For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாடு உருவான நாள் எப்போது கொண்டாடப்படுகிறது? அதன்பின்னால் உள்ள சுவாரஸ்ய வரலாறு தெரியுமா?

மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம், 1956 நடைமுறைக்கு வந்த பிறகு, நவம்பர் 1, 1956 மதராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்ட நமது நிலப்பரப்பு தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது.

|

பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட இந்திய மாநிலங்களில் நமது தமிழ்நாடு மிகவும் தனித்துவம் வாய்ந்தது. மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம், 1956 நடைமுறைக்கு வந்த பிறகு, நவம்பர் 1, 1956 மதராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்ட நமது நிலப்பரப்பு தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது. மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டபோது இது நிறைவேற்றப்பட்டது.

Tamil Nadu Day 2021: Date, History, Significance and Facts About Tamil Nadu Formation Day in Tamil

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ 4,789 பில்லியன் (US$71 பில்லியன்) உடன் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலப் பொருளாதாரமாக தமிழ்நாடு உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 2013 அறிக்கையின் "பல்பரிமாண வளர்ச்சிக் குறியீட்டின்" அடிப்படையில் இந்தியாவின் முதல் ஏழு வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக நமது மாநிலம் தரப்படுத்தப்பட்டுள்ளது. நம்முடைய உத்தியோகபூர்வ மொழி தமிழாகும். மொழியை தன் பெயரிலேயே கொண்ட ஒரே மாநிலம் நமது தமிழ்நாடுதான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தமிழ்நாடு உருவான நாள்

தமிழ்நாடு உருவான நாள்

தமிழ்நாடு உருவான நாள் முதன்முதலில் 2019 இல் கொண்டாடப்பட்டது. மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நவம்பர் 1 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது. பரப்பளவில் இந்தியாவின் பதினொன்றாவது பெரிய மாநிலம் மற்றும் ஆறாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும். மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மாநிலப் பொருளாதாரத்துடன், 2011 இல் மனித வளர்ச்சிக் குறியீட்டின்படி, இந்தியாவின் மாநிலங்களில் மாநிலம் ஆறாவது இடத்தைப் பிடித்தது.

மெட்ராஸ் தினம்

மெட்ராஸ் தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ம் தேதி மெட்ராஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் ஆகஸ்ட் 22, 1639 இல் நிறுவப்பட்ட மெட்ராஸ் நகரம் நிறுவப்பட்டதை நினைவுகூருகிறது. ஆரம்பத்தில் சென்னப்பட்டினம், மதராசப்பட்டணம் என்று அழைக்கப்பட்ட இந்த நிலம், விரைவில் மெட்ராஸாகவும் பின்னர் சென்னையாகவும் மாறியது. மெட்ராஸ் டே என்பது நகரின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் எஸ்.முத்தையா, பத்திரிகையாளர் சாஷி நாயர் மற்றும் வெளியீட்டாளர் வின்சென்ட் டி'சோசா ஆகிய மூன்று பேர் சேர்ந்து உருவாக்கிய யோசனையாகும்.

தமிழ்நாடு பெயர் மாற்றம்

தமிழ்நாடு பெயர் மாற்றம்

நவம்பர் 1, 1956 அன்று, மெட்ராஸ் மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த நிலப்பரப்பை தமிழ்நாடு என்று பெயர் மாற்ற பல போராட்டங்கள் நடந்தன. மறைந்த முதல்வர் அறிஞர் அண்ணா, எம்.பி.யாக இருந்து, இந்த கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதோடு, பல தமிழறிஞர்களும் இதற்காக பாடுபட்டனர். 1967-ல் அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது.

MOST READ: இந்த 6 ராசிக்காரர்களுக்கு துரோகம் செய்வது அல்வா சாப்பிடற மாதிரியாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...!

அண்டை மாநிலங்கள்

அண்டை மாநிலங்கள்

அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள மக்கள் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் மாநிலம் உருவான தேதியை வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர், அதேபோன்று தமிழகத்திலும் இதேபோன்ற கோரிக்கைகள் எழுந்ததையடுத்து, நவம்பர் 1 தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்பட்டது. மொழிவாரியாக உருவாக்கப்பட்ட முதல் மாநிலம் ஒரிசா. பின்னர், 1953ல் மொழிவாரியாக ஆந்திரப் பிரதேசம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை மேற்கொண்டு பார்க்கலாம்.

வங்கித்துறை

வங்கித்துறை

இந்தியாவில் வங்கித் துறையின் புரட்சி தமிழர்களால் தொடங்கப்பட்டது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் போன்ற சில வங்கி நிறுவனங்களை அவர்கள் பணப் பரிவர்த்தனைக்காகத் தொடங்கினர். வங்கியின் கடன் மற்றும் பற்று முறை கூட தமிழர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான்.

அண்டை நாடுகளுடன் வணிகம்

அண்டை நாடுகளுடன் வணிகம்

மியான்மர் நெல் வயல்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு தமிழர்களுக்கு கடன்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பர்மா மற்றும் இலங்கையுடன் பெரும் வர்த்தகத்தில் ஈடுபட்டது. தமிழகம் சில ஐரோப்பிய நாடுகளுடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தது.

MOST READ: 20 லட்ச மக்களை கொன்றது முதல் மகனை நாஜிகளிடம் பலிகொடுத்தது வரை கொடூரத்தின் உச்சம் தொட்ட ஜோசப் ஸ்டாலின்

மொழி ஆளுமை

மொழி ஆளுமை

தமிழ்நாடு அதன் பிராந்தியத்தில் பேச்சுவழக்குகளில் அதிக வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. சுவாரஸ்யமாக, சென்னையில் பேசப்படும் பேச்சுவழக்கிற்கும், தமிழ்நாட்டின் உட்புறங்களில் பேசப்படும் பேச்சுவழக்கிற்கும் வித்தியாசம் உள்ளது. மாவட்டங்களுக்கு இடையே கூட பேச்சுவழக்கு மாறுபடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tamil Nadu Day 2021: Date, History, Significance and Facts About Tamil Nadu Formation Day in Tamil

Check out the date, history, significance and facts about Tamil Nadu Formation Day.
Story first published: Thursday, October 28, 2021, 14:39 [IST]
Desktop Bottom Promotion