Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
இந்த 5 ராசிக்கார பெண்கள் மிகவும் வலிமையானவங்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க ஆண்களே!
தனுசு ராசிக்கார பெண்கள் நம்பிக்கையானவர்கள், வேடிக்கையானவர்கள் மற்றும் உற்சாகமானவர்கள். ஆனால் அவர்களின் கடினமான காலங்களில் பலவீனமாக வீழ்ச்சியடைகிறார்கள் என்று எதிர்பார்க்க முடியாது
பெண்கள் என்றாலே, மிகவும் மென்மையானவர்கள் மற்றும் சாந்தமானவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களால் வலிமையானவர்களாகவும் ஆளுமை மிக்கவர்களாகவும் இருக்க முடியாது என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வலிமையையும் ஆளுமையையும் நாம் காண்கிறோம். ஆனால், இன்னும் பல பெண்கள் தங்களை வலிமையற்றவர்களாகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இயற்கையாகவே சில பெண்களுக்கு மிகவும் சக்திவாய்ந்த ஒளி உள்ளது. அது அவர்களை வலிமையானவர்களாகவும் வெல்ல முடியாதவர்களாகவும் ஆக்குகிறது. அவர்கள் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். அவர்கள் எல்லாவற்றிலுமே தனியாக நின்று ஜெயிக்கிறார்கள்.

இந்த பெண்கள் ஒரு சிறந்த சண்டை மனப்பான்மையைக் கொண்டுள்ளனர், அது மிகவும் போற்றத்தக்கது. உத்வேகத்திற்காக அவர்களை எதிர்பார்க்கும் இளைய தலைமுறையினருக்கு வலிமையான பெண்கள் சிறந்த முன்மாதிரிகள். இவர்களை அடையாளம் காண ஜோதிடம் நமக்கு உதவும். எனவே, மிகவும் சக்திவாய்ந்த பெண் ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்கார பெண்கள் மிகவும் பிடிவாதமானவர்கள் மற்றும் வலுவானவர்கள். அவர்கள் யாருக்கும் பயப்படுவதில்லை. அவர்கள் விரும்பியதைப் பெறுவதில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்கள். இந்த ராசிக்காரர்களின் பிடிவாதமானது அவர்களின் வலிமையான இதயத்தை உயிர்ப்பிக்கும் நெருப்பாக செயல்படுகிறது. வாழ்க்கையில் அனைத்து கடினமான பிரச்சனைகளுக்கு மத்தியில், இந்த ராசி பெண்கள் தங்கள் பிரச்சினைகளை தனியாக சமாளிக்க கற்றுக்கொண்டனர். இவர்கள் நெருப்புபோல செயல்படுவார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் அச்சமற்றவர்கள். அவர்கள் ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கு பயப்படுவதில்லை. ஏனென்றால் அவர்கள் வாழ்க்கையில் எல்லா உயர்வையும் தாழ்வையும் அனுபவிக்க விரும்புகிறார்கள். அவர்கள் ஒரு வகையான மற்றும் வலிமையின் உருவகமாக உள்ளனர். எப்பொழுதும் சரியாக இல்லாவிட்டாலும், எந்த பிரச்சனையையும் தீர்க்கும் திறன் அவர்களிடம் உள்ளது. சிம்ம ராசிக்கார பெண்கள் சிங்கம்போல வலிமையாக செயல்படுவார்கள்.

கன்னி
கன்னி ராசிக்கார பெண்கள் கடினமானவர்கள் மற்றும் தைரியமான அணுகுமுறை கொண்டவர்கள். அவர்கள் யாரையும் தங்கள் வளர்ச்சியை பாதிக்க அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் விரும்பும் விஷயங்களை பெற கடுமையாக முயற்சி செய்வார்கள் மற்றும் அவர்களின் வாழ்நாள் கனவுகளை அடைவதை யாராலும் தடுக்க முடியாது. இதனால், இந்த ராசிக்கார பெண்களின் தளராத மற்றும் அசையாத உள்ளம் அனைவருக்கும் உத்வேகமாக விளங்குகிறது.

தனுசு
தனுசு ராசிக்கார பெண்கள் நம்பிக்கையானவர்கள், வேடிக்கையானவர்கள் மற்றும் உற்சாகமானவர்கள். ஆனால் அவர்களின் கடினமான காலங்களில் பலவீனமாக வீழ்ச்சியடைகிறார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், அவர்கள் மிகவும் வலிமையானவர்கள் மற்றும் மிகவும் எதிர்மறையான சூழ்நிலைகளில் நேர்மறையான ஒளியைக் காணும் திறனைக் கொண்டுள்ளனர். எதிர்மறையான எண்ணங்கள் அவர்களின் மனநிலையைப் பாதிக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் வலிமையானவர்கள், நம்பிக்கையானவர்கள் மற்றும் கட்டளையிடும் மனப்பான்மை கொண்டவர்கள். மேலும், அவர்கள் அதிகாரம் கொண்டவர்களாகவும் சுதந்திரமானவர்கவும் இருக்கிறார்கள். இந்த ராசிக்கார பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் யாருடைய ஆதரவும் அவர்களுக்கு தேவையில்லை. அவர்கள் உயர்ந்த மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளைக் கொண்டிருப்பதால் அவர்கள் சிறந்த தலைவர்களையும் உருவாக்குகிறார்கள்.

இதர ராசிக்காரர்கள்
மேஷம், மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளைச் சேர்ந்த பெண்கள் ஒப்பீட்டளவில் சாந்தகுணமுள்ளவர்கள். மற்றவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அவர்கள் வலிமையாக இருப்பதில்லை. இந்த ராசிக்கார பெண்கள் சில சமயங்களில் மிகவும் உணர்திறன் மற்றும் மென்மையான மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications











