For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாணக்கியரின் கூற்றுப்படி இந்த வகை பெண்ணை திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுமாம்...!

திருமணம் என்பது நமது சமூக வாழ்க்கையின் மிகவும் அவசியமான விஷயம், ஒவ்வொரு நபரும் வெற்றிகரமான திருமண வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள்

|

பண்டைய இந்தியாவின் ஈவு இணையற்ற ஞானி, பொருளாதர நிபுணர், தத்துவ ஞானி என அனைவராலும் போற்றப்பட்டவர் சாணக்கியர் ஆவார். மக்களைப் பற்றிய நுண்ணறிவு மற்றும் அவர்கள் எவ்வாறு சமூகத்திற்கு தங்களைத் தாங்களே அர்பணித்துக் கொள்கிறார்கள் என்பது குறித்து அவரது கருத்துக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆனால், பெண்கள் குறித்த அவரது எண்ணங்கள் உலகின் முன்னோக்கை மாற்றின.

Tips For Successful Marriage By Chanakya

தனது அரசியல் நூலான அர்த்தசாஸ்திரத்தில் ஒரு தனிநபரின் உண்மையான யதார்த்தத்தையும் தீர்மானிக்கும் தந்திரத்தை அவர் குறிப்பிடுகிறார். மேலும் திருமணத்தின் முக்கியத்துவத்தையும் கூறியுள்ளார், அதில் இரண்டு தனிநபர்கள் ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக நம்புகிறார்கள், முழு வாழ்க்கையையும் ஒன்றாகக் கழிக்க போதுமானது. வெற்றிகரமான திருமணத்திற்கு சாணக்கியர் பல ரகசியங்களைக் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண்ணின் இயல்பு

பெண்ணின் இயல்பு

சாணக்யா நீதியின் இரண்டாவது அத்தியாயத்தில், அவர் விளக்குகிறார், "அன்ரிதம் சஹாசம் மாயா முர்கத்ரமதிலுப்தா அசோச்சத்வம் நிர்தயத்வம் ஸ்ரினம் தோஷ ஸ்வபவாஜா " என்று கூறியுள்ளார். இதன் அர்த்தம் என்னவெனில் பொய்யாகப் பேசுவது, ஒரு வேலையை எந்த சிந்தனையும் இன்றி தொடங்குவது, துணிச்சல், வஞ்சகம், முட்டாள்தனமான செயல்கள், பேராசை மற்றும் கொடுமை. இவையே ஒரு பெண்ணின் அடிப்படை என்று கூறியுள்ளார்.

திருமணத்தின் முக்கியத்துவம்

திருமணத்தின் முக்கியத்துவம்

திருமணம் என்பது நமது சமூக வாழ்க்கையின் மிகவும் அவசியமான விஷயம், ஒவ்வொரு நபரும் வெற்றிகரமான திருமண வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள், இதனால் அவர் நிம்மதியாக மகிழ்ச்சியுடன் வாழ முடியும். சாணக்கிய நீதியில் வெற்றிகரமான திருமணத்திற்கு சாணக்கியர் பல ரகசியங்களை வழங்கியுள்ளார்.

குறிப்பு 1

குறிப்பு 1

அனைத்து ஆண்களுக்குமே அழகான பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று விரும்புவார்கள், ஆனால் சாணக்கியரின் கருத்து இதனுடன் மாறுபட்டதாகும். சாணக்கியரின் கருத்துப்படி ஒரு பெண் அழகாக இருக்கிறாள் ஆனால் அவள் நல்ல குடும்பத்தை சேர்ந்தவளாக இல்லாமல் இருந்தால் அந்த பெண்ணை நிச்சயம் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளார்.

MOST READ: முடிவுக்கு வரப்போகிறது கொரோனாவின் கோரத்தாண்டவம்... நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறிய நல்ல செய்தி...!

குறிப்பு 2

குறிப்பு 2

ஒரு ஆண் தனது சமுதாய அந்தஸ்த்திற்கு சமமான அல்லது குறைவான குடும்பத்துடனேயே திருமண உறவை வைத்துக்கொள்ள வேண்டும். ஒருபோதும் தனது அந்தஸ்த்தை விட உயர்ந்த இடத்தில் திருமண உறவு வைத்து கொள்ளக்கூடாது. அப்படி செய்தால் அவன் சமுதாயத்தின் பார்வையில் மரியாதையை இழக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.

குறிப்பு 3

குறிப்பு 3

அழகாக இல்லாவிட்டாலும், சமுதாயத்தில் நல்ல மதிப்பைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வது ஒரு வெற்றிகரமான திருமணத்திற்கு வழிவகுக்கும். மேலும் இரு குடும்பங்களுக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

குறிப்பு 4

குறிப்பு 4

ஆணும், பெண்ணும் இருவருமே காதலிக்க ஒரே அளவு முயற்சியை மேற்கொள்ள வேண்டும், ஏனெனில் வெற்றிகரமான திருமணத்திற்கு இதுதான் அடிப்படை. இதனை செய்யாதவர்கள் மற்றவர்களின் அன்புக்கும் உணர்ச்சிகளுக்கும் விசுவாசமாக இருக்க முயற்சிக்க வேண்டும் அல்லது அவர்களின் முடிவுக்கு அஞ்ச வேண்டும்.

