For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கும் எகிப்திய மம்மிக்கும் உள்ள உறையவைக்கும் ரகசியதொடர்பு என்ன தெரியுமா?

|

அனைத்தும் அறிவியலின் மூலம் சாத்தியம் என்று கூறும் இந்த காலக்கட்டத்திலும் அறிவியலால் கூட விவரிக்க முடியாத அல்லது கண்டறிய முடியாத பல அதிசயங்களும், ரகசியங்களும் பூமியில் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் எகிப்தில் இருக்கும் பிரமிடுகள் பற்றி உலகம் முழுவதும் பல கட்டுக்கதைகள் உலவி வருகிறது.

The Titanic And The Temple Of Doom

சிலர் இதற்கு பின்னால் வேற்றுகிரகவாசிகள் இருப்பதாக கூறுகிறார்கள், சிலர் இதற்கு பின்னால் ஆவிகள் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இவை அனைத்தையும் காட்டிலும் இவற்றிற்கு பின்னால் இருக்கும் மர்மம் என்னவெனில் ஸ்பின்க்சின் மர்மமும், மன்னர் டுட்டன்காமூன் அளித்த சாபமும் பற்றியதுதான். அது என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரபலமான சாபம்

பிரபலமான சாபம்

1910 ஆம் ஆண்டு எகிப்தியலாளர் டக்ளஸ் முர்ரே ஒரு அமெரிக்கனால் தேடப்பட்டார். கி.மு. 1600 இல் தீபஸில் வாழ்ந்ததாகக் கூறப்படும் அம்மோன்-ரா என்னும் கோவிலின் ஒரு பண்டைய எகிப்திய உயர் வகுப்பினரின் மம்மி சவப்பெட்டியை ஒப்படைப்பதாகக் கூறினார், இது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகவும் இருக்கும் என்று கூறினார். டக்ளஸ் முர்ரே அந்த அமெரிக்கன் கேட்ட பணத்தை காசோலையில் கொடுத்தார், அந்த பணம் பேங்க் ஆப் லண்டனில் இருந்து எடுக்கப்பட்டது, ஆனால் அன்று இரவே அந்த அமெரிக்கன் மர்மமான முறையில் இறந்தார், இன்று வரை அவர் எப்படி இறந்தார் என்று கண்டறியப்படவில்லை.

மம்மிக்குப் பின்னால் இருக்கும் புராணக்கதை

மம்மிக்குப் பின்னால் இருக்கும் புராணக்கதை

முர்ரேயின் சக ஊழியர் ஒருவர் தனது புதிய வாங்குதலின் பின்னணியில் உள்ள புராணத்தை அவரிடம் கூறினார். அதன்படி அவர் எகிப்திய கோவிலில் இறந்தவர்களின் வழிபாட்டில் உயர்பதவியில் இருந்தார் அவர் நைல் பள்ளத்தாக்கில் இருந்த வளமான நிலங்களை தரிசு நிலமாக மாற்றினார். அவளுடைய கல்லறையில் எழுதப்பட்டிருந்த வாசகம் என்னவெனில் அவள் ஓய்வெடுக்கும் இடத்திற்கு தீங்கு விளைவிக்கும் யாருக்கும் மரணம் ஏற்படும் என்று எழுதப்பட்டிருந்தது.

MOST READ: இந்த சாதாரண செயல்களால்தான் நம்முடைய ஆயுள் குறைவதாக சாணக்கியர் கூறுகிறார்...!

முர்ரேவின் துரதிர்ஷ்டம்

முர்ரேவின் துரதிர்ஷ்டம்

மூன்று நாட்களுக்கு பிறகு முர்ரே வேட்டையில் இருந்தபோது அவரின் துப்பாக்கி அவர் கையிலேயே வெடித்தது. இதனால் அவர் பல மாதங்களை மருத்துவமனையில் வலியுடன் கழிக்க நேர்ந்தது. அந்த காயத்தில் தொற்றுநோய் ஏற்பட்டு இறுதியில் அவரின் கை வெட்டி எடுக்கப்பட்டது. உடல்நிலை சரியானதும் அவர் இங்கிலாந்திற்கு பயணம் செய்தார். அப்போது அந்த கல்லறையை கையாண்ட இரண்டு எகிப்திய ஊழியர்கள் அதன் அருகில் இறந்து கிடந்தனர்.

லண்டனில் நடந்தது

லண்டனில் நடந்தது

லண்டனுக்கு வந்ததும் முர்ரே தன்னிடம் இருந்த சவப்பெட்டியை ஆராயத் தொடங்கினார். அதில் தங்கத்தில் செதுக்கப்பட்டிருந்த அந்த பெண்ணின் முகத்தை ஆராய்ந்தார், தன் நண்பர்களிடம் கூறும்போது " அந்த பார்வை உயிருடன் எழுந்து வருவது போலவும், நம்முடைய எலும்புகளில் பயத்தை பரவச் செய்வதாகவும் "கூறினார். அந்த கல்லறையை விட்டு விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று முர்ரே உணர்ந்தபோது அவரின் தோழி அதனை விற்றுவிடும்படி கூறினார். அடுத்த சில வாரங்களிலேயே அவர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டார்.

பிரிட்டிஷ் அருங்காட்சியகம்

பிரிட்டிஷ் அருங்காட்சியகம்

முர்ரே அந்த கல்லறையை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு வழங்கிவிட்டார், அங்கு அந்த சாபம் வேலை செய்யாது என்று அவர் நம்பினார். ஆனால் அந்த சவப்பெட்டியை புகைப்படம் எடுத்தவர், அந்த சவப்பெட்டியை பாதுகாத்தவர் என பலரும் தொடர்ந்து இறந்து கொண்டே இருந்தனர். இந்த நிகழ்வுகளால் அச்சமுற்ற அந்த அருங்காட்சியகத்தின் தலைவர் ஹொன்ச்சோ தனிப்பட்ட முறையில் சந்தித்து ஒருமனதாக நியூயார்க் அருங்காட்சியகத்திற்கு அதனை வழங்க முடிவு செய்தார்.

MOST READ: இந்த விரல் சின்னதாக இருக்கும் பெண்கள் உண்மையிலேயே சிங்கப் பெண்களாக இருப்பாங்களாம் தெரியுமா?

கடலுக்கு அடியில்

கடலுக்கு அடியில்

இந்த சவப்பெட்டி 1912 ஆம் ஆண்டு எந்த ஆரவாரமும் இன்றி அனுப்பிவைக்கப்பட்டது, ஆனால் இது நியூயார்க் சென்று சேரவில்லை, ஏனெனில் இது அனுப்பி வைக்கப்பட்டது டைட்டானிக் கப்பலில், 1517 பேரின் ஆன்மாக்களுடன் இது ஆழ்கடலில் மூழ்கியது. டைட்டானிக் மூழ்கிய பல ஆண்டுகளுக்கு பிறகே அந்த சவப்பெட்டி அதில் இருந்த தகவல் வெளியே வந்தது. இது எதார்த்தமாக நடந்ததாகக்கூட இருக்கலாம், ஆனால் எகிப்து பிரமிடுகள் மீது நம்பிக்கையும், பயமும் கொண்டவர்கள் இதனால்தான் டைட்டானிக் மூழ்கியதாக நம்பினார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Titanic And The Temple Of Doom

Read to know what is the connection between the Titanic and the mystery of the Pyramids.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more