Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
துலாம் ராசியில் சூரிய-சுக்கிர சேர்க்கையால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பிரகாசமா இருக்கப் போகுது...
அக்டோபர் 18 ஆம் தேதி துலாம் ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடைபெற்றது. துலாம் ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
ஜோதிடத்தின் படி, சூரியனும் சுக்கிரனும் அக்டோபர் மாதத்தில் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் மாறினார்கள். இதனால் அக்டோபர் 18 ஆம் தேதி துலாம் ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடைபெற்றது. நவகிரகங்களில் சூரியனும், சுக்கிரனும் சுப கிரகங்களாக கருதப்படுகின்றன. ஜோதிடத்தின் சூரியன் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுகிறார். ஜாதகத்தில் சூரியன் வலுவான நிலையில் இருந்தால், அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். அதேப் போல் சுக்கிரன் வலுவான நிலையில் இருந்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

இப்படிப்பட்ட இரண்டு கிரகங்களும் ஒன்றிணையும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு சூரிய சுக்கிர சேர்க்கை காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். இப்போது துலாம் ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
சூரிய சுக்கிர சேர்க்கையால் ரிஷப ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் உடன்பணிபுரிபவர்களுடன் நல்லுறவை உருவாக்குவார்கள். அவர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். எனவே இக்காலத்தை உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். நண்பர்கள் அல்லது வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாகவும், சற்று வேடிக்கை நிறைந்தும் இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சூரியன் சுக்கிரனுடன் இணைவதால் சிம்ம ராசிக்காரர்கள் இக்காலத்தில் அனைவராலும் பாராட்டப்படுவார்கள். மாணவர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரன் சூரியனுடன் இணைவதால் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். இக்காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். இருப்பினும், எதிர்மறை விஷயங்களில் இருந்து சற்றி விலகி இருக்க முயலுங்கள். டிசைனிங் துறையில் இருப்பவர்கள், இக்காலத்தில் தங்களின் புதிய யோசனையால் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications