Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தமிழ்நாடு தினத்தன்று தமிழர்களுக்கு 'இத' நீங்க கண்டிப்பா அனுப்பனுமாம் தெரியுமா?
தமிழர்கள் என்பதில் நாம் அனைவரும் பெருமிதம் கொள்வோம். ஏனெனில், தமிழ் மொழி, தமிழ்நாடு பல தனிச்சிறப்புக்களை கொண்டுள்ளது. தமிழ்நாடு நாள் என்பது தமிழருக்கென்று தனித் தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் நாளாகும். இந்திய விடுதலைக்குப் பிறகு மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கபடவேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துவந்த நிலையில் அதை இந்திய ஒன்றிய அரசு ஏற்க மறுத்து வந்தது. ஆனால் இக்கோரிக்கை முதலில் ஆந்திர மக்களால் கடுமையாக முன்னெடுக்கப்பட்டது. கலவரங்களும் ஏற்பட்டன. இதனால் இந்திய ஒன்றிய அரசு வேறு வழியின்றி 1 நவம்பர் 1956-இல் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தது. இதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் நிறுவப்பட்டன.

சென்னை மாகாணத்தின் எஞ்சிய பகுதிகளும், திருவிதாங்கூர்ரின் தமிழ் பகுதிகளும் இணைக்கபட்டு சென்னை மாகாணம் பிரிக்கபட்டது. 1967ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதியன்று பெயர் மாற்றத் தீர்மானத்தை முன்மொழிந்தார் அப்போதைய முதல்வர் அறிஞர் அண்ணா. 1968 ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதியன்று தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது. சென்னை சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு 25 அக்டோபர் 2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு தினத்தில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த வாழ்த்து செய்திகளை அனுப்புங்கள்.

வாழ்த்து 1
தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு. தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
தமிழனாய் பிறந்ததற்க்கே நாம் பெருமை கொள்வோம். தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழினம்! தமிழர்களின் தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
உலக மொழிகளில் பலவற்றுக்கு எழுத்து ,சொல், யாப்பு, அணி ஆகியவை உண்டு .ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு.தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம். அனைவருக்கும் தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
தமிழர்களை பெருமைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்ட நாள். தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
காத்தோடு கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்.
தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 10
உலக பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை இவ்வுலகிற்கு தந்தவர் திருவள்ளுவர். தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications