Latest Updates
-
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது!
வாஸ்துவின் படி சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்துமாம்
வாஸ்து சரியாக இருக்கும் இடத்தில் எப்பொழுதும் நேர்மறை ஆற்றல் இருக்கும், நேர்மறை ஆற்றல் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியையும், அமைதியையும் ஏற்படுத்தும்.
வாஸ்து சாஸ்திரத்தி படி உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு இடமும் ஒருவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. வாஸ்து சரியாக இருக்கும் இடத்தில் எப்பொழுதும் நேர்மறை ஆற்றல் இருக்கும், நேர்மறை ஆற்றல் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியையும், அமைதியையும் ஏற்படுத்தும். அதேசமயம் வாஸ்து சரியாக இல்லாத இடத்தில் வாஸ்து தோஷம் ஏற்படும்.

ஒருவர் எவ்வ்ளவுதான் கடுமையாக உழைத்தாலும் அவர் வாழ்க்கையில் முன்னேறாமல் இருப்பதற்கு அவர்களின் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷமும் ஒரு காரணமாக இருக்கலாம். உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்படும் இடம் பெரும்பாலும் உங்கள் இல்லத்தில் சமையலறையாக இருக்க வாய்ப்புள்ளது. சமையலறையில் நீங்கள் செய்யும் எந்த தவறுகள் உங்கள் வீட்டில் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பழைய பாத்திரங்கள்
உங்கள் சமையலறையில் நீங்கள் அதிகமான பழைய பாத்திரங்களை சேர்த்து வைக்கும் பழக்கம் இருந்தால் அந்த பழக்கத்தை கைவிட வேண்டிய நேரமிது. ஏனெனில் இது உங்கள் வீட்டில் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்துவதுடன் உங்கள் வாழக்கையில் தேக்க நிலையை ஏற்படுத்தும்.

குழாய்களில் கசிவு
உங்கள் சமையலறையில் இருக்கும் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்து விடுங்கள். ஏனெனில் இது வாஸ்து சாஸ்திரத்தின் படி தோஷத்தின் அடையாளமாகும், இவ்வாறு இருப்பது உங்கள் வீட்டில் பணஇழப்பை ஏற்படுத்தும்.

தரையில் விரிசல்
உங்கள் சமையலறையில் விரிசல்கள் இருந்தால் அதனை உடனடியாக சரிசெய்யுங்கள். ஏனெனில் சமையலறையில் இருக்கும் விரிசல்கள் உங்கள் குடும்பத்தில் உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்தும்.

சேதமடைந்த எலக்ட்ரானிக் பொருட்கள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் சமையலறையில் இருக்கும் சேதமடைந்த மின்னணு பொருட்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை ஈர்க்கின்றன. வேலை செய்யாத மிக்சி, உடைந்த மின்னனு பொருட்கள், கிரைண்டர், சுவிட்ச் போர்டு போன்றவற்றை உடனடியாக சமையலறையில் இருந்து அப்புறப்படுத்தவும்.

எறும்பு மற்றும் எலி
உங்கள் சமையலறையில் எலி, கரப்பான்பூச்சி, எறும்பு போன்றவை இருப்பது உங்களுக்கு சுகாதார பிரச்சினைகள் மட்டுமின்றி வாஸ்து பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். உங்கள் சமையலறையில் இவை இருந்தால் அது உங்கள் வீட்டில் வறுமை மற்றும் வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

எரியாத விளக்குகள்
உங்கள் சமையலறை உபயோகத்தில் இருக்கும் போது அது நிச்சயம் விளக்குடன் இருக்க வேண்டும். சமையலறையில் எப்பொழுதும் போதுமான வெளிச்சம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் இது உங்கள் வீட்டில் குழப்பத்தையும், மகிழ்ச்சியின்மையையும் ஏற்படுத்தும்.

அழுக்கான சமையலறை துண்டுகள்
உங்கள் சமையலறையில் அழுக்கான துண்டுகள் இருப்பது வாஸ்துவின் படி உங்கள் வீட்டில் நிதி இழப்புகளை ஏற்படுத்தும். எனவே சமையலறையில் உபயோகிக்கும் துணிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உடைந்த கண்ணாடி
சமையலறையில் உடைந்த கண்ணாடிகள் அல்லது ஜன்னல்கள் இருந்தால் அது விபத்துக்கள் மற்றும் சுகாதார ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

சிலந்தி வலைகள்
நீங்கள் வழக்கமாக சமையலறையைச் சுற்றி சிலந்தி வலைகளைக் கண்டால், அவற்றின் மூல காரணத்தை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி சிலந்தி வலைகள் சட்ட வழக்குகள் மற்றும் நீதிமன்ற அலைக்கழிப்புகளை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications