவனமாக பரிசீலித்த பிறகு உங்கள் இறுதி முடிவை எடுங்கள். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். திடீர் உடல்நலக் கோளாறுகள் சாத்தியமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 02 December 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 02 December 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Friday, December 2, 2022, 5:30 [IST]
Desktop Bottom Promotion