MOST READ: ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? அவர்களின் தீய குணங்கள் என்ன?

குறிப்பு 5

குறிப்பு 5

பெண்களைப் பொறுத்தவரை, சாணக்கியருக்குச் சொல்ல வேண்டிய முக்கியமான ஒன்று உள்ளது, அவர் ஒரு கணவருக்கு முறையாக சேவை செய்யுமாறு அறிவுறுத்துகிறார், ஏனெனில் இது ஒரு மனைவியின் கடமையாகும். ஆனால், எந்தவொரு ஆணும் தனக்கு கீழ் உள்ள ஒரு பெண்ணை தவறாக நடத்தவோ அல்லது பயன்படுத்திக் கொள்ளவோ கூடாது இல்லையெனில் சமுதாயத்தில் அவமானங்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

குறிப்பு 6

குறிப்பு 6

சாணக்கிய நீதியின் படி ஒரு நல்ல மனைவி நேர்மையான மற்றும் புத்திசாலியாக இருக்க வேண்டும். அவள் கணவனை நேசிக்க வேண்டும் மற்றும் குடும்பத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.

குறிப்பு 7

குறிப்பு 7

மனைவியை தவறாக நடத்துவததோ அல்லது துன்புறுத்துவதோ மிகபெரும் பாவமென்று சாணக்கியர் அங்கிளை எச்சரிக்கிறார். அதை மீறினால் கடுமையான துன்பத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் மற்றும் திருமண முறிவை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.

MOST READ: கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...!

குறிப்பு 8

குறிப்பு 8

குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களைப் பற்றி ஆண்கள் ஒருபோதும் பேசவோ, சண்டையிடவோ கூடாது, ஏனெனில் இது குடும்பத்திற்கும் அவர்களின் சொந்த உறவிற்கும் முடிவில்லாத துக்கத்தைத் தருகிறது. மேலும் எந்த மாதிரியான பெண்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்றும் சாணக்கியர் கூறியுள்ளார்.

குடும்ப பின்னணியை சரிபார்க்கவும்

குடும்ப பின்னணியை சரிபார்க்கவும்

ஒரு நல்ல குடும்பத்திலிருந்து வராத ஒரு பெண்ணை அவள் அழகாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று சாணக்யா கூறுகிறார். அத்தகைய பெண்ணுக்கு குடும்பத்தை உடைக்கும் ஆற்றல் உள்ளது மேலும் அவர் கண்டிப்பாக குடும்பத்தை பிரிப்பார்.

அழகு

அழகு

ஒரு பெண் முரட்டுத்தனமாகவும், வெறுக்கத்தக்கவராகவும் இருந்தால், ஒரு ஆண் அவள் அழகாக இருந்தாலும் அவளை திருமணம் செய்து கொள்ளக்கூடாது. அத்தகைய பெண் தன் கணவனை அவள் விரும்பும் எதையும் செய்ய கொடுமைப்படுத்தலாம்.

MOST READ: கொரோனா வைரஸ் பரவும் இந்த காலத்தில் அசைவ உணவு சாப்பிடலாமா? ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி...!

மோசமான குணம்

மோசமான குணம்

ஒரு அழகான பெண்ணுக்கு மோசமான இயல்பு இருந்தால், பின்னர் அவள் கணவனுடன் எளிதாக கடுமையான உறவுகளை ஏற்படுத்தலாம். எனவே ஒரு ஆண் அத்தகைய பெண்ணை திருமணம் செய்யக்கூடாது.

பொய்

பொய்

பொய் சொல்லும் ஒரு பெண் தன் கணவனுக்கு எதிராக அதைப் பயன்படுத்துவாள். எனவே, அவள் இறுதியில் குடும்பத்தை பிரித்து விடுவாள். எனவே, ஒரு ஆண் அத்தகைய பெண்ணை திருமணம் செய்யக்கூடாது.

விசுவாசமற்றவர்

விசுவாசமற்றவர்

தனது குடும்ப உறுப்பினர்களிடம் துரோகம் செய்யும் ஒரு பெண் தன் கணவருக்கு துரோகம் செய்யக்கூடும். அவர் பிற்காலத்தில் கணவனை ஏமாற்றக்கூடும். எனவே, ஒரு ஆண் அத்தகைய பெண்ணை திருமணம் செய்யக்கூடாது.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் மாதிரி காதலிக்க உலகத்துல யாராலும் முடியாதாம்... உங்க ராசி என்ன?

வீட்டு வேலைகள்

வீட்டு வேலைகள்

சாணக்கியரின் கூற்றுப்படி, வீட்டு வேலைகள் பற்றி அதிகம் தெரியாத ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. இன்றைய காலகட்டத்தில் இந்த விஷயம் விவாதத்திற்குரியது என்றாலும், வீட்டு வேலைகளை எப்படி செய்வது என்று ஒரு பெண் அறிந்திருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips For Successful Marriage By Chanakya

Chanakaya has given many secrets for a successful marriage in Chanakaya Niti.
Desktop Bottom Promotion