For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கார்த்திகை தீபம் கொண்டாட ஒரு எலி தான் காரணம் - எப்படி தெரியுமா?

|

அன்னை பார்வதி தேவிக்கு பவுர்ணமி தினத்தில் சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது சிவபெருமான காட்சி கொடுத்த தினமே திருக்கார்த்திகை தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது என்று சொல்வதுண்டு. அதே போல, மஹாபலி சக்கரவர்த்திக்கு ஜோதி வடிவாக காட்சி கொடுத்த நாளே திருக்கார்த்திகை தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது என்றும் சொல்வதுண்டு.

The History of Karthigai Deepa Thirunal

காசிக்கு சென்று கங்கையில் குளித்தால் தான் முக்தி கிடைக்கும், ராமேஸ்வரத்திற்கு சென்றால் தான் முக்தி கிடைக்கும், ஆனால், இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு, ஜோதிப் பிளம்பான அருணாச்சலேஸ்வரரை நினைத்தாலே முக்தி தரும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

இன்னிக்கு இந்த ராசிக்காரங்க நாக்குல தான் சனி இருக்கு... ஜாக்கிரதையா பேசுங்க...

நாம் அனைவரும் சிறு வயதில், கார்த்திகை தீபத்திருநாள் அன்று, கையில் மெழுகுவர்த்தியை ஏந்திக்கொண்டு வீதிகளை சுற்றிவந்திருப்போம். ஒரு நாள் விடுமுறை கிடைத்ததா, அந்த சந்தோஷத்தை நன்றாக அனுபவிப்போம் என்று துள்ளிக் குதித்து, தீபத்திருநாளன்று வீதிகளில் சொக்கப்பனையை கொழுத்திப் போட்டு பொழுதைக் கழித்து மகிழ்ந்திருப்போம். ஆனால் அதற்கான உண்மையான காரணம் என்னவென்று அப்போது நமக்கு தெரியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சங்க இலக்கியத்தில் திருக்கார்த்திகை

சங்க இலக்கியத்தில் திருக்கார்த்திகை

கார்த்திகை தீபத்திருநாள் என்பது தமிழ்நாட்டில் சங்க காலத்தில் இருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. பழந்தமிழர்களின் இலக்கியங்களில் ஒன்றான அகநானூறு செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட

தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப்

புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழி

தூதொடு வந்த மழை

என்ற செய்யுளில் கார்த்திகை தீபத்திருநாளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. ‘தலைநாள் விளக்கின்' என்ற வரியின் மூலம் இந்த விழா பல நாள் கொண்டாடப்படும் விழா என்று அறிய முடிகிறது.

குமாரசம்பவத்தில் திருக்கார்த்திகை

குமாரசம்பவத்தில் திருக்கார்த்திகை

அதே போல், கி.மு 1ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முதலாம் சந்திரகுப்தர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த மகாகவி காளிதாசரும், தமிழர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிப்போன திருக்கார்த்திகை தீபத்திருநாள் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவர் இயற்றிய குமாரசம்பவம் என்னும் நூலில் இது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணி என்ற காப்பியத்திலும் திருக்கார்த்திகை தீபம் பற்றி குறிப்புகள் உள்ளன.

குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன

கடிகமழ் குவளை பைந்தார்

என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்த்திகையில் கண்விழிக்கும் மஹாவிஷ்ணு

கார்த்திகையில் கண்விழிக்கும் மஹாவிஷ்ணு

மேலும், மஹாவிஷ்ணு கார்த்திகை மாதத்தில் தான் கண்விழித்து எழுவதாக வைணவர்கள் குறிப்பிடுகின்றனர். வைணவ ஆலயங்களில் கார்த்திகை தீபத்திருவிழா ஐந்து நாட்கள் நடைபெறும். ஐந்தாம் நாளான மகா தீபத்திருநாள் அன்று தானம் வழங்கியும் திருப்பணி செய்தும் இறைவனை வழிபட்டு மகிழ்வார்கள். இது பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியமான நற்றிணையில் உள்ளன.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

பஞ்சபூத தலங்களில் முக்கியமான நெருப்பு தலமான திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருநாள் இவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும், கார்த்திகை தீபத்திருநாள் எவ்வாறு உண்டானது என்பதற்கு பல கதைகள் கூறப்படுகின்றன.

