Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உள்ளங்கையில் இந்த அடையாளம் இருந்தால், அவர்கள் நிச்சயம் பணக்காரர் ஆவார்களாம்.. உங்க கையில இருக்கான்னு பாருங்க..
கைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவரது கையில் உள்ள சில அடையாளங்கள் அதிர்ஷ்டங்களைக் குறிப்பதாக கூறப்படுகிறது. இம்மாதிரியான அடையாளங்கள் அனைவரது கைகளிலும் இருக்காது. அதிர்ஷ்டசாலிகள், பணக்காரராகும் திறன் கொண்டவர்களிடம் இருக்குமாம்.
பிறக்கும் போதே ஒருவரது விதி கையில் ரேகை வடிவில் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவரது உள்ளங்கையைப் பார்த்தால், அதில் பல்வேறு அடையாளங்கள் தென்படும். கைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவரது கையில் உள்ள சில அடையாளங்கள் அதிர்ஷ்டங்களைக் குறிப்பதாக கூறப்படுகிறது. இம்மாதிரியான அடையாளங்கள் அனைவரது கைகளிலும் இருக்காது. அதிர்ஷ்டசாலிகள் மற்றும் பணக்காரராகும் திறன் கொண்டவர்களிடம் இருக்குமாம்.

மேலும் இந்த அதிர்ஷ்ட அடையாளங்களை உள்ளங்கையில் கொண்டவர்கள் நிச்சயம் வாழ்நாளில் பணக்காரர் ஆவார்கள். அதோடு அத்தகையவர்கள் வாழ்வில் நிறைய பெயரையும், புகழையும் பெறுவார்கள். இப்போது உள்ளங்கையில் அதிர்ஷ்ட அடையாளங்களாக கருதப்படும் அந்த சின்னங்களைப் பற்றி காண்போம் வாருங்கள்.

மீன் அடையாளம்
ஒருவரது உள்ளங்கையில் மீன் அடையாளம் இருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த அடையாளத்தைக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். அதே வேளையில் வெளிநாட்டில் இருந்து பணத்தை அதிகம் சம்பாதிப்பார்களாம். அதோடு இவர்கள் அனைத்து பொருள் இன்பங்களையும் அனுபவிப்பார்களாம். இது தவிர, தனது முழு வாழ்க்கையையும் நல்ல பெயர், புகழுடன் இருப்பார்களாம்.

திரிசூலம் அடையாளம்
கைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவரின் கையில் பல்லக்கு அடையாளம் இருந்தால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இத்தகையவர்கள் ஆடம்பர வாழ்க்கையை நடத்துவார்கள். பணத்தை விரும்பிய படி சுதந்திரமாக செலவு செய்வார்கள். அதே வேளையில் அனைத்து வகையான வசதிகளையும் அனுபவிப்பார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகம் கொண்டிருப்பார்கள்.

ஸ்வஸ்திகா சின்னம்
ஒருவரது கையில் ஸ்வஸ்திகா சின்னம் இருந்தால், அந்நபர் ஒருபோதும் பணப்பிரச்சனையை சந்திக்கமாட்டார். இவர்களது கையில் எப்போதும் பணம் இருந்தவாறு இருக்கும். கல்வித் துறையிலும், அரசியலிலும் நல்ல பெயரை பெற்றிருப்பார்கள். சகல வசதிகளுடன் வாழ்க்கை வாழ்வார்கள். எந்த துறையிலும் உயர் பதவியில் இருப்பார்கள்.

கலச சின்னம்
கைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவரது கையில் கலச சின்னம் இருந்தால், அந்நபர் அனைவராலும் போற்றப்படுபவராக இருப்பார். மேலும் இவர்களுக்கு கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும். இவர்கள் வாழ்வில் மிகப்பெரிய நிலையில் இருப்பார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இது தவிர நிறைய மத யாத்திரைகளை மேற்கொள்வார்களாம்.

சூரியன் அடையாளம்
ஒருவரது கையில் சூரியனின் அடையாளம் இருந்தால், அந்நபர் நிச்சயம் பணக்காரராவதோடு, எந்த ஒரு துறையிலும் மிகப்பெரிய பதவியில் இருப்பார்கள். அதிகாரம் கொண்டவர்களாக இருப்பார்கள். சிறந்த தலைவர்களாக விளங்குவார்கள். சமுதாய நலனுக்காக உழைப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications