Latest Updates
-
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
இன்றைய நாள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 1ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 1ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று சில நல்ல செய்திகளைப் பெறலாம். வேலையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்களின் அனைத்து வேலைகளையும் முழு உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் செய்து முடிப்பீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், நீங்கள் பெரிய செலவுகளைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடனான ஒருங்கிணைப்பை பராமரிக்க முயற்சி செய்யுங்கள். சிறிய விஷயங்களுக்காக சண்டை போடாதீர்கள். இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களுக்கு நிறைய பணம் செலவழிக்க நேரிடும். இன்று நீங்கள் அலுவலகத்தில் முக்கியமான சந்திப்பில் பங்கேற்கலாம். முழு நம்பிக்கையுடன் உங்கள் தரப்பை முன்வைப்பது நல்லது. வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். உடல்நலம் சம்பந்தமான சில பிரச்சனைகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்கார்களே, இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு வேலை அழுத்தம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வணிகம் புதிய திசையில் நகரும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வெளியே செல்லலாம். இன்று நீங்கள் உங்கள் துணையிடமிருந்து அழகான ஆச்சரியத்தையும் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:15 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே, கூட்டு வியாபாரம் செய்பவர்கள், தங்கள் தொழிலை முன்னோக்கி கொண்டு செல்ல நினைத்தால், இன்று பாதகமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவசரப்பட்டு எந்த முக்கிய முடிவும் எடுக்காதீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உங்கள் நடத்தையை நன்றாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். தேவையற்ற ஆணவம் உங்கள் பெயரைக் கெடுக்கும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்தவும். உங்கள் வாழ்க்கைத் துணை மீதான நம்பிக்கையை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். உடல்நலனில் அலட்சியம் காட்டாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் இரவு 11:55 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று பெற்றோருடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். காதல் திருமணம் செய்ய விரும்புவோர், இன்று குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறலாம். அலுவலகத்தில் உங்களுக்கு சில கடினமான பணிகள் ஒதுக்கப்படலாம். இதனால் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நேர்மறையாக இருந்து, கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். நிதி நிலையை வலுப்படுத்த, இன்று ஒரு பெரிய நிதி முடிவை எடுக்க வேண்டியிருக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:55 மணி முதல் இரவு 8:25 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்கள் கடின உழைப்பு வெற்றியாக ஊதிய உயர்வை பெறலாம். உயரதிகாரி உங்களுக்கு அலுவலகத்தில் பெரிய பொறுப்பை வழங்குவார். சிறு தவறு கூட நேராமல் பார்த்து கொள்ளுங்கள். விரைவில் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான பாதை திறக்கப்படும். வியாபாரிகள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் காலை 11 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். சோம்பலை விடுத்து முக்கியமான பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் கடனில் இருந்து விரைவில் விடுபட விரும்பினால், உங்கள் நிதி முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த அக்கறை அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உணவில் அலட்சியமாக இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்று நீங்கள் ஒரு பெரிய ஒப்பந்தம் செய்யப் போகிறீர்கள் என்றால், சில காரணங்களால் உங்கள் வேலை பாதியில் நிற்கலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அனைத்து வேலைகளையும் விரைவாக முடிக்க வேண்டும். உங்கள் காலதாமதம் உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். இன்று உங்களுக்கு வழக்கத்தை விட பண விஷயத்தில் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது, வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள். இன்று உங்கள் உடல்நிலை குறித்து மிகவும் கவலையடையலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8:25 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்று வேலையின் அடிப்படையில் உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, அனைத்து வேலைகளும் திட்டப்படி முடிவடையும். பொருளாதார ரீதியாக, இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். பழைய கடனை திருப்பி செலுத்த வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். இன்று நீங்கள் எதிர்கால திட்டங்களை பற்றியும் விவாதிக்கலாம். திருமணமாகாதவர்களின் திருமணம் பற்றி இன்று வீட்டில் பேச தொடங்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இரவு நீண்ட நேரம் விழித்திருந்து வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:35 மணி முதல் இரவு 7 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு இன்று நல்ல வேலை கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், இன்று உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம். இன்று வீட்டில் சுப நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாம். இன்று நீங்கள் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், உங்கள் பயணம் மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளன.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 மணி முதல் காலை 11:20 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கையில் இனிமையான சூழல் நிலவும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு பரிசளிக்க இன்று சரியான நாள். பண விஷயத்தில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். குறைந்த முயற்சியில் நல்ல லாபம் பெறலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியும் அதிகரிக்கும். வணிகர்கள் பெரிய நிதி ஆதாயத்தைப் பெறலாம். உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தால், கோபம் மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே, உடல்நலக்குறைவு காரணமாக, உங்கள் அன்றாட திட்டங்களில் தடைகள் ஏற்படலாம். உங்கள் உடல்நிலையில் அலட்சியமாக இருக்காதீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். வியாபாரிகளுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் ஒரு பெரிய ஆர்டரைப் பெற வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையின் உதவியால் முக்கிய பிரச்சனைகள் தீரும். பொருளாதார முன்னணியில், இன்று கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை



Click it and Unblock the Notifications











