Latest Updates
-
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Surya Gochar 2022: கன்னி செல்லும் சூரியனால் அடுத்த ஒரு மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு செல்கிறார். இந்நாளில் தான் தமிழ் மாதமான புரட்டாசி மாதம் பிறக்கிறது.
நவகிரகங்களில் ஒருவரது தலைவிதியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கை சூரியனின் நிலை கொண்டுள்ளது. ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவராக கருதப்படும் சூரியன், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார். சூரியனின் நிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அது வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

மேலும் சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு செல்கிறார். இந்நாளில் தான் தமிழ் மாதமான புரட்டாசி மாதம் பிறக்கிறது. இப்போது கன்னி செல்லும் சூரியனால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என புரட்டாசி மாத ராசிப் பலனைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிக்கப்படும். உங்கள் எதிரிகளை வீழ்த்துவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஒருவேளை ஆரோக்கிய பிரச்சனை இருந்தால், அதை எளிதில் சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு சாதகமான காலம் இது. இக்காலத்தில் மாணவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதில் வெற்றி பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் சற்று கடினமாக இருக்கும். இக்காலத்தில் முக்கிய முடிவை எடுப்பதில் பல சவால்களை சந்திப்பீர்கள். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது குடும்ப உறுப்பினர்களுடனான உறவில் சிக்கல்களை ஏற்படுத்தும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடனான உறவு மோசமடைய வாய்ப்புள்ளதால், அலுவலகத்தில் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். இக்காலத்தில் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்காதீர்கள். ஏனெனில் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கும், தொழிலை மாற்ற நினைப்பவர்களுக்கும் இயல்பை விட நேரம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பல்வேறு உடல்நல மற்றும் மனநல பிரச்சனைகள் ஏற்படலாம். இக்காலத்தில் பயணம் மேற்கொள்வதில் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்பதால், பயணம் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையிலும் குழப்பமான சூழல் நிலவும். திருமணமானவர்கள் திருமண வாழ்க்கையில் பல சவால்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும் உங்கள் வாழ்க்கைத் துணை நல்ல பலன்களைப் பெறுவார்.

கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் கடக ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். உடல் மற்றும் மன கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டதாக உணர்வார்கள். பணிபுரிபவர்களுக்கு அவர்களின் கடின உழைப்பு மற்றும் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது. இந்த பயணங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவுகள் வலுவடையும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சகோதர, சகோதரிகளின் ஆதரவும் கிடைக்கும். நிதியைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும். உங்களின் பண பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் சாதகமாக இருக்காது. இக்காலத்தில் எந்த ஒரு முடிவையும் கொஞ்சம் யோசித்து எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் பேச்சு உங்களை கடுமையான சிக்கலில் சிக்க வைக்கும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் முடிந்தவரை அமைதியாக இருங்கள். சூரியனின் நிலை உங்களுக்கு உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பதற்றத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, காய்ச்சல் மற்றும் உணவு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். எனவே ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். நிதி பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சற்று அகங்காரமாக நடந்து கொள்வீர்கள். இது உங்கள் உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் நிதி வாழ்க்கையைப் பொறுத்தவரை, எந்தவொரு நிதி பரிவர்த்தனையிலும் ஈடுபடும் முன் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். கண் பிரச்சனைகளை புறக்கணிக்காதீர்கள். மொத்தத்தில், அனைத்து பெரிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பும் அதிகமாக யோசித்து, அதன் பிறகு எந்த முடிவையும் எடுங்கள்.

துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வெளிநாடு செய்ய முயற்சிப்பவர்கள் நற்செய்திகளை பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. நிதியைப் பொறுத்தவரை, செலவுகள் அதிகம் இருக்கும். இதனால் நிதி நெருக்கடியை சந்திப்பீர்கள். எனவே செலவுகளை கண்காணியுங்கள். உங்கள் எதிரிகள் மற்றும் போட்டியாளர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். உங்களுக்கு எதிராக சதி செய்வார்கள் என்பதால் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருங்கள். பேசும் போது எச்சரிக்கையாக இருங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். வழக்கத்தை விட அதிக நற்பலன்கள் கிடைக்கும். இக்காலத்தில் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். வருமான ஆதாரங்கள் விரிவடையும். குடும்ப சூழல் அமைதியாக இருக்கும். உங்கள் தந்தை உங்களுக்கு மிகவும் ஆதரவாக இருப்பார். இருப்பினும், முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன், நீங்கள் உங்கள் தந்தையின் ஆலோசனையைப் பெற வேண்டும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் ஆன்மீகத் தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் கூடுதல் பலத்தைப் பெறுவார்கள். குறிப்பாக பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வணிகர்களுக்கு தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இதுவரை உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், இக்காலத்தில் அதை நன்கு சமாளிப்பீர்கள். ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வீர்கள். சமூகத்தில் செல்வாக்கு மிக்க பலரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவதன் மூலம், சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வாழ்வில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். தனிப்பட்ட வாழ்க்கையில், சற்று கவனமாக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் உங்கள் விருப்பத்தை மற்றவர்கள் மீது திணிப்பதை விட்டுவிட வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தத்தில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொண்டு, ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளிலிருந்து விலகி இருங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் உங்கள் தந்தையுடன் விரிசல் ஏற்படலாம். எனவே அவர்களுடன் சண்டையிடுவதைத் தவிர்த்து அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். இக்காலத்தில் முழு சூழ்நிலையையும் புரிந்து கொள்ளாமல் உங்கள் குடும்பத்தில் உள்ள எதிலும் உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டாம்.

கும்பம்
கும்ப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வாழ்க்கையில் நிறைய கருத்து வேறுபாடுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். முடிந்தவரை எந்த விதமான தகராறிலும் ஈடுபடுவதைத் தவிர்த்து, எல்லாச் சூழ்நிலைகளிலும் அமைதியாக இருங்கள். முக்கியமாக இக்காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். திருமணமானவர்கள் தங்கள் துணையின் மோசமான உடல்நிலை காரணமாக, மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். நிதியைப் பொறுத்தவரை, செலவுகள் அதிகரிப்பதால் மன அழுத்தமும் கவலையும் அதிகரிக்கும். எனவே செலவுகளை பார்த்து செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்
மீன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் திருமண வாழ்க்கையில் பெரிய தாக்கம் ஏற்படும். உங்கள் ஈகோ உங்கள் உறவுகளை ஆள அனுமதிப்பதைத் தவிர்த்து, உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். திருமணமாகாதவர்களுக்கு விரும்பத்தகாத வரன் தேடி வரும். வேலையில் கூட விரும்பிய இலக்குகளை அடைய முடியாது. வணிகர்கள் தங்கள் கூட்டாளருடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் தங்கள் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கருத்து வேறுபாடு இருக்கலாம். உடல்நலக் கண்ணோட்டத்தில், வயிற்று வலி, தலைவலி, அஜீரணம், வாயு, மனநலப் பிரச்சினைகள் மற்றும் பல போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம்.



Click it and Unblock the Notifications