Latest Updates
-
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
இந்த 5 ராசிக்காரங்களுக்கு இந்த ஆண்டின் வரவிருக்கும் மாதங்களில் பண மழை எக்கச்சக்கமாக பொழியுமாம்!
வரவிருக்கும் மாதத்தில் பெரும்பாலும் அவர்களின் வேலையிலிருந்து, அவர்கள் எதிர்பாராத பண மழையைப் பெறப் போகிறார்கள். இது தொழில் வளர்ச்சி அல்லது பதவி உயர்வு ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும்.
ஒவ்வொரு நபருக்கும் அவரவர் அதிர்ஷ்டம் என்று ஒன்றுள்ளது. பலருக்கு இது சிறந்த ஆண்டாக இல்லை, சிலருக்கு இது மிகவும் நன்றாக இருக்கிறது. சில நேரங்களில் அவர்களை பார்த்து நாம் பொறாமைப்படுகிறோம். நமக்கும் இதுபோல் அதிர்ஷ்டம் வராதா என்று!.. அதிர்ஷ்டம் என்பது எப்போது யாருக்கும் அடிக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு சிலருக்கு ஆண்டின் தொடக்கத்திலே அதிர்ஷ்டம் தேடி வரலாம். சிலருக்கு ஆண்டின் நடுவிலே, இறுதியிலோ அதிர்ஷ்டம் தேடி வரலாம். இந்த 2022 ஆம் ஆண்டு சிலருக்கு அவர்களின் நிதி நிலைமைகளின் அடிப்படையில் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.

ஆம், ராசி அறிகுறிகளின் அடிப்படையில், 2022 ஆம் ஆண்டின் வரவிருக்கும் மாதங்களில் பணம் சம்பாதிக்கும் ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம். இந்த ராசிக்காரர்களுக்கு வருவருக்கும் மாதத்தில் பணம் வருமானம் அதிகரிக்குமாம்.

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு நல்ல பணம் வருமானம் இருக்குமாம். இவர்கள் செய்யும் தொழில் மூலமாக வரும் மாதங்களில் அதிக பணத்தை ஈட்ட வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் வழங்க இந்தப் பணம் போதுமானதாக இருக்கும். நல்ல நிதி வரவை அடைய கடினமாக உழைக்கக்கூடிய ராசிக்காரர்கள் இவர்கள். இந்த பண வரவு, அவர்கள் நீண்ட காலமாக உழைத்த ஒரு செயல்முறையால் கிடைக்கபோகும் அதிர்ஷ்ட யோகமாகும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு முதலீடுகள் செய்தது மற்றும் கடந்தகால கடின உழைப்பு இப்போது பலனளிக்கும் நேரம் இது. இந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே நல்ல திட்டமிடுபவர்கள் மற்றும் அவர்கள் நல்ல நேரத்தையும், முயற்சியையும், பணத்தையும் முதலீடு செய்திருக்கிறார்கள். பணமும் வளமும் மிகுதியாக அவர்களுக்கு கிடைக்கும் என்று அவர்களின் ராசி அடிப்படையில் ஜோதிடம் கூறுகிறது. மற்றவர்களுக்கு உதவ அது போதுமானதாக இருக்கும்.

துலாம்
நட்சத்திரம் என்பது நம்பிக்கை மற்றும் கனவுகள் நிறைவேறுவதை எப்போதும் குறிக்கும் ஒரு அடையாளம். துலாம் ராசி நேயர்கள் ஒரு கண்ணியமான திட்டத்தை உருவாக்கி, முதலீடு செய்வதற்கான வளங்களைச் சேகரிப்பார்கள். இதன்மூலம் ஒரு வருடத்தில், அவர்கள் தங்கள் முயற்சிகள், நேரம் மற்றும் முதலீடு ஆகியவற்றின் மூலம் நல்ல பணம் மற்றும் ஏராளமான வகையில் நல்ல வருமானத்தைப் பெறுவார்கள். இது உண்மைதான் என்றாலும், அவர்கள் தங்கள் தொழிலில் கூடுதல் முயற்சி எடுக்க ஆரம்பித்தவுடன், அவர்கள் பலன்களை பெற குறைந்தது 7-8 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

விருச்சிகம்
மனமும் உணர்ச்சிகளும் ஒரே திசையில் இருப்பதால், விருச்சிக ராசி நேயர்கள் இந்த ஆண்டு ஒரு பெரிய நிதி வருவாயை பெறுவார்கள். வரவிருக்கும் மாதத்தில் பெரும்பாலும் அவர்களின் வேலையிலிருந்து, அவர்கள் எதிர்பாராத பண மழையைப் பெறப் போகிறார்கள். இது தொழில் வளர்ச்சி அல்லது பதவி உயர்வு ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும். மேற்கூறிய சூழ்நிலையை அடைய இந்த ராசிக்காரர்கள் கடினமாக உழைக்கிறார்கள்.

தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு வீட்டை தேடி பணம் வரவு வருமாம். வரவிருக்கும் மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக அசுர வளர்ச்சியை அடைவார்களாம். ஆனால், அது உங்களுக்கு சில உணர்ச்சிகரமான பிரச்சனைகளையும் தரக்கூடும். அதனால், உங்களுக்கு வரும் பணத்தில் பெரும் பகுதியை இந்த ராசிக்காரர்கள் செலவழிக்கக்கூடும். ஏமாற்றமடைய வேண்டாம் என்றாலும், இந்த ஆண்டு உங்களுக்கு பெரிய அளவில் பணம் வரவு இருக்கும்.



Click it and Unblock the Notifications
