Just In
- 1 hr ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- 3 hrs ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 8 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 9 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
Don't Miss
- News
2 பக்கமும் வளைக்க பிளான்.. "கிடைக்கிற கேப்பில் எல்லாம்".. எடப்பாடிக்கு "கேட்" போடும் திமுக? போச்சே!
- Technology
ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?
- Finance
டாலர் முதல் ஜி7 வரையில்.. அடுத்த வாரம் தங்கம் விலையினை தீர்மானிக்கும் 5 முக்கிய காரணிகள்!
- Movies
எங்களோட வாழ்க்கை அவ்வளவு ஈசி கிடையாது.. வருத்தத்தை தெரிவித்த சிவாங்கி!
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு.. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ பரிசீலினை
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
Thai Masam Rasi Palan 2022: சூரியன் மகர ராசிக்கு செல்வதால் இந்த ராசிகளுக்கு அட்டகாசமா இருக்கப்போகுது..
நவகிரகங்களில் சூரியன் நிலையானது ஒருவரது தலைவிதியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது. ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவராக கருதப்படும் சூரியன், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசியிலும் அதன் தாக்கம் இருக்கும். சூரியனின் நிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அது வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
இப்படிப்பட்ட சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். அப்போது தான் தமிழ் மாதமாக தை மாதம் பிறக்கிறது. இந்த தை மாதம் பிறக்கும் நாளன்று தான் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்போது மகரம் செல்லும் சூரியனால் ஒவ்வொரு ராசிக்காரரும் எம்மாதியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என தை மாத ராசிப் பலன்களைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அரசு வேலை மற்றும் அரசியலில் அதிகாரப் பதவியில் இருப்பவர்களும், அரசியல் அறிவியல், சட்டம், இயந்திரவியல் ஆகிய துறைகளில் படிக்கும் மாணவர்களும் பெயர்ச்சியின் போது முழுப் பலன்களைப் பெறுவார்கள். தொழில் வாழ்க்கைக்கு இது ஒரு நல்ல கட்டமாக இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வும் கிடைக்கும். சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையால், உங்கள் தந்தை அல்லது பணியிடத்தில் உங்கள் உயர் அதிகாரிகளை கையாளும் போது உங்கள் அணுகுமுறையில் நீங்கள் மிகவும் இராஜதந்திரமாக இருக்க வேண்டும். கடின உழைப்பால் நல்ல வெகுமதிகளைப் பெறுவீர்கள். நிதி ரீதியாக, நல்ல பண வரவு இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். மேலும் நீங்கள் நம்பிக்கையுடன் மற்றும் அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் உங்களின் அன்றாட செலவுகள் அதிகரிக்கலாம். உங்கள் பெற்றோருடன் கருத்து வேறுபாடும் இருக்கலாம். உங்கள் துணையுடன் உங்கள் உறவில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இந்த காலகட்டத்தில் உங்கள் தந்தையின் உடல்நிலை குறையக்கூடும். மேலும் அவருடன் வாக்குவாதம் ஏற்படக்கூடும் என்பதால் உங்கள் தந்தையின் உடல்நிலையை கவனித்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் ஈகோ அல்லது பணியிடத்தில் உங்கள் அதீத தன்னம்பிக்கை காரணமாக சில பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என்றாலும், தொழில் ரீதியாக நீங்கள் சாதகமான முடிவுகளைக் காணலாம். வியாபாரிகள், வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் சாதகமான முடிவுகளைக் காண்பார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலக்குறைவுகளை சந்திக்க நேரிடும் என்பதால், உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்கால கட்டத்தில் உங்கள் ரகசியங்கள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தொழில் துறையில், நீங்கள் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடும். மேலும் நீங்கள் பணியிடத்தில் சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும் மற்றும் உங்கள் தொழில் இலக்குகளை அடைவதில் தாமதத்தை உணரலாம். வியாபாரிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் காட்டுவார்கள், மேலும் இந்த கட்டத்தில் படிப்பில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும். ஆரோக்கியமாக, இந்த கட்டத்தில் நீங்கள் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவீர்கள். மேலும் இந்த காலகட்டத்தில் நீங்கள் சில விபத்துக்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தொழிலைப் பொறுத்தவரை, சராசரி முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மேலும் பணியிடத்தில் உங்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பதனால், உங்கள் எதிரிகள் இக்காலத்தில் சுறுசுறுப்பாக இருக்க வாய்ப்புள்ளது. உங்கள் உயர் அதிகாரிகளாலும் சக ஊழியர்களாலும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில், உங்கள் திருமண வாழ்க்கை பாதிக்கப்படலாம், உங்கள் துணையின் ஆரோக்கியமும் குறையக்கூடும். நிதி தொடர்பான விஷயங்களில், நீங்கள் எந்த பெரிய பிரச்சனையையும் சந்திக்க மாட்டீர்கள். உங்கள் உறவு சலிப்பானதாக இருக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் நீங்கள் சில செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் உங்கள் பிள்ளைகள் வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பைப் பெறலாம், மேலும் நீங்கள் அரசாங்கத்தின் மூலம் வெளிநாட்டு விவகாரங்களில் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் உங்கள் கருத்துக்களை முன்வைப்பதில் சில தடைகளை சந்திப்பீர்கள். இது பணியிடத்தில் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். இந்த காலத்தில் வணிகர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். பணப்புழக்கத்தில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும் என்பதால், நிதி ரீதியாக இந்த காலகட்டம் உங்களுக்கு சராசரியான முடிவுகளைத் தரும். உங்கள் பிள்ளைகள் மற்றும் அவர்களின் தேவைகளுக்காக சற்று அதிக பணத்தை செலவழிப்பீர்கள். உங்கள் காதல் வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். உங்கள் ஈகோவை ஒதுக்கி வைத்து உறவில் சமநிலையை பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஆனால் இக்காலத்தில் உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். நல்ல செல்வத்தை குவிப்பீர்கள். இதனுடன், உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவுடன் சொத்துக்களை வாங்குவீர்கள். எந்தவொரு பெரிய முதலீட்டையும் செய்வதற்கு முன்பும் பொறுமையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். தொழில் ரீதியாக, நீங்கள் மனநிலை மாற்றங்களை அனுபவிக்கலாம் மற்றும் வழக்கமான வேலையில் சில பிரச்சனைகள் மற்றும் தடைகளை சந்திக்க நேரிடும். உங்கள் காதல் வாழ்க்கையும் சூரியனின் தாக்கத்தால் சில தடைகளை சந்திக்கலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் முரட்டுத்தனமாகவும் கடுமையாகவும் நடந்து கொள்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் சரியான முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் பல துறைகளில் சிறந்து விளங்குவீர்கள். தனிப்பட்ட முறையில் மற்றும் தொழில் ரீதியாக உங்கள் உறவினர்களிடமிருந்து உங்களுக்கு நிறைய ஆதரவைப் பெறுவீர்கள். தொழில் ரீதியாக, உங்களின் கடின உழைப்பால் நல்ல பலனைப் பெறுவீர்கள். மேலும் நீங்கள் செய்யும் அனைத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கும். நிதி ரீதியாக, இந்த காலம் உங்களுக்கு சாதகமானது, ஏனெனில் நீங்கள் நண்பர்கள் அல்லது உடன்பிறந்தவர்களின் உதவியுடன் நிதி ஆதாயத்தைப் பெறுவீர்கள். திடீர் பண ஆதாயங்களையும் அனுபவிப்பதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்கள் காதல் வாழ்க்கை தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பணம் சம்பாதிக்கும் திறன் உங்கள் தந்தையால் ஆதரிக்கப்படும் அல்லது பாதிக்கப்படும். உங்கள் தந்தையின் காரணமாக நீங்கள் சில குடும்ப விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கும். அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களுக்கு சாதகமான காலகட்டம். நிதி ரீதியாக, இக்காலத்தில் சேமிப்பது மிகவும் புத்திசாலித்தனமானது. ஏனெனில் இதன் மூலம் நீங்கள் எதிர்காலத்தில் பலனைப் பெறுவீர்கள். உங்கள் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். இரண்டாம் வீட்டில் சூரியன் இருப்பதால் உங்கள் காதல் வாழ்க்கை பாதிக்கப்படலாம். உங்கள் பேச்சு பாதிக்கப்படலாம். வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதுடன் போட்டியில் பரிசுகளை வெல்வார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.

மகரம்
மகர ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் தந்தையுடன் உங்களுக்கு சில ஈகோ மோதல்கள் இருக்கலாம். மேலும் நீங்கள் திடீர் புகழைப் பெறுவதோடு, உங்கள் தொழிலில் உயர்வீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில், உங்கள் துணையுடன் சில பிரச்சினைகள் இருக்கலாம், மேலும் உங்கள் உறவு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, துணையுடன் பழகும்போது உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சனியும் சூரியனும் இணைந்திருப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும் ஆனால் உங்களின் சரியான கர்மாவை செய்த பின்னரே எல்லாமே கைகூடும். நிதி ரீதியாக, நீங்கள் தொடர்ந்து சில ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால் உங்கள் பணத்தை திரும்பப் பெற முடியாது. இந்த கட்டத்தில் உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை சமநிலைப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கலாம். அவற்றை தனித்தனியாக வைத்திருப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். மாணவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையை அனுபவிப்பார்கள் மற்றும் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்
கும்ப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வெளிநாடு தொடர்பான செயல்களில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் மனைவி ஒரு தொழில்முறை நிபுணராக இருந்தால், நீங்கள் ஒரு சர்ச்சையில் விழக்கூடும். இக்காலத்தில் உங்கள் ஈகோவைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது; இல்லையெனில், அது உங்கள் திருமண வாழ்க்கையில் நல்லிணக்கத்தைத் தடுக்கும். தொழில் ரீதியாக நீங்கள் சிரமங்களையும் சவால்களையும் சந்திக்க நேரிடும். இது நீங்கள் வாய்ப்புகளை இழக்க நேரிடும் காலம். வணிகர்களுக்கு நல்ல காலம். உங்கள் எதிரிகள் உங்களுக்கு சிக்கல்களை உருவாக்கலாம். எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அன்புக்குரியவர்களுடனான தவறான புரிதல் மற்றும் வாக்குவாதங்கள் உங்கள் உறவை அழிக்கக்கூடும். உங்கள் திருமண வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கும், இது உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை காய்ச்சல் அல்லது தூக்கமின்மையை சந்திக்க நேரிடும்.

மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் சாதகமாக இருக்கும். திடீர் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஒரு அதிகாரபூர்வமான பதவியை வகித்தால், எதிரிகளின் எதிர்ப்பை நீங்கள் சந்திக்க நேரிடும், ஆனால் இது உங்கள் தொழிலில் வளர்ச்சியடையும் நேரம். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள் மற்றும் இது பதவி உயர்வுக்கும் வழிவகுக்கும். நீங்கள் நீண்ட காலமாக உழைத்து வரும் அனைத்து திட்டங்களையும் இக்காலத்தில் முடிப்பீர்கள், மேலும் அதற்கான வெகுமதிகளையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். தொழிலதிபர்களுக்கு, இது மிகவும் பயனுள்ள காலமாகும். ஏனெனில் நீங்கள் புதிய வணிக முன்மொழிவுகளைக் காண்பீர்கள். உங்கள் நிதி நிலை மேம்படும். காதல் வாழ்க்கை சீராக செல்லும். மேலும் ஒருவருக்கொருவர் தரமான நேரத்தை செலவழிப்பதன் மூலம் உறவை பலப்படுத்துவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தரை, இது உங்களுக்கு மிகவும் பலனளிக்கும் காலமாக இருக்கும்.