Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
தீபாவளியில் இருந்து இந்த 5 ராசிக்காரர்களின் பணப் பிரச்சனை தீரப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
பல முக்கிய கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதித்தாலும், சில ராசிக்காரர்கள் இந்த கிரகங்களின் ராசி மாற்றத்தால் தீபாவளியில் இருந்து பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள்.
இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 24 ஆம் தேதி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையானது பொதுவாக கார்த்திகை மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ அமாவாசை நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வரும் தீபாவளிக்கு முன் பல முக்கிய கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றுகின்றன.

அதில் 2022 அக்டோபர் 16 ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசிக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து அக்டோபர் 17 ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்கு செல்கிறார். அதன் பின் அக்டோபர் 18 ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்கிறார். இறுதியாக அக்டோபர் 23 ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடைந்து மகர ராசியில் நேர்கதியில் பயணிக்கத் தொடங்குகிறார். இப்படி பல முக்கிய கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதித்தாலும், சில ராசிக்காரர்கள் இந்த கிரகங்களின் ராசி மாற்றத்தால் தீபாவளியில் இருந்து பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசிலும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சுக்கிரன் மற்றும் சனி பகவானின் ராசி மாற்றம் மற்றும் நிலைகளால் நற்பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக தொழிலில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி ரீதியான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

மிதுனம்
சுக்கிரன் மற்றும் சனி பகவானின் ராசி மாற்றத்தால் மிதுன ராசிக்காரர்கள் தீபாவளியில் இருந்து தங்கள் துறைகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். சிக்கிய பணம் தீபாவளிக்கு பின் கைக்கு வந்து சேரும். நிதி நிலைமை சிறப்பாகவும், வலுவாகவும் இருக்கும்.

சிம்மம்
மிதுன ராசியில் செவ்வாயும், துலாம் ராசியில் சுக்கிரனும், சூரியனும் இருப்பதால், சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் லாபகரமானதாக இருக்கும். நிலத்தில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் நல்ல லாபகரமாக இருக்கும். இதுவரை பண பிரச்சனையை சந்தித்து வந்தால், தீபாவளியில் இருந்த அந்நிலைமை மாறும்.

விருச்சிகம்
அக்டோபரில் சூரியன் மற்றும் செவ்வாயின் ராசி மாற்றத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தீபாவளியில் இருந்து நல்ல பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் பொன்னான காலமாக இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் செவ்வாயின் ராசி மாற்றம் நல்ல பலன்களைத் தரும். வியாபாரம் செய்பவர்கள் நல்ல ஆதாயத்தைப் பெறுவார்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள். மேலும் இக்காலத்தில் நிலுவையில் உள்ள பணிகள் முடிக்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications