Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சிம்மத்தில் சூரிய-சுக்கிர சேர்க்கையால் செப்டம்பர் 17 வரை இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்..
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுக்கிரனுக்கும் சூரியனுக்கும் இடையே பகை உணர்வு உள்ளது. எனவே இந்த சூரிய சுக்கிர சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருந்தாலும், சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது அல்லது மற்றொரு கிரகத்துடன் இணையும் போது, அது மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி சிம்ம ராசிக்கு சூரியன் சென்றார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசிக்கு சென்றார். இதனால் சிம்ம ராசியில் சூரிய-சுக்கிர சேர்க்கை நிகழ்ந்தது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுக்கிரனுக்கும் சூரியனுக்கும் இடையே பகை உணர்வு உள்ளது. எனவே இந்த சூரிய சுக்கிர சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருந்தாலும், சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்
சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் கடக ராசிக்காரர்களுக்கு வேதனை நிறைந்த காலமாக இருக்கும். கடக ராசியின் 2 ஆவது வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளதால், பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் பெரிய நஷ்டத்தை சந்திப்பீர்கள். பணியிடத்தில் பிரச்சனைகளை தவிர்த்திடுங்கள். செலவுகள் அதிகரிப்பதால் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். எவ்வளவு கடினமாக உழைத்தாலும் பலன்கள் குறைவாகவே கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் சூரிய-சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலம் சற்று தீங்கு விளைவிக்கக்கூடியதாகவே இருக்கும். குறிப்பாக வியாபாரிகள் குறைவான லாபத்தையே பெறக்கூடும். வணிகர்கள் சற்று சிரமத்தை சந்திக்கலாம். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வதை தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் பெரிய நிதி இழப்பை சந்திப்பீர்கள்.

தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் சூரிய-சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரருக்கு இந்த சேர்க்கை காலம் கடினமாக இருக்கும். குறிப்பாக பணிபுரிபவர்கள் வேலையில் சில சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். உடன் பணிபுரிபவர்கள் அல்லது உயர் அதிகாரிகளுடன் சண்டை வரலாம். வியாபாரிகளுக்கு குறைவான லாபமே கிடைக்கும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் மனக்கசப்பு ஏற்படலாம்.

சூரிய-சுக்கிர சேர்க்கையால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கான பரிகாரங்கள்
* தினமும் துர்கா தேவியை வழிபடுங்கள்.
* பெண்களை எந்த விதத்திலும் காயப்படுத்தாதீர்கள் மற்றும் அவர்கள் மதித்து நடத்துங்கள்.
* தினமும் காலையில் குளித்ததும் சூரிய பகவானை வழிபடுங்கள்.
* உங்கள் தந்தையை மதிக்கவும் மற்றும் அவருடனான உறவை வலுப்படுத்த முயற்சிக்கவும்.
* சுக்கிரனை வலுப்படுத்த தினமும் பசுவிற்கு சப்பாத்தியைக் கொடுங்கள்.



Click it and Unblock the Notifications