For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தை பொங்கல் ஸ்பெஷல்… தை பிறந்தால் வழி பிறக்கும் ஏன் எப்படி எதற்கு தெரியுமா?

|

தமிழ் வருடத்தின் 10 ஆவது மாதமாக வருவது தை மாதம். இந்த மாதத்தில் தான் சூரியன் தனுசு ராசியில் இருந்து வெளியேறி மகர ராசிக்குள் நுழைந்து சுமார் 29 நாட்கள், 27 நிமிடம், 16 விநாடிகள் இருப்பார். பண்டைய காலத்திலிருந்தே, தமிழர்கள் சூரியன் மகர ராசியில் நுழையும் மாதத்தை திருவிழாவாக வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பொன்மொழி பன்னெடுங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. அதாவது புதுமனை புகுவிழா, வரன் பார்ப்பது, மணப் பொருத்தம் பார்ப்பது, திருமணம் என எந்த ஒரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் தை மாதம் பிறக்கட்டும் என்று குறிப்பிடுவதற்காகவே இந்த பழமொழி உருவாக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

Thai Pongal Special Thai Piranthal Vazhi Pirakkum

அன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில், கிராமப் பகுதிகளில், ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்கோ அல்லது நகர்புறத்திற்கோ வருவதற்கு, விளை நிலங்களைத் தான் பயன்படுத்துவார்கள். அதாவது, தை மாதம் முதல் ஆனி மாதம் முதல் விவசாய நிலங்களில் அறுவடை முடிந்து நிலங்கள் காய்ந்திருக்கும். அப்போது இந்த விளை நிலைங்களின் வழியாகவே பிற கிராமங்களுக்கும், நகரத்திற்கும் சென்று வருவார்கள். அதைக் குறிப்பிடுவதற்காகவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பழமொழியாக சொல்லி இருக்கிறார்கள்.

MOST READ: தை மாதத்தில் எந்த ராசிக்கு கல்யாணம் கூடி வரும் தெரியுமா?

தை மாத தொடக்கம் தான் உத்தராயண காலத்தின் தொடக்கமாகும். இந்த மாதத்தில் தான் சூரியன் தக்ஷிணாயன பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பவம் வடக்கு திசையில் பயணிக்கும் உத்தராயண காலமாகும். தட்சிணாயன காலத்தில் பருவத்தில் விவசாயப்பணிகளான, உழவுப் பணிகள் தொடங்கி, நாற்று நட்டு, விளைச்சலை பெருக்கும் காலமாகும். அது வரையில் விளைந்துவந்த பயிர்களை அறுவடை செய்யும் காலமாக உத்தராயண காலம் விளங்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தமிழர்கள் கொண்டாடும் திருநாள்

தமிழர்கள் கொண்டாடும் திருநாள்

ஆறு மாதகாலம் பயிர்கள் அனைத்தையும் நல்ல முறையில் விளைவிக்க உறுதுணையாக இருந்த சூரியபகவானுக்கு உரிய முறையில் நன்றி செலுத்தும் விதமாகவும் தை மாதப்பிறப்பை பண்டைய காலம் முதலே தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். தை முதல் நாளில் சூரியனுக்கு பொங்கலிட்டு வணங்கி வருகின்றனர்.

பெண்கள் இருக்கும் தை மாத விரதம்

பெண்கள் இருக்கும் தை மாத விரதம்

சங்க காலத்தில் பெண்கள் தங்கள் வாழ்க்கைக்கு நல்வழி காட்ட வேண்டும் என்பதற்காக தை மாதத்தில் கடவுளை வேண்டி விரதம் இருப்பார்கள். அதைப் பற்றிய பரிபாடல் ஒன்றில்,

நீ தக்காய் தைந் நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும்

கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல

விழுத் தகை பெறுக என வேண்டுவதும் என்மாரும்

பூ வீழ் அரியின் புலம்பப் போகாது

யாம் வீழ்வார் ஏமம் எய்துக என்மாரும்

கிழவர் கிழவியர் என்னாது ஏழ்காறும்

மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக என்மாரும்

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, எம் கழுத்தைச் சுற்றித் தழுவிய எம் காதலர் எம்மைப் பிரியாது இருக்க வேண்டும். பல பூக்களை நாடும் வண்டுகள் போல், எம் கணவரி பிறரை நாடாமல் எம்மோடு இருக்க வேண்டும். எம் காதலரும் (கணவர்) யாமும் கிழவர் கிழவியர் என்று உலகத்தோர் கூறாத வண்ணம், பேரிளம் பெண் என்னும் ஏழாம் பருவம் எய்தும் அளவும், இந்த இளம் பருவத்தினராகவே, இன்று இங்கு தைந் நீராடுவது போல் என்றும் நிலைபெற வேண்டும், என சங்க கால பெண்கள் வேண்டிக்கொண்டு பரிபாடல் இசைத்து பாடி இறைவனை வேண்டுவதாக அமைந்துள்ளது.

