For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சார்வரி தமிழ் புத்தாண்டு இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகுது...

சார்வரி தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டில் குரு, சனி, ராகு கேது போன்ற கிரகங்களின் சஞ்சாரத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

|

தமிழ் புத்தாண்டு சார்வரி வருடம் பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டிற்கு வீறியெழல் என்று பெயர். 60 வருடங்களை கொண்ட தமிழ் வருடங்களில் இது 34வது ஆண்டாகும். இந்த ஆண்டில் மழை எப்படி இருக்கும் விவசாயிகளுக்கு விளைச்சல் எப்படி இருக்கும் பண வருமானம் நன்றாக இருக்குமா? செலவுகள் அதிகம் வருமா என்றெல்லாம் யோசிப்பார்கள். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Tamil New Year Rasi Palan 2020 to 2021 | Sarvari Tamil Puthandu Rasi Palangal

சார்வரி ஆண்டு வெண்பாவின் விளக்கத்தை பார்த்தால் பதினெட்டு வகைச் சாதி மக்களும் வீரமிழந்து தீரம் அற்றுப்போய் நோயால் வெதும்பித் திரிவார்கள். மழையில்லை, நன்செய்ப் பயிர்கள் விளைச்சல் அறவே இருக்காது. பூமியில் நவதானியங்களும் விளைச்சல் பாதிக்கும். தானிய விளைச்சல் இன்றி மக்கள் பட்டினியால் மடிவர். மண்ணின் மைந்தர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என எச்சரிக்கிறது.

MOST READ: இந்த காரணத்திற்காக தான் அதிபர் டிரம்ப் இந்தியாவை மிரட்டியிருக்காரு போல...

இந்த ஆண்டு ஆண்டு கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தால் குரு பகவான் தனுசு, மகரம் ராசிகளிலும் சனி பகவான் மகரம் ராசியிலும் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் ராகுவும், தனுசு ராசியில் கேதுவும் சஞ்சரிக்கிறார். ராகு ஆவணி மாதத்தில் ரிஷபம் ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகி ஆண்டு முழுவதும் ரிஷபத்தில் சஞ்சரிப்பார். கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்களால் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tamil New Year Rasi Palan 2020 to 2021 | Sarvari Tamil Puthandu Rasi Palangal

Check out Tamil Puthandu Rasi palan or Sarvari Tamil puthandu rasi palan 2020-2021 for 12 Zodiac signs.
Desktop Bottom Promotion