Latest Updates
-
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும்
இந்த 5 ராசிக்காரர்களின் நிதி நிலை 2022-இல் செம சூப்பரா இருக்குமாம்.. உங்களுக்கு எப்படி?
2022 ஆம் ஆண்டு கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து, எந்தெந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம் மற்றும் 2022 ஆம் ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். புதிய ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் முன்பு பலரது மனதிலும் எழும் ஓர் முக்கிய கேள்வியாக 'இந்த ஆண்டாவது பணப் பிரச்சனை இல்லாமல் நல்ல இருக்குமா' என்பது தான். இதற்காக பலர் ஜோதிடர்களிடம் சென்று தங்களின் ராசிக்கான பலனைத் தெரிந்து கொள்ள முயற்சிப்பார்கள்.

தற்போதைய காலக்கட்டத்தில் நிதி நிலைமை சிறப்பாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆகவே 2022 ஆம் ஆண்டு கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து, எந்தெந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுடைய ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சிம்மம்
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால், நிதி நிலைமை நீண்ட காலம் சிறப்பாக இருக்கும். ஜனவரி மற்றும் மார்ச் மாதத்தில் செவ்வாய் பெயர்ச்சியல் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் 6 ஆவது வீட்டில் இருப்பதால், தொழிலில் சாதனைகளைக் காண்பீர்கள். மேஷ ராசியில் ராகு பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்தில் எதிர்பாராத இடங்களில் இருந்து நல்ல செய்திகளை பெறுவார்கள். நவம்பர்-டிசம்பர் மாதங்களில், உறவுகளில் பதட்டங்கள் அதிகரிப்பதால் குடும்பத்தினருடன் சில கடினமான காலங்களை சந்திக்க நேரிடும். இந்த ஆண்டு கண்களில் வீக்கம், மங்கலான பார்வை அல்லது தலைவலி போன்ற பிரச்சனைகள் உங்களை தொந்தரவு செய்யலாம்.

கன்னி
நிதி செழிப்பு, எதிர்பாராத ஆரோக்கிய பிரச்சனைகள், கல்வியில் வெற்றி ஆகியவை கன்னி ராசியின் 2022 ஆம் ஆண்டின் சிறப்பம்சங்கள் ஆகும். 2022 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் முதல் செவ்வாய், புதன், சுக்கிரன், சனி ஆகிய நான்கு கிரகங்களின் சேர்க்கையால் இந்த ஆண்டு நிதி நிலைமை சாதகமாக இருக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் வேலை செய்ய விரும்புபவர்கள் இந்த ஆண்டின் இறுதியில் சாதகமான நேரத்தைக் காண்பார்கள். துலாம் ராசியில் புதன் சஞ்சரிப்பதால், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் காதல் வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியையும் தரும். வேலை தேடுபவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேலையைப் பெறுவார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 2022 வரை மிதமான காலமாக இருக்கும். இதற்கு காரணம் கும்பத்தில் சனி இருப்பது தான். நிதி நிலை, தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை போன்றவற்றில் சராசரி முடிவுகள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமையானது குரு மீனத்திற்கு ஏப்ரல் நடுப்பகுதியில் செல்லும் போது மேம்படும். மேலும், ஏப்ரல் நடுப்பகுதியில் ராகு தனது இடத்தை மாற்றுவதால், உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் குறையும். தொழிலைப் பொறுத்தவரை, புதிய முயற்சியைத் தொடங்குவது, தொலைதூர இடங்களுக்குச் செல்வது அல்லது வேலை மாற்றுவது பற்றி சிந்திக்க சிறந்த காலம். ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்க உண்ணும் உணவில் கவனம் செலுத்துவதோடு, உடற்பயிற்சியை தவறாமல் செய்ய வேண்டும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு நிதியைப் பொறுத்தவரை மிகவும் சாதகமான ஆண்டாகும். ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் உங்கள் ராசியில் இருப்பதால் நிதி முன்னேற்றம் தொடக்கத்தில் மிகவும் சிறப்பாக இருக்கிறது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கமானது மாணவர்களின் கடின உழைப்பும் தகுதியும் அங்கீகரிக்கப்படுவதால் அவர்களின் தன்னம்பிக்கை நிலை பன்மடங்கு அதிகரிக்கும். 7 ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பதால், குடும்ப உறுப்பினர்களிடையே குழப்பமான வாக்குவாதங்கள் ஏற்படலாம். பருவகால மாற்றங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கக்கூடும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கும் 2022 ஆம் ஆண்டு நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். இதற்கு ஜனவரியில் செவ்வாய் பெயர்ச்சி நடப்பது தான் காரணம். செவ்வாய், வீனஸ், புதன் மற்றும் சனி ஆகியவற்றின் சேர்க்கை மார்ச் 2022 இல் நடப்பதால், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். ஆவேசமான முடிவுகள் உங்களை ஆபத்தில் ஆழ்த்தலாம். எனவே அவசரமாக எந்த முடிவையும் எடுக்காதீர்கள். ஏப்ரல் 2022 இல், ராகு உங்கள் ராசியில் 3 ஆம் வீட்டிற்கு மாறும் போது கும்ப ராசியில் உள்ளவர்கள் உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வேலை அல்லது வியாபாரத்தில் போட்டிகள் மூலம் சவால்களை எதிர்கொள்ளலாம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீண்ட கால முதலீடுகள் உட்பட நிதி நிலைமையில் சாதகமான காலமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications