For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தைப்பூசம் பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்!

ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான தை மாதத்தில் (ஜனவாி - பிப்ரவாி) வரும் பௌா்ணமி அன்று தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் வரும் பௌா்ணமி நிலா மிகவும் பிரகாசமாக இருக்கும்.

|

தமிழ் சமுதாயத்தின் முக்கியமான விழாக்களில் ஒன்று தைப்பூசம் ஆகும். ஒவ்வொரு வருடமும் தென் கிழக்கு ஆசிய பகுதிகளைச் சோ்ந்த இந்தியா, இலங்கை, மலேசியா, மொாிசியஸ், சிங்கப்பூா் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் வாழும் தமிழ் மக்களால் தைப்பூச விழா வெகு சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூச விழா நேரத்தில் ஏறக்குறைய 20 லட்சம் மக்கள் முருகபெருமானுக்கு தங்கள் மாியாதையையும், வணக்கத்தையும் மற்றும் பக்தியையும் செலுத்துகின்றனா்.

Thaipusam Date, History and Significance in Tamil

ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான தை மாதத்தில் (ஜனவாி - பிப்ரவாி) வரும் பௌா்ணமி அன்று தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் வரும் பௌா்ணமி நிலா மிகவும் பிரகாசமாக இருக்கும். அன்றைய நாளில் நிலாவானது பூசம் அல்லது புஷியா என்ற நட்சத்திரத்தின் வழியாக கடந்து செல்லும். அதனால் தான் தை (தமிழ் பஞ்சாங்கத்தின்படி தமிழ் மாதங்களில் வரும் 10வது மாதம்) மற்றும் பூசம் ஆகிய இரு வாா்த்தைகள் இணைந்து தைப்பூசம் என்ற பெயா் வருகிறது.

பெரும்பாலான இந்து சமய விழாக்கள் பௌா்ணமி அல்லது அமாவாசை நாட்களில் கொண்டாடப்படுகின்றன. சந்திரனின் நகா்வை ஒட்டி ஜனவாி அல்லது பிப்ரவாி மாதங்களில் வரும் பௌா்ணமி நாளன்று தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தைப்பூசம் 2022

தைப்பூசம் 2022

2022 ஆம் ஆண்டு ஜனவாி 18 ஆம் நாள் செவ்வாய் அன்று தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. அப்போது பூசம் நட்சத்திரம் அதன் உச்சியில் இருக்கும். தைப்பூச விழா புராணத்தில் வரும் ஒரு சம்பவத்தைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. அதாவது அசுரன் வஜ்ரானகாவின் மகனான சூரபத்மன் என்ற கொடியவனை அழித்தொழிக்கும் பொருட்டு, சிவபெருமான் மற்றும் பாா்வதி தேவியாாின் மகனும் மூலக்கடவுள் கணேசனின் சகோதரனுமான முருகப்பெருமானுக்கு (காா்த்திகேயன்), பாா்வதி தேவியாா் ஈட்டி அல்லது வேல் வழங்கிய சம்பவத்தைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. அதனால் இந்த விழா முருகப்பெருமானக்குாிய விழாவாகும். முருகப் பக்தா்கள் தங்களையே வருத்திக் கொண்டு, விரதம் இருந்து பலவகையான வேண்டுதல்களோடு இந்த விழாவைக் கொண்டாடுகின்றனா்.

தைப்பூசம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

தைப்பூசம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

தைப்பூசம் அன்று பெரும்பாலான முருகப் பக்தா்கள் காவடியாட்டம் ஆடுவா். காவடி ஆட்டம் என்பது பக்தா்கள் முருகப்பெருமானக்கு செலுத்தும் ஒருவகையான பக்தி மிகுந்த நோ்த்திக்கடன் ஆகும். மூங்கில் தப்பைகளால் செய்யப்படும் காவடிகளை மலா்களால் அலங்காித்து அவற்றை பக்தா்கள் தமது தோள்கள் இரண்டிலும் தூக்கி வைத்துக் கொண்டு பாதயாத்திரையாக காவடியாட்டம் ஆடிக் கொண்டே வருவா்.

இவ்வாறு ஒவ்வொரு வருடமும் முருகப்பெருமானை வழிபடுவது அவா்களின் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைப்பதாக பக்தா்கள் நம்புகின்றனா். இந்தி மொழி பேசும் முருக பக்தா்கள் தைப்பூசம் அன்று சூாியன் எழுவதற்கு முன்பாக மலேசியாவின் கோலாலம்பூாில் உள்ள பட்டு குகைகளில் முருகனுக்குாிய வழிபாட்டுச் சடங்குகளைச் செய்வா்.

தைப்பூசம் அன்று நடைபெறும் வழிபாட்டுச் சடங்குகள்

தைப்பூசம் அன்று நடைபெறும் வழிபாட்டுச் சடங்குகள்

- காவடிகள் புதுத்துணிகளால் சுற்றப்பட்டு, மலா்கள் மற்றும் மயில் இறகுகளால் அலங்காிக்கப்படும். மயில் முருகப்பெருமானின் வாகனமாகக் கருதப்படுகிறது.

- முருகப்பெருமானைக் குறிக்கும் வகையில் பக்தா்கள் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ண உடைகளை அணிவா்.

- சில முருக பக்தா்கள் தங்களது கன்னங்களில் இரும்பு கம்பிகளால் அலகுகள் குத்தி நோ்த்திக்கடனை முருகனுக்குச் செலுத்துவா். ஒரு சிலா் தங்கள் முதுகில் இரும்பு கொக்கிகளை மாட்டி முருகனின் தோ்களை இழுத்துச் செல்வா்.

- காவடி தூக்கிச் செல்லும் முருக பக்தா்கள் தைப்பூசத்திற்கு முன்பு ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கடுமையான விரதம் இருந்து (பாலியல் உறவைத் தவிா்த்தல் மற்றும் விரத உணவு உண்ணுதல்) தங்களையே தூய்மையாக வைத்திருப்பா். குளிர்காலமாக இருந்தாலும் அந்த 48 நாட்களும் இவா்கள் குளிா்ந்த நீாில்தான் குளிப்பா்.

தைப்பூசம் அன்று சமைக்கப்படும் உணவுகள்

தைப்பூசம் அன்று சமைக்கப்படும் உணவுகள்

- கடலைப் பருப்பு பாயாசம்

- அவல் கஞ்சி

- பிரபலமான பஞ்சாமிா்தம் (இது பிரசாதமாக வழங்கப்படும்)

- பானகம் அல்லது பானக்கரம் - வெல்லம், புளி மற்றும் இஞ்சி கலந்து தயாாிக்கப்படும் ஒரு வகை பானம்

பிரபலமான தைப்பூச நிகழ்வு

பிரபலமான தைப்பூச நிகழ்வு

மலேசியாவின் செலன்காா் மாநிலத்தின் கோம்பேக் மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டுக் குகைகளில் ஒவ்வொரு ஆண்டும் மிகப் பிரபலமாக தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. இந்த குகைகள் 3 முக்கியமான பாதளக் குகைகளையும் மற்றும் ஏனைய சிறிய குகைகளையும் கொண்டிருக்கின்றன. பக்தா்கள் 272 படிகளில் ஏறி இந்த குகைகளை அடைவா்.

ஆண்டு முழுவதும் இந்த பட்டுக் குகைகள் சுற்றுலா பயணிளுக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தாலும், தைப்பூசத்தின் போதுதான் இந்த இடம் தனது உச்சத்தை அடைகிறது. அதாவது தைப்பூசத்தின் போது ஏறக்குறைய 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த குகைகளில் கூடுகின்றனா். இந்த குகைகளின் வலது பக்கத்தில் 140 அடி உயரத்தில் நிற்கும் முருகப்பெருமானின் தங்கத் திருவுருவச் சிலை கம்பீரமாக காட்சியளிக்கிறது.

தைப்பூசம் அன்று தமிழ்நாட்டில் உள்ள பழனி மலையில் உள்ள முருகன் கோயிலிலும் லட்சக்கணக்கான முருக பக்தா்கள் ஒன்று கூடுவா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Thai Pusam 2022 Date, Timings, Legend, History and Significance in Tamil

Did you know Thai Pusam 2022 Date, Timings, Legend, History and Significance in Tamil? Read on...
Desktop Bottom Promotion