For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தை பொங்கல் ஸ்பெஷல்… தை பிறந்தால் வழி பிறக்கும் ஏன் எப்படி எதற்கு தெரியுமா?

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பொன்மொழி பன்னெடுங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. அதாவது புதுமனை புகுவிழா, வரன் பார்ப்பது, மணப் பொருத்தம் பார்ப்பது, திருமணம் என எந்த ஒரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் த

|

தமிழ் வருடத்தின் 10 ஆவது மாதமாக வருவது தை மாதம். இந்த மாதத்தில் தான் சூரியன் தனுசு ராசியில் இருந்து வெளியேறி மகர ராசிக்குள் நுழைந்து இருப்பார். பண்டைய காலத்திலிருந்தே, தமிழர்கள் சூரியன் மகர ராசியில் நுழையும் மாதத்தை திருவிழாவாக வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பொன்மொழி பன்னெடுங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. அதாவது புதுமனை புகுவிழா, வரன் பார்ப்பது, மணப் பொருத்தம் பார்ப்பது, திருமணம் என எந்த ஒரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் தை மாதம் பிறக்கட்டும் என்று குறிப்பிடுவதற்காகவே இந்த பழமொழி உருவாக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

Thai Pongal 2022: Date, Puja Vidhi Mythology, Rituals and Significance in Tamil

அன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில், கிராமப் பகுதிகளில், ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்கோ அல்லது நகர்புறத்திற்கோ வருவதற்கு, விளை நிலங்களைத் தான் பயன்படுத்துவார்கள். அதாவது, தை மாதம் முதல் ஆனி மாதம் முதல் விவசாய நிலங்களில் அறுவடை முடிந்து நிலங்கள் காய்ந்திருக்கும். அப்போது இந்த விளை நிலைங்களின் வழியாகவே பிற கிராமங்களுக்கும், நகரத்திற்கும் சென்று வருவார்கள். அதைக் குறிப்பிடுவதற்காகவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பழமொழியாக சொல்லி இருக்கிறார்கள்.

MOST READ: தை மாதத்தில் எந்த ராசிக்கு கல்யாணம் கூடி வரும் தெரியுமா?

தை மாத தொடக்கம் தான் உத்தராயண காலத்தின் தொடக்கமாகும். இந்த மாதத்தில் தான் சூரியன் தக்ஷிணாயன பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பவம் வடக்கு திசையில் பயணிக்கும் உத்தராயண காலமாகும். தட்சிணாயன காலத்தில் பருவத்தில் விவசாயப்பணிகளான, உழவுப் பணிகள் தொடங்கி, நாற்று நட்டு, விளைச்சலை பெருக்கும் காலமாகும். அது வரையில் விளைந்துவந்த பயிர்களை அறுவடை செய்யும் காலமாக உத்தராயண காலம் விளங்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Thai Pongal 2022: Date, Puja Vidhi Mythology, Rituals and Significance in Tamil

In the absence of transport during Thai month to Aani month, peoples would use the resulting land to move from one village to another village or urban areas. That is, from the first of Thai month to the beginning of the month of Aani, the land will be harvested. They will then travel to other villages and cities through these conditions. It is said that Thai Piranthal Vazhi Pirakkum.
Desktop Bottom Promotion