Latest Updates
-
அக்டோபர் இறுதியில் உதயமாகும் சுக்கிரன்: இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை தீர்ந்து, வங்கி இருப்பு அதிகரிக்கும்.. -
Vastu Tips: வாஸ்துப்படி ஃப்ரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல பண இழப்பு அதிகரிக்கும்.. -
அக்டோபர் 24-ல் புதன் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 4 ராசிகளின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் மாத தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சரவணபவன் காலிஃபிளவர் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களுக்கு சிறந்த ரோல்மாடலாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
கிரகப்பிரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்.. -
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க
கன்னி ராசியில் சூரியன் இருப்பதால் இந்த 5 ராசிக்காரங்க அடுத்த ஒரு மாதம் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போறாங்க...
கிரகங்களின் தலைவராக கருதப்படும் சூரியன் 2022 செப்டம்பர் 17 ஆம் தேதி கன்னி ராசிக்கு சூரியன் சென்றார். சூரியன் கன்னி ராசியில் இருப்பதால் எந்த ராசிக்காரர்கள் எல்லாம் பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
கிரகங்களின் தலைவராக கருதப்படும் சூரியன் 2022 செப்டம்பர் 17 ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு சென்றார். இந்த கன்னி ராசியில் சூரியன் ஒரு மாத காலம் பயணிப்பார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது தான் தமிழ் மாதம் பிறக்கிறது. கன்னி ராசிக்கு சூரியன் செல்லும் போது புரட்டாசி மாதம் பிறக்கிறது. ஒருவரது ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருந்தால், உயர் பதவிகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதுவே சூரியன் மோசமான நிலையில் இருந்தால், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது சூரியன் கன்னி ராசியில் இருப்பதால் எந்த ராசிக்காரர்கள் எல்லாம் பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த காலத்தில் எந்த முடிவுகளை எடுக்கவும் பல பிரச்சனை சந்திக்க வேண்டியிருக்கும். மன உளைச்சலும் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் தகராறு ஏற்படலாம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்படலாம். இந்த காலத்தில் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் வேலை காரணமாக குடும்பத்தை விட்டு விலகி இருக்க நேரிடும். உங்களின் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்துவதில் கவனமாக இருங்கள். உங்களின் இமேஜை பாதிக்கும் எந்த விஷயத்தையும் செய்யாதீர்கள். இக்காலத்தில் எதிரிகள் உங்களை தொந்தரவு செய்வார்கள். எனவே அவர்களிடம் கவனமாக இருங்கள். நண்பர்களுடனான உறவு மோசமடைய வாய்ப்புள்ளது. அவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். உங்கள் ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.

மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பார்கள். இக்காலத்தில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. முடிந்தவரை அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். சிலர் உங்கள் இமேஜை கெடுக்க முயற்சிப்பார்கள். உங்கள் ஆரோக்கியம் சற்று மோசமாக இருக்கும். சிறிது மன அழுத்தத்தை உணர்வீர்கள். உங்கள் தந்தையுடனான உறவு சற்று மோசமாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 8 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சில சிரமங்கள் சந்திக்க நேரிடும். யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருங்கள். இக்காலத்தில் தலை தொடர்பான பிரச்சனைகள் வரலாம். நிதி ரீதியாக, அதிக செலவுகள் உங்களை கவலையடையச் செய்யும். எனவே செலவுகளை சற்று குறைக்க முயற்சி செய்யுங்கள்.

மீனம்
மீன ராசியின் 7 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் உங்கள் உறவுகளில் சில பிரச்சனைகள் வரலாம். உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. திருமணம் செய்ய நினைப்போருக்கு இக்காலம் சாதகமற்றதாக இருக்கும். உங்கள் தொழிலில் விரும்பிய முடிவுகளைப் பெற மாட்டீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளருடன் பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படலாம்.



Click it and Unblock the Notifications
