Latest Updates
-
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன?
Taurus Horoscope 2023: ரிஷப ராசிக்காரர்களுக்கு 2023 எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
நீங்கள் ரிஷப ராசியா? உங்கள் ராசிக்கு 2023 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை அறிய விரும்புகிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரையில் 2023 ஆம் ஆண்டிற்கான ரிஷப ராசி பலன்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். பலரும் தங்களின் ராசிக்கு 2023 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்போம். நீங்கள் ரிஷப ராசியா? உங்கள் ராசிக்கு 2023 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை அறிய விரும்புகிறீர்களா? அதுவும் 2023 ஆம் ஆண்டில் உங்களின் ஆரோக்கியம், காதல் மற்றும் திருமண வாழ்க்கை, தொழில், கல்வி, நிதி நிலை போன்றவை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரையில் 2023 ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என 2023 ஆம் ஆண்டிற்கான ரிஷப ராசி பலன்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

2023-ல் காதல் வாழ்க்கை
காதலிக்கும் ரிஷப ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதங்களுக்கு இடையே திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது. அக்டோபர் மாதத்தில் நீங்கள் காதலிப்பவருடனான உறவு சிறப்பாக இருக்கும். ஆனால் டிசம்பர் மாதத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருவருக்கும் இடையே மோசமான தகவல் தொடர்பால் வாக்குவாதம் ஏற்படக்கூடும் மற்றும் இது உறவுகளில் பதற்றத்தை அதிகரிக்கும். மொத்தத்தில் 2023 ஆம் ஆண்டில் காதல் உறவில் நன்றாக உணர்வீர்கள் மற்றும் காதலி/காதலனுடன் நெருக்கமாக இருப்பீர்கள்.

2023-ல் தொழில் வாழ்க்கை
வேத ஜோதிடத்தின் படி 2023 ஆம் ஆண்டில் வேலை செய்யும் ரிஷப ராசிக்காரர்கள் ஜனவரி மாதத்தில் இடமாற்றத்தைப் பெறலாம். சிலர் இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். ஆனால் அதன் பின்னர் உங்கள் வேலையில் சிறந்ததை வழங்குவதில் கவனத்தை செலுத்த வேண்டும். ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே வேலையில் ஏற்றத்தாழ்வுகளை காண்பீர்கள். சிலர் இந்த காலத்தில் தங்கள் துறையில் மாற்றம் மற்றும் இடமாற்றங்களை சமாளிக்க வேண்டியிருக்கும் மற்றும் சிலர் புதிய வேலையை தேடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

2023-ல் கல்வி
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு ரிஷப ராசிக்கார மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். குருவின் அருளால் மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பாக வெற்றி பெறுவார்கள். நவம்பர் மாதத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களின் ஆசை நிறைவேறும்.

2023-ல் நிதி நிலை
ரிஷப ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டு முழுவதும் நிதி நிலையில் ஏற்ற இறக்கங்களை அனுபவிப்பார்கள். ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையே நிதி நிலை வலுவாக இருக்கும். இக்காலத்தில் பல்வேறு வழிகளில் இருந்து நிதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் செலவுகள் அதிகரிக்கும். சுப காரியங்களுக்கு நிறைய செலவுகளை செய்வீர்கள். தேவையற்ற செலவுகள் அதிகம் இருக்கும். ஆனால் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையே செலவுகள் குறையத் தொடங்கி, வருமானம் அதிகரிக்க தொடங்கும்.

2023-ல் குடும்ப வாழ்க்கை
2023-ல் ரிஷப ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையைப் பற்றி கூற வேண்டுமானால், நன்றாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்திற்கு அதிக முன்னுரிமை அளிப்பீர்கள். குடும்ப சந்தோஷத்தில் உங்களின் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் குடும்ப சூழல் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். டிசம்பர் மாதம் சாதாரணமாக இருக்கும்.

