Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சிம்மத்தில் சூரிய சுக்கிர சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரப் போகுது...
சுக்கிரன் சிம்ம ராசிக்கு வரும் போது சூரியனுடன் இணைந்து சிம்ம ராசியில் பயணிப்பார். இந்த சூரிய சுக்கிர சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்கும்.
வேத ஜோதிடத்தில், சுக்கிரன் அசுரர்களின் குருவாக கருதப்படுகிறார். அதே சமயம், சுக்கிரன் குருவைப் போன்றே அதிர்ஷ்ட கிரகம். ஏனென்றால் ஒருவரது மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு சுக்கிரன் காரணியாவார். மேலும் சுக்கிரன் அழகு, பொருள் வசதி, ஆடம்பரம், காதல் விவகாரம், திறமை போன்றவற்றின் காரணியாகவும் சுக்கிரன் கருதப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால், செல்வம், புகழ் மற்றும் எல்லாவிதமான வசதிகளையும் பெறலாம்.

இந்த சுக்கிரன் கடக ராசியில் தற்போது பயணித்து வருகிறார். இவர் 2022 ஆகஸ்ட் 31 ஆம் தேதி சூரியன் ஆளும் சிம்ம ராசிக்கு செல்கிறார். இந்த சிம்ம ராசியில் ஏற்கனவே சூரியன் பயணித்து வருகிறார். எனவே சுக்கிரன் சிம்ம ராசிக்கு வரும் போது சூரியனுடன் இணைந்து சிம்ம ராசியில் பயணிப்பார். இந்த சூரிய சுக்கிர சேர்க்கை பல ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை கொண்டு வந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு இச்சேர்க்கையால் நிதி நன்மைகள் கிடைக்கும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
சிம்ம ராசியில் சூரியனும், சுக்கிரனும் இணைந்திருப்பது ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் நல்ல ஆடம்பரத்தை அனுபவிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உங்கள் தாய் அன்பையும், பாசத்தையும் காட்டுவார். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

சிம்மம்
சூரியனும், சுக்கிரனும் சேர்ந்திருப்பது சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். இக்காலத்தில் திடீர் பண ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்றத்திற்கான நல்ல சலுகைகள் கிடைக்கும். சமூகத்தில் நல்ல செல்வாக்கு மிக்கவர்களுடன் நட்பு உருவாகும். சமுகத்தில் அதிக மரியாதையைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

துலாம்
சூரிய-சுக்கிர சேர்க்கையானது துலாம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தைத் தரும். இந்த கால கட்டத்தில் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பல ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிப்பீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு, முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை அதிகம் பெறுவீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் யோகத்தைத் தரும் கிரகமாகும். இந்த சுக்கிரன் சூரியனுடன் இணைந்திக்கும் காலத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் துறைகளில் வெற்றி பெறுவார்கள். மேலும் முக்கியமான பணிகளும் வெற்றிகரமாக முடிக்கப்படும். கையில் பணம் அதிகம் புரளும். திருமணமாகாதவர்களுக்கு இக்காலத்தில் நல்ல திருமண வரன் தேடி வரும்.



Click it and Unblock the Notifications