Just In
- 1 hr ago
உங்களுக்கு வயசாகாம எப்பவும் இளமையா ஜொலிக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 1 hr ago
ராசிப்படி கிருஷ்ணருக்கு எந்த பொருளை படைத்தால், அவரின் முழு அருள் கிடைக்கும் தெரியுமா?
- 1 hr ago
உங்கள் மூட்டுகளில் இந்த பிரச்சினை இருக்கா? அப்ப உங்க இதயம் ஆபத்தில் இருக்குனு அர்த்தம்... ஜாக்கிரதை!
- 2 hrs ago
இந்த 5 ராசிக்காரங்க எந்த உறவிலும் கடைசி வர உறுதியா இருக்க மாட்டாங்களாம்... ஏன் தெரியுமா?
Don't Miss
- News
அரசுப் பேருந்துகளில் பணமில்லா பரிவரித்தனை..டிஜிட்டல் டிக்கெட் - அசத்தல் அறிவிப்பு
- Sports
2 வீரர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் பயிற்சி.. ஜிம்பாப்வே தொடரில் கூடுதல் பொறுப்பு.. என்ன காரணம் தெரியுமா
- Finance
ஜூலை மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 13.93%..கொஞ்சம் பெட்டர் தான்!
- Technology
Moto G62 5G ரிவ்யூ- இந்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை வாங்கலாமா? வேண்டாமா?
- Movies
ரெண்டு பேரில் யார் வேண்டும்.. மகள் இனியாவிடம் சிக்கலின் முடிச்சை கொடுத்த பாக்கியா!
- Automobiles
எந்த பிரச்சனையும் இல்லை.. நடுவானிலேயே விமானிகள் அசந்து தூங்குவார்கள்... ஆனால் ஒன்று மட்டும் முக்கியம்...
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பார்கள். இங்கு ஒருவரை போல மற்றொருவர் இருப்பதில்லை. இது இயற்க்கை. ஒவ்வொரு மனிதரின் குணம் மற்றும் பழக்கவழக்கங்கள் பொறுத்து ஒவ்வொருவரும் வேறுபடுகிறோம். ஒரு சிலர் மிகவும் அமைதியானவர்களாக இருப்பார்கள். சிலர் மிகவும் பிடிவாதமாகவும், கோப குணமுடையவராகவும் இருக்கலாம். ஒரு பிடிவாதமான நபரை கையாள்வதை நீங்கள் மிகவும் சோர்வாக உணரலாம். அவர்களின் அணுகுமுறை கையாள மிகவும் வெறுப்பாக இருக்கும் மற்றும் சில நேரங்களில் அது உண்மையான தொல்லையாக இருக்கலாம். அவர்களுக்கு எவ்வளவுதான் புரிய வைக்க முயற்சித்தாலும், இப்படிப்பட்டவர்கள் தவறு செய்தாலும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து அவர்கள் அசைய மாட்டார்கள்.
இத்தகைய குணமுடையவர்களிடம் ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுடன் வாக்குவாதம் செய்வது எங்கும் வழிவகுக்காது. எனவே, மிகவும் பிடிவாதமாக இருக்கும் ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

மேஷம்
மேஷ ராசி நேயர்கள் மிகவும் கடுமையான மற்றும் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் ஆளுமை கொண்டவர்கள். இவர்கள் மனக்கிளர்ச்சி கொண்டவர்கள் மற்றும் யார் சொல்வதையும் எதையும் கேட்கவே மாட்டார்கள். மற்றவர்கள் காயப்படுத்தினாலும் இந்த ராசிக்காரர்கள் பின்வாங்க மாட்டார்கள். இந்த ராசிக்காரர்களின் பிடிவாதமான நடத்தை குறித்து அவர்களே மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களின் கருத்தை அவர்கள் எவ்வளவு பின்தொடர்ந்தாலும் மாற்ற முடியாது. ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள். யாராலும் அவர்களை நம்ப வைக்க முடியாது. இது சில சமயங்களில் எதிர்மறையான பண்பாக இருந்தாலும், அது அவர்களுக்கு சாதகமானதாக இருக்கும். அதே போல் இந்த பிடிவாத குணம் அவர்களின் இலக்குகளை அடைய உதவுகிறது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களிடம் யாரேனும் அறிவுரை வழங்க முயற்சிக்கும்போது, அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சூழ்நிலைகள் தெரிந்தாலும் கன்னி ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களின் கருத்துக்களைக் கையாள முயற்சி செய்கிறார்கள். யாரும் கன்னி ராசிக்காரருடன் இருக்க விரும்பாததற்கு இது ஒரு முக்கிய காரணம்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் எப்போது தவறு செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவே முடியாது. ஆனால் இன்னும் இறுதிவரை சண்டையிடுவார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர்கள் என்பதால், அவர்கள் தங்கள் உள்ளுணர்வை மட்டுமே நம்பக் கற்றுக்கொண்டனர். அதனால் மற்றவர்கள் புரிய வைக்க முயற்சிப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.

கும்பம்
கும்ப ராசி நேயர்கள் உங்கள் பேச்சை அமைதியாகக் கேட்பார்கள். ஆனால் அவர்களின் கருத்துக்களை மட்டுமே எப்போதும் முன்வைப்பார்கள். அவர்கள் இந்த அம்சத்தில் மிகவும் பிடிவாதமாக இருக்க முடியும் மற்றும் அவர்கள் செய்வது எப்போதும் சிறந்த வழி என்று இந்த ராசிக்காரர்கள் நினைக்கிறார்கள். கும்ப ராசிக்காரர்கள் தலைசிறந்தவர்கள் மற்றும் மற்றவர்களின் தாக்கத்திற்கு அடிபணிய மாட்டார்கள்.

இறுதி குறிப்பு
மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு மற்றும் மீனம் ராசிக்காரர்கள் மிகவும் அமைதியானவர்கள். அவர்கள் பிடிவாதமாக இல்லாமல், மற்றவர்களின் கருத்துக்களை பரிசீலிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் தயாராக உள்ளனர்.