2023-ல் குழந்தைகள்
2023 ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களின் குழந்தைகளுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். ஜனவரி முதல் ஏப்ரல் மாதங்களுக்கு இடையே 5 ஆவது வீட்டில் குருவின் அமிர்த பார்வை விழுவதால், திருமணமானவர்கள் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை ஏற்கனவே குழந்தைகள் இருந்தால், அவர்கள் இக்காலத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். அவர்கள் கல்வி மற்றும் தொழிலில் வெற்றியைக் காண்பார்கள். உங்கள் குழந்தை வெளிநாட்டில் படிக்க விரும்பினால், மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அக்டோபர் மாதத்தில் உங்கள் குழந்தைகளின் ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆனால் டிசம்பர் மாதம் மீண்டும் பிரச்சனைகள் தொந்தரவு செய்யலாம்.

2023-ல் திருமண வாழ்க்கை
2023-ல் ரிஷப ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அதுவும் ஆண்டின் தொடக்கத்தில் ராகு 12 ஆவது வீட்டில் இருப்பதால், உறவுகள் மற்றும் தகவல் தொடர்புகளில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. செவ்வாய் வக்ரமாக இருப்பதால், உங்களுக்கும் வாழ்க்கைத் துணைக்கும் இடையே சில பிரச்சனைகள் எழலாம். ஆண்டின் நடுப்பகுதியில் உங்கள் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையேயான தொடர்பு சிறப்பாக இருக்கும். ஆண்டின் இறுதி மூன்று மாதங்கள் வழக்கம் போல் இருக்கும். ஆனால் வாழ்க்கைத் துணையின் நலன் மற்றும் உணர்வுகளை கருத்தில் கொண்டு செயல்படுங்கள்.

2023-ல் வியாபாரம்
2023 ஆம் ஆண்டு வியாபாரம் செய்யும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலனளிக்கும் ஆண்டாக இருக்கும். உங்களின் வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. ஜனவரி 17 ஆம் தேதிக்கு பிறகு சனி 10 ஆவது வீட்டில் நுழைவதால் வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டு நிறுவனத்துடன் தொடர்புகள் கிடைக்கலாம். இந்த ஆண்டு உங்களின் கவனம் உங்கள் வியாபாரத்தை வளர்ப்பதில் மட்டுமே இருக்கும். ஆண்டின் நடுப்பகுதியில் வியாபாரத்தில் வலுவான வெற்றி கிடைக்கும். ஆனால் ஆண்டின் கடைசி மாதம் இழப்புக்களையும் பிரச்சனைகளையும் கொண்டு வரக்கூடும். எனவே 2023-ல் வியாபாரத்தில் முன்னேறுவதற்கு சரியான பாதையை தேர்ந்தெடுத்து பின் அதை பின்பற்றுங்கள்.

2023-ல் சொத்து மற்றும் வாகனம்
ரிஷப ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் நல்ல சொத்து ஆதாயங்களைப் பெறுவார்கள். இந்த ஆண்டில் செலவுகள் இருக்கும். ஆனால் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்குவதன் மூலம் நல்ல பலனைப் பெறுவீர்கள். மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையே பெரிய சொத்து ஒன்றை வாங்குவீர்கள். இது உங்கள் நிதி நிலையை அதிகக்கும். அதே சமயம் பெரிய வாகனம் வாங்கும் வாய்ப்புகளும் உருவாகும். சுக்கிரனின் அருளால், மே மற்றும் ஜூலை மாதங்கள் வாகனம் வாங்க சாதகமான காலம். ஆனால் நவம்பர் மற்றும் டிசம்பரில் வாகனம் ஓட்டும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

2023-ல் ஆரோக்கியம்
ரிஷப ராசிக்காரர்கள் 2023-ம் ஆண்டில் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். குருவின் அருளால் ஆண்டின் முதல் காலாண்டில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் ஏப்ரல் மாதத்திற்கு பின் சனி மற்றும் ராகுவால் ஆரோக்கியம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஜூன் 17 முதல் நவம்பர் 4 வரை சனி வக்ர நிலையில் இருப்பதால், ஆரோக்கியத்தில் நிறைய பிரச்சனைகள் இருக்காது. ஆனால் அதே வேளையில் குருவும் வக்ர நிலையில் இருப்பதால், ஆரோக்கியத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்படலாம். மொத்தத்தில் 2023 ஆம் ஆண்டில் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.



Click it and Unblock the Notifications