சுப நிகழ்ச்சிக்கு ஏற்ற மாதம்

சுப நிகழ்ச்சிக்கு ஏற்ற மாதம்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பொன்மொழி பன்னெடுங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. அதாவது புதுமனை புகுவிழா, வரன் பார்ப்பது, மணப் பொருத்தம் பார்ப்பது, திருமணம் என எந்த ஒரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் தை மாதம் பிறக்கட்டும் என்று குறிப்பிடுவதற்காகவே இந்த பழமொழி உருவாக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

பணப்புழக்கம் அதிகரிக்கும்

பணப்புழக்கம் அதிகரிக்கும்

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், அது நாள் வரையிலும் விளைந்து வந்த பயிர்களை அறுவடை செய்து தை மாதத்தில் தான் விற்பனை செய்து கையில் பணப்புழக்கம் அதிகரித்து சுபகாரியத்திற்கு செலவழிக்க வசதியாக இருக்கும் என்பதற்காகவே இவ்வாறு பழமொழியை உருவாக்கி இருக்கிறார்கள். அதனால் தான் தை மாதத்தில் எண்ணற்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அதோடு இதில் மற்றொரு விஷயமும் மறைந்துள்ளது.

தை பிறந்தால் வழி பிறக்கும்

தை பிறந்தால் வழி பிறக்கும்

அன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில், கிராமப் பகுதிகளில், ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்கோ அல்லது நகர்புறத்திற்கோ வருவதற்கு, விளை நிலங்களைத் தான் பயன்படுத்துவார்கள். அதாவது, தை மாதம் முதல் ஆனி மாதம் முதல் விவசாய நிலங்களில் அறுவடை முடிந்து நிலங்கள் காய்ந்திருக்கும். அப்போது இந்த விளை நிலைங்களின் வழியாகவே பிற கிராமங்களுக்கும், நகரத்திற்கும் சென்று வருவார்கள். அதைக் குறிப்பிடுவதற்காகவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பழமொழியாக சொல்லி இருக்கிறார்கள்.

பித்ருக்கள் விடைபெறும் மாதம்

பித்ருக்கள் விடைபெறும் மாதம்

தை மாதத்திற்கு மற்றொரு சிறப்பு உண்டு. தக்ஷிணாயன கால ஆரம்பமான ஆடி மாத தொடக்கத்தில், பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வரும் நம் முன்னார்களின் ஆத்மாக்கள், நம்மை ஆசீர்வதிப்பதற்காக நான்கு மாதங்கள் பூலோகத்தில் தங்கியிருந்து, தை மாத அமாவாசை முடிந்த பின்பு தான் மீண்டும் பித்ரு லோகத்திற்கு செல்கின்றனர். நம்முடைய முன்னோர்களின் ஆத்மாக்கள் நினைத்த நேரத்தில் பூமிக்கு வர பித்ரு தேவர்களால் அனுமதிக்கப்படுவதில்லை.

ஆசீர்வதிக்கும் பித்ருக்கள்

ஆசீர்வதிக்கும் பித்ருக்கள்

அமாவாசை, மாதப்பிறப்பு, அவர்கள் பூமியில் இறந்த திதி மற்றும் மஹாளய பட்ச தினங்களில் மட்டுமே அவர்கள் பூமிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். நாம் பித்ரு தேவர்களை மிகவும் பக்தி சிரத்தையோடு வழிபட்டு சிரார்த்தம் செய்வதால், பித்ரு தோஷங்களில் இருந்து விடுபடுவதோடு, நம்முடைய முன்னோர்களும் நம்மையும் நம் குடும்பத்தாரையும் ஆசீர்வதித்துவிட்டு தை மாத அமாவாசை முடிந்த உடன் மீண்டும் பித்ரு லோகம் செல்கின்றனர் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். இத்தனை சிறப்புகள் கொண்ட தை மாதத்தில் அனைவருக்கும் நல்ல வழி பிறக்கவேண்டும் என்று இறைவனை வழிபடுவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Thai Pongal Special Thai Piranthal Vazhi Pirakkum

In the absence of transport during Thai month to Aani month, peoples would use the resulting land to move from one village to another village or urban areas. That is, from the first of Thai month to the beginning of the month of Aani, the land will be harvested. They will then travel to other villages and cities through these conditions. It is said that Thai Piranthal Vazhi Pirakkum.
Story first published: Monday, January 13, 2020, 16:13 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more