For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி அன்று இந்த விஷயங்கள தெரியாமகூட செஞ்சுராதீங்க... இல்லனா பெரிய பிரச்சினை ஆகிடும்...!

இந்தியாவின் மிகவும் மகிழ்ச்சிகரமான பண்டிகை என்றால் அது தீபாவளிதான். ஆண்டு முழுவதும் மக்கள் காத்திருந்த தீபாவளி நெருங்கி விட்டது.

|

இந்தியாவின் மிகவும் மகிழ்ச்சிகரமான பண்டிகை என்றால் அது தீபாவளிதான். ஆண்டு முழுவதும் மக்கள் காத்திருந்த தீபாவளி நெருங்கி விட்டது. தீபாவளி மகிழ்ச்சியான பண்டிகை என்பதையும் தாண்டி அது அனைவரின் வாழக்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நாளாக இருக்கிறது. இந்த நாளில் லக்ஷ்மி தேவியை வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.

நீங்கள் செய்யும் சிறிய உதவி 6 மாத குழந்தை உயிர் பிழைக்க உதவும்

Things You Should Avoid During Diwali in Tamil

தீபாவளியன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது மட்டும் உங்களுக்கு அவரின் ஆசீர்வாதத்தை பெற்றுத்தராது. சில செயல்களை செய்யாமல் இருப்பதும் அவரின் அருளை பெற்றுத்தரும். உண்மைதான், தீபாவளியன்று நீங்கள் செய்யும் சில தவறான செயல்கள் உங்களுக்கு லக்ஷ்மி தேவியின் சாபத்தை பெற்றுத்தரும். தீபாவளியன்று நீங்கள் கண்டிப்பாக செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாமதமாக எழக்கூடாது

தாமதமாக எழக்கூடாது

நீங்கள் தினமும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டியது அவசியமாக இருந்தாலும், குறிப்பாக தீபாவளி நாளில், சூரிய உதயத்திற்கு முன், அதிகாலையில் எழுந்திருப்பது மிகவும் நல்லது. தீபாவளி அன்று தாமதமாக எழுபவர்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருள் கிடைக்காது, மேலும் அவர்கள் லக்ஷ்மி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

பெரியவர்களை அவமதிக்கக்கூடாது

பெரியவர்களை அவமதிக்கக்கூடாது

எந்த நாளாக இருந்தாலும் பெரியவர்களை அவமதிப்பது என்பது தவறான செயலாகும், இருப்பினும் தீபாவளியன்று, உங்கள் பெற்றோர் மற்றும் வீட்டில் உள்ள பிற பெரியவர்களை அவமதிப்பது உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சாபத்தை உங்களுக்கு பெற்றுத்தரும். இந்த நாளில் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயலுங்கள்.

வீட்டை அசுத்தமாக வைத்திருக்கக்கூடாது

வீட்டை அசுத்தமாக வைத்திருக்கக்கூடாது

இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தீபாவளி வாரத்தில் லக்ஷ்மி தேவியை வரவேற்கும் விதமாக உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தீபாவளி அன்று உங்கள் வீட்டில் நறுமணம் வீசுவதோடு, வீடு சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அசுத்தமாக இருக்கும் வீட்டிற்கு ஒருபோதும் லக்ஷ்மி தேவி வருகை தரமாட்டார்.

கோபப்படாதீர்கள்

கோபப்படாதீர்கள்

தீபாவளியன்று கூச்சலிடுவது அல்லது கோபப்படுவது மிகவும் மோசமானதாகக் கருதப்படுகிறது. தீபாவளியன்று உங்கள் கோபத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதையும், உங்களைச் சுற்றியுள்ள அனைவருடனும் அன்பாக இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் கோபமே உங்களை அழித்துவிடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

மாலை நேரத்தில் தூங்காதீர்கள்

மாலை நேரத்தில் தூங்காதீர்கள்

நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்களைத் தவிர மற்றவர்கள் தீபாவளியன்று மாலை நேரத்தில் தூங்கக்கூடாது. தேவைப்பட்டால் மதிய நேரத்தில் தூங்கிக் கொள்ளுங்கள், தீபாவளியன்று மாலை நேர தூக்கம் வறுமை மற்றும் துயரத்திற்கு வழிவகுக்கும்.

போதைப்பொருட்களை பயன்படுத்தாதீர்கள்

போதைப்பொருட்களை பயன்படுத்தாதீர்கள்

தீபாவளியன்று புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற போதைப்பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதால் லட்சுமி தேவிக்கு கோபம் வரும் என்பது ஐதீகம். இனி, தீபாவளியன்று நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.

செல்வத்தை மட்டும் வேண்டாதீர்கள்

செல்வத்தை மட்டும் வேண்டாதீர்கள்

நம்மில் பெரும்பாலோர் லட்சுமி தேவியிடம் செல்வத்தைக் கேட்கிறோம், இருப்பினும் நாம் அனைவரும் லட்சுமி தேவியிடம் செல்வத்தைக் மட்டுமே கேட்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் லக்ஷ்மி தேவி ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்பின் கடவுளாவார். எனவே ஆரோக்கியத்தையும் வேண்டுங்கள்.

திருஷ்டி சுத்துதல்

திருஷ்டி சுத்துதல்

உங்கள் குடும்பத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கும் ஒருவர் இருந்தால், சில சிவப்பு மிளகாயை எடுத்து, பிரச்சனையுள்ள நபரை உட்கார வைத்து 7 முறை சுற்றவும். இது அவர்களது அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும். இந்த மிளகாயை அதன்பின் நெருப்பில் போடவும், போட்டபின் அதனை திரும்பி பார்க்க வேண்டாம்.

மந்திரம்

மந்திரம்

தீபாவளி நாளில், "ஓம் தும் துர்காயே நமஹ" என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இது தவிர, வணிகத்தில் சிறந்த பரிவர்த்தனைகளுக்கு, நீங்கள் "ஓம் ஹன்" என்ற மந்திரத்தை 1008 முறை உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரித்த பிறகு, அதை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். அதை உங்கள் பணியிடத்தில் வைத்திருங்கள், விரைவில் உங்கள் வாழ்க்கை சிறப்பாக மாறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Should Avoid During Diwali in Tamil

Here is the list of things you should avoid during Diwali.
Desktop Bottom Promotion