Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சூரிய-சுக்கிர சேர்க்கையால் ஆகஸ்ட் 7 முதல் இந்த 3 ராசிகளுக்கு சூப்பரா இருக்கப் போகுது..
கடக ராசியில் ஏற்கனவே சூரியன் பயணித்து வருகிறார். கடக ராசிக்குள் சுக்கிரன் நுழையும் போது, சூரிய சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் நன்கு தெரியும்.
ஜோதிடத்தின் படி, ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்நபருக்கு பொருள் சுகம், சந்தோஷமான திருமண வாழ்க்கை மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். எனவே தான் திருமணம் மற்றும் குழந்தைகள் தொடர்பான தகவல்களை பெற ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை பார்க்கப்படுகிறது. எந்த ஒரு கிரகமும் ராசியை மாற்றும் போது, அது ஒருவரின் நிதி நிலை, திருமண வாழ்க்கை போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே சுக்கிரன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2022 ஆகஸ்ட் 07 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசிக்கு செல்கிறார். இந்த கடக ராசியில் ஏற்கனவே சூரியன் பயணித்து வருகிறார். கடக ராசிக்குள் சுக்கிரன் நுழையும் போது, சூரிய சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் நன்கு தெரியும். ஆனால் இந்த சூரிய சுக்கிர சேர்க்கையால் சில ராசிக்காரர்கள் அதிக நற்பலனைப் பெறவுள்ளார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
சூரிய சுக்கிர சேர்க்கையால் மேஷ ராசிக்காரர்களின் மரியாதை இக்காலத்தில் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பரஸ்பர சச்சரவுகள் நீங்கும். அதோடு, சில இனிமையான செய்திகள் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

மிதுனம்
கடகத்தில் சூரிய சுக்கிர சேர்க்கையால், மிதுன ராசிக்காரர்களின் வீட்டுச் சூழல் இனிமையாக இருக்கும். குழந்தை பாக்கியம் வேண்டும் என்று நினைப்பவர்களின் ஆசைகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும் மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி
சூரிய சுக்கிர சேர்க்கையால் கன்னி ராசிக்காரர்களின் திருமண வாழ்வில் நல்ல தாக்கத்தைக் காணலாம். அதுவும் தம்பதியருக்குள் நல்லுறவு ஏற்படும். அன்பும், புரிதலும் அதிகரிக்கும். இக்காலத்தில் எந்த ஒரு நாள்பட்ட நோயில் இருந்தும் விடுபடுவீர்கள். முக்கியமாக இந்த காலகட்டத்தில் வாழ்க்கை துணைக்கு வேலையில் நன்மை கிடைக்கும். திருமணமான தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சூரிய சுக்கிர சேர்கையால் கஷ்டப்படும் ராசிகள்
ஜோதிடத்தின் படி, கிரக மாற்றம் அனைத்து ராசிகளிலும் நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை ஏற்படுத்தலாம். அதில் இதுவரை சூரிய சுக்கிர சேர்க்கையால் நற்பலனைப் பெறும் ராசிகளைப் பார்த்தோம். ஆனால் துலாம், தனுசு, கும்பம் போன்ற ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய சுக்கிர சேர்க்கை காலம் சற்று வேதனை நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உறவுகளில் மன கசப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. எனவே இந்த 3 ராசிக்காரர்கள் சூரிய சுக்கிர சேர்க்கை காலத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.



Click it and Unblock the Notifications