For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகளின் சடலத்தை தந்தை தோளில் சுமந்து சென்ற கொடூரம்...

ஒரு தந்தை ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் தன்னுடைய மகளின் உடலை தோளில் சுமந்து கொண்டு சென்ற கொடுமை பற்றி தான் அந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.

By Mahibala
|

பெற்றோருக்கு நடக்கும் மிகப்பெரிய கொடுமையே தன்னுடைய கண் முன்னே தான் பெற்ற பிள்ளைகளைப் பறிகொடுப்பது தான். அதை எந்த பெற்றோராலும் தாங்கிக் கொள்ளவே முடியாது. அதைவிட, அப்படி இறந்த குழந்தையை தன்னுடைய தோளிலேயே சுமந்து கொண்டு, தெருவில் நடந்து போகும் கொடூரம் எவ்வளவு மோசமானது.

Telangana Man Forced To Carry Daughters Dead Body As Hospital Refuses ambulance

அப்படி ஒரு சம்பவம் தான் தெலங்கானாவில் நடந்திருக்கிறது. தன்னுடைய மகளின் சடலத்தை எடுத்துச் செல்ல எந்தவித ஆம்புலன்ஸ் வசதியும் இல்லாதல் கதறியபடி தன்னுடைய தோள்களிலேயே சுமந்து சென்ற கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. அது பற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எங்கு நடந்தது?

எங்கு நடந்தது?

இப்படியொரு கொடூரமான சம்பவம் நடந்தது தெலங்கானா மாநிலத்தில் தான். தெலங்கானா மாநிலத்தில் பொத்தம்பள்ளி என்றொரு மாவட்டம் உள்ளது. அங்குள்ள கூனுர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தான் சம்பத் என்பவர். அவருடைய ஏழு வயதே ஆன மகள் சிறுநீரகக் கோளாறின் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்.

MOST READ: பைத்தியத்தையும் குணப்படுத்தும் இந்த செடி பற்றி உங்களுக்கு தெரியுமா? இப்பவாச்சும் தெரிஞ்சிக்கங்க...

கரீம்நகர் மருத்துவமனை

கரீம்நகர் மருத்துவமனை

தீவிர சிகிச்சை தேவைப்படுவதால் இரண்டு வாரங்களுக்கு முன்பாக கரீம்நகர் அரசுப் பொது மருத்துவமனையில் தன்னுடைய மகளைக் கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார் சம்பத்.

மரணம்

மரணம்

தொடர்ந்து இரண்டு வாரங்கள் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த அந்த சிறுமி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்திருக்கிறார். அந்த தீராத சோகத்தை நம்மால் எடுத்துச் சொல்லவே முடியாதல்லவா?

ஆம்புலன்ஸ் கோரிக்கை

ஆம்புலன்ஸ் கோரிக்கை

சம்பத் ஒரு கூலித் தொழிலாளி. அவருடைய கையில் தனியார் ஆம்புலன்ஸில் தன்னுடைய மகளின் சடலத்தை எடுத்துச் செல்வதற்குப் பணம் இல்லாததால், தனக்கு அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் வசதி செய்து தரும்படி மருத்துவமனை நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

MOST READ: வேண்டாம்னு தூக்கி வீசின குழந்தை இப்ப 12.5 லட்சம் குரோர்பதியில ஜெயிச்சிருக்கு...

நிராகரிப்பு

நிராகரிப்பு

அரசு மருத்துவமனை நிர்வாகமோ தங்களிடம் தற்போது எந்த ஆம்புலன்சும் கைவசம் இல்லை என்று தெரிவித்து விட்டது. இதையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அழுதபடியே மருத்துவமனை வாசலிலேயே 2 மணி நேரம் காத்திருந்திருக்கிறார் சம்பத்.

கெஞ்சியிருக்கிறார்...

கெஞ்சியிருக்கிறார்...

ஆம்புலன்ஸ் வசதி இல்லை. அதனால் மருத்துவமனை வாசல் முன்பாக இருந்த ஆட்டோ ஸ்டேண்ட்டில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம் தன்னுயைட மகளின் சடலத்தை தன் சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்ல உதவும்படி கேட்டிருக்கிறார். உதவ மறுத்துவிட்டனர்.

உதவிய ஆட்டோ டிரைவர்

உதவிய ஆட்டோ டிரைவர்

இந்நிலையில் அனைவரும் நிராகரிக்க, இவரைப் பார்த்து பரிதாபப்பட்ட ஒரு ஆட்டோக்காரர் மட்டும் உதவ முன்வந்து சம்பத்தையும் அவருடைய மகளின் சடலத்தையும் சொந்த கிராமத்துக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.

MOST READ: பொலீரோ வாகனத்தை ஆண்கள் உதவியின்றி தூக்கி நிறுத்தும் சூப்பர் ராணுவப் பெண்கள்... பாருங்க அத...

சோகத்தின் உச்சம்

சோகத்தின் உச்சம்

அப்படி தன்னுடைய சொந்த மகளின் சடலத்தைத் தோள்களில் சுமந்து கொண்டு, ஆம்புலன்ஸ்க்காக கெஞ்சிக் கொண்டிருந்த சோகம் அந்த இடத்தில் இருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Telangana Man Forced To Carry Daughter's Dead Body As Hospital Refuses ambulance

Unable to afford a private vehicle, the man had to carry his dead daughter because the hospital authorities did not provide him an ambulance.
Desktop Bottom Promotion