Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
சனி-சூரியனால் உருவான சமசப்தம யோகத்தால் ஆகஸ்ட் 17 வரை இந்த ராசிகளுக்கு செம சூப்பரா இருக்கப் போகுது..!
சூரியனும் சனியும் எதிர் எதிரே இருப்பதால் ஆகஸ்ட் 17 வரை சமசப்தம யோகம் உருவாகியுள்ளது. சமசப்தம யோகம் என்பது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தில் இருந்து 7 ஆவது இடத்தில் இருக்கும் போது உருவாகும்.
நவகிரகங்களில் தலைவனாக கருதப்படும் சூரியன் 2022 ஜூலை 17 ஆம் தேதி கடக ராசிக்கு சென்றார். ஏற்கனவே மகர ராசியில் வக்ர நிலையில் சனி பயணித்து வருகிறார். சூரியனும், சனியும் தந்தை மகனாக இருந்தாலும், எதிரி கிரகங்களாக கருதப்படுகின்றன. சூரியனும் சனியும் எதிர் எதிரே இருப்பதால் ஆகஸ்ட் 17 வரை சமசப்தம யோகம் உருவாகியுள்ளது.

சமசப்தம யோகம் என்பது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தில் இருந்து 7 ஆவது இடத்தில் இருக்கும் போது உருவாகும். இந்த சமசப்தம யோகம் ஒரு அசுப யோகமாகும். இருப்பினும் ஜோதிடத்தில் இந்த யோகம் விசேஷமாக கருதப்படுகிறது.
சனியும், சூரியனும் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகங்களாக கருதப்படுகிறது. இதில் சனி நீதிமான் மற்றும் நியாயமானவர், சூரியன் தலைமை மற்றும் வெற்றிக்கு காரணியாவார். இந்த இரண்டு கிரகங்களினால் உருவான சமசப்தம யோகம் சில ராசிக்காரர்களுக்கு நிறைய நற்பலன்களைத் தரும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.

மிதுனம்
சமசப்தம யோக காலம் மீன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகள் இக்காலத்தில் நல்ல பலனைப் பெறுவார்கள். மேலும் வணிகத்தில் முதலீடு செய்வதற்கு சாதகமான நேரம் இது. வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் அமையும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த யோக காலம் நல்ல பலனைத் தரும். வருமானம் அதிகரிக்கும். புதிய மூலத்தில் இருந்து பணம் சம்பாதிப்பீர்கள். நிதி நிலைமை வலுவாகும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். இந்த காலகட்டத்தில் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சமசப்தம யோகத்தால் மரியாதையைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். தொழில் செய்பவர்களும் நல்ல பலனைப் பெறுவார்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். இதுவரை தடைப்பட்ட வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

மீனம்
சமசப்தம யோகம் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். இக்காலத்தில் சில நல்ல செய்திகளை பெறுவீர்கள். அதோடு வியாபாரத்தில் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். இது எதிர்காலத்தில் நல்ல லாபத்தைக் கொடுக்கும். அதோடு உங்களின் வேலை செய்யும் விதமும் மேம்படும். இதனால் பணியிடத்தில் பாராட்டைப் பெறுவீர்கள். இக்காலத்தில் உங்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.



Click it and Unblock the Notifications