இருளில் மூழ்கிய பிரபஞ்சம்

இருளில் மூழ்கிய பிரபஞ்சம்

அதில் ஒன்று, ஒரு சமயம் அன்னை பார்வதி தேவி எம்பெருமான் ஈசனின் கண்களை விளையாட்டாக தன்னுடைய கைகைளால் மறைத்தார். அதனால் இந்த பிரபஞ்சமே இருளில் மூழ்கி, உலக உயிர்கள் அனைத்தும் துயரில் ஆழ்ந்தன. இச்செயலால் அன்னை பார்வதி தேவிக்கு பாவம் உண்டானது. பாப விமோசனம் தேடி, காஞ்சிபுரத்திற்கு வந்து கடுந்தவத்தில் ஆழ்ந்தார்.

பார்வதிக்கு காட்சியளித்த சிவபெருமான்

பார்வதிக்கு காட்சியளித்த சிவபெருமான்

அப்போது காட்சியளித்த சிவபெருமான், திருக்கார்த்திகை நன்னாளில் திருவண்ணாமலைக்கு வரும்படி அருள்புரிந்தார். ஈசனின் கட்டளைப்படியே பார்வதி தேவியும், திருவண்ணாமலை வந்து, அங்குள்ள பவளக்குன்று மலையில் வசித்து வந்த கவுதம மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவமிருந்தார். பவுர்ணமி நாளில் சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் வேளை வந்தது. அப்போது எம்பெருமான ஈசன் அன்னை பார்வதிக்கு காட்சி கொடுத்து, இடபாகத்தில் ஏற்று அருள்பாலித்தார். அந்த நாளே திருக்கார்த்திகை என்று கொண்டாடப்படுகிறது.

விளக்கை தூண்டிய எலி

விளக்கை தூண்டிய எலி

திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுவதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. ஒரு சமயம் திருக்கைலாயத்தில், நெய்யிட்ட விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு அணையும் தருணத்தில் எலி ஒன்று அங்கு வந்தது. நெய்யின் வாசனையை அறிந்து அதை உண்ண நினைத்து திரியை இழுத்தது. அப்போது திரி தூண்டப்பட்டு தீபம் பிரகாசமாக எரிய ஆரம்பித்து.

மஹாபலியாக மாறிய எலி

மஹாபலியாக மாறிய எலி

இதனால், ஒளியைத் தூண்டிவிட்ட எலியின் முன்பு சிவபெருமான காட்சி கொடுத்து மானிடப் பிறவி எடுத்து ராஜயோக வாழ்வும் தந்து அருள்புரிந்தார். அந்த எலியே மறு ஜென்மத்தில் மஹாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தார். எண்ணற்ற செல்வங்களோடு ஏகபோகமாக செருக்கோடு வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அகங்காரத்துடன் கோவிலுக்கு சென்றார்.

மஹாபலிக்கு அருளிய சிவன்

மஹாபலிக்கு அருளிய சிவன்

அங்கு பட்டாடை தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி மஹாபலி சக்கரவர்த்தியின் மீது பட்டு பற்றி எரிந்து உடர் புண்ணானது. உடனடியாக அகந்தை அகன்ற மஹாபலி தன்னுடைய இரு கைகளையும் கூப்பி சிவபெருமான வேண்டி, தன்னுடைய உடலில் ஏற்பட்ட தீக்காயத்தை போக்கி தன்னை காத்தருளுமாறு வேண்டினார். தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு தினமும் கோவிலில் தீபங்களை ஏற்றி தொழுது வா, காலப்போக்கில் அந்த நோய் நீங்கப்பெற்று இன்புறுவாய் என்று அசரீரியாக சொல்வதைக் கேட்டு மன்னன் மஹாபலி மகிழ்ந்தான்.

ஜோதி வடிவில் சிவபெருமான்

ஜோதி வடிவில் சிவபெருமான்

தினமும் கோவிலுக்கு சென்று வரிசையாக நெய் தீபங்களை ஏற்று வழிபட்டு வந்தான். இவ்விதம், தினந்தோறும் கோவிலில் தீபம் ஏற்றி வந்த போது, கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் கிருத்திகை நட்சத்திரல் சந்திரன் சஞ்சரிக்கும் வேளையில், ஈசன் மனமகிழ்ந்து ஜோதி வடிவில் வந்து ஒளிப்பிழம்பாக மஹாபலிக்கு காட்சி கொடுத்தார். உடனடியாக மஹாபலியின் நோய் நீங்கியது. இவ்வாறு, மஹாபலி சக்கரவர்த்தி தொடங்கி வைத்த தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது என்றும் சொல்வதுண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The History of Karthigai Deepa Thirunal

It is said that Thirukarthigai is celebrated as Deepa Thirunal on the day when Moon appears in the Karthigai star on full moon day.
Story first published: Thursday, December 5, 2019, 10:43 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more