Just In
- 4 hrs ago
உங்க குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களை 50% தள்ளுபடி விலையில் இப்போதே அமேசானில் வாங்குங்கள்!
- 4 hrs ago
இந்த 7 விஷயம் கனவில் வந்தால் சீக்கிரம் பணக்காரர் ஆக போறீங்கன்னு அர்த்தம்...
- 4 hrs ago
உங்க ஆடையில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை இந்த முறைகளின் மூலம் இருந்த இடம் தெரியாமல் செய்யலாமாம்...!
- 4 hrs ago
எப்பவும் நீங்க அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க இந்த 5 விஷயங்கள பண்ணா போதுமாம் தெரியுமா?
Don't Miss
- Movies
விரைவில் ஓய்வுபெற போகிறேன்..பொன்னியின் செல்வன் விழாவில் விக்ரம் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- News
செல்போனில் ‘100’ போட்டோ! தோழிகளை ‘அந்த’ வேலைக்கு அழைத்த குயின் ‘ஸ்வேதா’! திடுக்கிட்ட திருப்பூர்..!
- Sports
பத்தே பந்து 3 விக்கெட்.. தென்னாப்பிரிக்கா அசுர வேக பந்துவீச்சு.. சிக்கி சின்னா பின்னமான இங்கிலாந்து
- Finance
870 பேர் பணி நீக்கம் செய்யப்படலாம்.. கவலையில் வேஃபேர் ஊழியர்கள்..!
- Automobiles
நாளைக்கு சொல்வதாக இருந்த தகவல் இப்பவே வெளியானது!.. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விபரம் வெளியீடு!
- Technology
பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் Xiaomi நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப்.!
- Travel
உலக புகைப்பட தினம் 2022: மாயஜால போட்டோக்களை எடுக்க நீங்கள் கட்டாயம் இந்த இடங்களுக்கு செல்ல வேண்டும்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
நீங்கள் வேலை செய்யும் இடத்தில் இந்த பொருட்களில் ஒன்றை வைப்பது வெற்றியையும், அதிர்ஷ்டத்தையும் ஈர்க்குமாம்!
அனைவருக்கும் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை ஈர்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும், ஆனால் அதற்கான வழிகள்தான் தெரிவதில்லை. அதிர்ஷ்டம் நம்மை நோக்கி வர நம்மைச் சுற்றி பாசிட்டிவான ஆற்றல்கள் இருக்க வேண்டியது அவசியம். வாஸ்து சாஸ்திரத்தின் படி சில பொருட்கள் பாசிட்டிவ் ஆற்றலை உருவாக்க முடியும்.
மணி பிளான்ட் செடி இத்தகைய அதிர்ஷ்டமான பொருட்களில் ஒன்றாகும், அதைப்போலவே அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை ஈர்க்கும் பல பொருள்கள் உள்ளன. இந்த பொருட்களை எளிதாக உங்கள் மேசையில் வைக்கலாம் ஆனால் உங்கள் அலுவலக மேசையில் அதிகமான பொருட்களை வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதில் ஒன்று அல்லது இரண்டு பொருட்களை உங்கள் பணி மேசையில் வைத்தால் போதும். உங்களை நோக்கி அதிர்ஷ்டத்தை அழைத்து வரும் பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சிரிக்கும் புத்தர்
இது உங்கள் வணிகத்திற்கான அதிர்ஷ்டமான மற்றும் வசீகரமான பொருளாகும். இது உங்கள் பணியிடத்திற்கு செல்வம், மகிழ்ச்சி மற்றும் மிகுதியை ஈர்க்கிறது. மிகச் சிறிய ஒன்றை வாங்காதீர்கள், பெரிய தொப்பையுடன் நடுத்தர அளவிலான ஒன்றை வாங்குங்கள். வயிறு எவ்வளவு வட்டமாக இருக்கிறதோ அவ்வளவு சிறப்பாக இருக்கும். தினமும் காலையில் அதன் வயிற்றைத் தேய்த்தால், உங்கள் விருப்பம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இருபுறமும் மேசையில் வைக்கவும், குறிப்பாக தென்மேற்கு மூலையில் வைக்கவும்.

ட்ராகன்
ஃபெங் சுய் அங்கீகரிக்கப்பட்ட தங்க டிராகனைப் வாங்கி, அதை புத்தருக்கு அருகில் அல்லது அதன் எதிர் பக்கத்தில் வைக்கவும். ஃபெங் சுய் மற்றும் சீன கலாச்சாரத்தின் படி ஒரு டிராகன் சக்தியின் அதிர்ஷ்ட சின்னம் மற்றும் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இது வெற்றியை ஈர்க்கும் சக்தியாக இருக்க வேண்டும், எனவே ஒரு நல்ல சிலையைப் பெறுங்கள்.

சிங் நாணயங்கள்
வெண்கல நிறத்தில் சதுரமாக வெட்டப்பட்ட மையத்துடன் வட்ட நாணயங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். சிவப்பு பட்டு அல்லது கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் இந்த நாணயங்கள் நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகின்றன. வட்ட வடிவம் சொர்க்கத்தைக் குறிக்கிறது மற்றும் சதுர வெட்டு பூமியின் சின்னமாகும். அதிக சில்லறை அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் என்ற வகையில், அவற்றை உங்கள் மேசை அல்லது கதவு கைப்பிடியில் தொங்க விடுங்கள்.

பணத்தவளை
பணத் தவளைகள் செல்வத்தை ஈர்க்கின்றன, அது தங்கம் அல்லது பீங்கான் ஆகியவற்றால் ஆனது. இது செழிப்பின் முக்கியமான சின்னமாகும். தங்கமானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் உங்கள் மேசையின் நுழைவாயில் அல்லது வடக்குப் பகுதிக்கு அருகில் வைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அது வெளிப்புறமாக அல்ல, உள்நோக்கி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஊதுவத்திகள்
காலையில் ஊதுவத்திகளை எரிப்பதன் மூலம், உங்கள் வழியில் வரும் செழிப்பைத் தடுக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டுங்கள். வணிக உரிமையாளர்களால் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் சிவப்பு நிறங்கள் சிறந்தவை.