For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan 01 December 2022: திடீர் பண வரவு இன்று இந்த ராசிக்காரர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்...

இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 01ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 01 December 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 01ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்க போகிறது. நீங்கள் உங்கள் வேலையை விட்டுவிட்டு சொந்தமாக சிறுதொழிலை தொடங்க திட்டமிட்டால், உங்கள் திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இன்று சிறந்த நாள். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் கலவையான நாளாக இருக்கும். வணிகத்தில் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்வதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 மணி முதல் மதியம் 2:25 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்றைய நாள் மிகவும் இனிமையான நாளாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். வெளிநாட்டிற்குச் சென்று வேலை செய்ய வேண்டுமென்ற உங்கள் விருப்பத்தில் இருந்துவந்த பிரச்சனை இன்று தீர்க்கப்படும். வணிகர்கள் இன்று பெரிய வாடிக்கையாளர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் பதற்றமாக இருக்கலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமை குலைந்து போகலாம். தனிப்பட்ட விஷயங்களில் வெளியாட்கள் அதிகம் தலையிட அனுமதிக்காதீர்கள். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். திடீர் பண வரவு இருக்கக்கூடும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் சவாலான நாளாக இருக்கும். சோம்பேறித்தனத்தைக் கைவிட்டு முக்கியப் பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. இன்றைய வேலையை நாளை செய்யலாம் என ஒத்திவைக்காதீர்கள். இதனால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுவது நல்லது. கூட்டு தொழில் செய்பவர்கள் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாளின் இரண்டாம் பகுதியில் நண்பர்களை சந்திக்கலாம். ஆரோக்கியமாக இருக்க, உங்கள் தினசரி வழக்கத்தை ஒழுங்கமைக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:20 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்று அலுவலகச் சூழல் மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். வியாபாரிகள் இன்று எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம். இன்று, உங்கள் தன்னம்பிக்கையினால் உங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். நிதி நிலை நன்றாக இருக்கும். திடீர் பண வரவு இருந்தால், முழுவதும் செலவாகி விடும். இன்று நீங்கள் தேவையில்லாத விஷயங்களுக்கு நிறைய பணம் செலவிடலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் குழந்தைகளையும் அவர்களின் செயல்பாடுகளையும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். அலட்சியமாக இருக்காதீர்கள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இன்று வணிகர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். பழைய தடைப்பட்ட வேலைகளை இன்று மீண்டும் தொடங்கலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரியின் கோபத்தைச் சந்திக்க நேரிடலாம். வேலையுடன், உங்கள் நடத்தையையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். இன்றைய நாள் பண விஷயத்தில் நல்ல நாளாக இருக்கும். நீங்கள் பொழுதுபோக்கிற்காக நிறைய பணம் செலவிடுவது சரியல்ல. வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். உங்கள் கடினமான அணுகுமுறை உங்கள் துணையை உங்களிடமிருந்து விலக்க வைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்காது. திடீரென்று உங்கள் உடல்நலம் குறைய வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் எந்தவித அலட்சியமும் காட்டாதீர்கள். இல்லையெனில் நீங்கள் கடுமையான நோயின் பிடியில் சிக்கக்கூடும். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். பணிச்சுமை உங்கள் மீது சற்று அதிகமாக இருக்கும். உங்கள் முதலாளியின் மனநிலையை புரிந்து நடக்க வேண்டும். வணிகர்கள் விரைவான லாபம் ஈட்ட குறுக்குவழியை பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். எந்தவொரு நிதி பரிவர்த்தனையையும் சிந்திக்காமல் செய்யாதீர்கள். அதிகரிக்கும் செலவுகளை குறைக்க முயற்சிக்கவும். தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:00 மணி முதல் காலை 9:20 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். குறிப்பாக மாணவர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு இன்னும் வலுப்பெறும். தாயின் உடல்நிலை மேம்படும். கவலைகள் குறையும். பணத்தின் அடிப்படையில், இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். எதிர்பார்த்த பண வரவு தடைபடலாம். தொழிலதிபர்கள் இன்று கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். உங்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், உங்களுடைய கடின உழைப்பு வீண் போகாது. தொழிலதிபர்களுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும். உடல்நலனில் அலட்சியம் காட்டாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:00 மணி முதல் காலை 8:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். வேலை நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். வணிகர்கள் தொழிலை விரிவுப்படுத்த நினைத்தால், தடைகள் நீங்கி புதிய பாதை திறக்கும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு சிறிது காலம் தள்ளி போகலாம். வேலை விஷயத்தில் அவசரமாக எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால் நல்லது. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும், இன்று நீங்கள் சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைக்கு போதுமான நேரத்தைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் உங்கள் திருமண வாழ்க்கையில் முரண்பாடுகள் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு காது சம்பந்தமான பிரச்சனைகள் வரக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று ஆரோக்கியத்தில் சரிவு ஏற்படலாம். அதனால் முக்கிய வேலைகள் தடைப்படக்கூடும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்கள் கவனக்குறைவால், இன்று ஒரு சிறந்த வாய்ப்பு உங்கள் கையை விட்டு நழுவக்கூடும். பொறுமையாகவும் நேர்மறையாகவும் செயல்படுவது நல்லது. சரியான நேரம் வரும்போது, ​​விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவை பராமரிக்க முயற்சி செய்யுங்கள். தேவையற்ற கோபத்தைத் தவிர்த்திடுங்கள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்களுக்கு சில தோல் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, இன்று திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். அதுவும் குடும்பத்துடன் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் மறக்க முடியாததாக அமையும். பெற்றோரிடமிருந்து சில நல்ல ஆலோசனைகளையும் பெறலாம். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றத்திற்கான பாதை திறக்கப்படும். உங்கள் கடின உழைப்பை முதலாளி கவனிக்கலாம். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் விரைவில் கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆபத்தான முடிவுகள் எடுப்பதை வணிகர்கள் தவிர்த்தால் பெரிய நஷ்டத்தில் இருந்து தப்பிக்கலாம். இன்று ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 5:15 மணி முதல் காலை 9:00 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்கள் கோபமே உங்களுக்கு எதிரியாக மாறக்கூடும். இதனால் நீங்கள் கடும் விமர்சனங்களையும் சந்திக்க நேரிடலாம். உங்களைக் கட்டுப்படுத்தி, வார்த்தைகளை சிந்தனையுடன் பயன்படுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் வேலையை மெதுவாக செய்வதால் சிரமங்கள் அதிகரிக்கும். உங்கள் மேலதிகாரி உங்களுக்கு சில வேலைகளை ஒப்படைத்திருந்தால், அதை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். தொழிலதிபர்கள் புதிய வேலையைத் தொடங்குவதற்கு முன்பு நிலுவையில் உள்ள பழைய வேலைகளை முடிக்க முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், வேலைப்பளு கணிசமாக அதிகரிக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் உடல்நல பிரச்சனை இருந்தால், இன்று உங்கள் பிரச்சனை அதிகரிக்கக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

 மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். திடீர் பண வரவைப் பெறுவதற்கான வாய்ப்புஉள்ளது. பழைய கடனில் இருந்து விடுபடுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. இன்று மனதளவில் மிகவும் நன்றாக உணருவீர்கள். தொழிலதிபர்கள் விரும்பிய லாபத்தைப் பெறலாம். உங்கள் பணி வேகமெடுக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். வீட்டின் பெரியவர்கள் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 01 December 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 01 December 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Thursday, December 1, 2022, 5:05 [IST]
Desktop Bottom Promotion