Just In
- 15 min ago
கடுமையான கரோனரி நோய்க்குறி என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
- 32 min ago
இந்த பழங்களை ஒன்றாக சாப்பிடுவது விஷத்திற்கு சமமாம்... இது உங்க உயிருக்கே ஆபத்தாகும்... ஜாக்கிரதை!
- 7 hrs ago
இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணம் சம்பந்தமாக ஏதேனும் தகராறு ஏற்படலாம்...
- 14 hrs ago
ஆண்களை விட பெண்கள் எப்படி வித்தியாசமாக கள்ள உறவில் ஏமாற்றுகிறார்கள்? ஏன் ஏமாற்றுகிறார்கள் தெரியுமா?
Don't Miss
- Finance
ரிலையன்ஸ் ரீடைல் சேர்மன் பதிவியை கைப்ற்றினார் ஈஷா அம்பானி.. விரைவில் அறிவிப்பு..!
- Sports
"பொறுமைக்கும் எல்லை உண்டு..." இந்திய வீரர்கள் மீது பிசிசிஐ ஆத்திரம்.. அப்படி என்ன செய்தனர்?
- Technology
ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் இவ்வளவு நாள் வேலிடிட்டி கிடைக்குதா? Bsnl, Airtel இன் சூப்பர் பிளான்கள்.!
- News
டெல்லி மாஸ்டர்கள்.. கொள்ளைப் பணத்தில் அதிமுக குத்தகை.. வெளுத்து வாங்கிய நாஞ்சில் சம்பத்!
- Automobiles
போட்டி அதிகமாயிடுச்சு... 450எக்ஸ் இ-ஸ்கூட்டரின் ரேஞ்சை அதிகப்படுத்தும் ஏத்தர்!!
- Movies
சூர்யா, காஜோலுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
- Travel
இந்தியாவின் மார்பில் சிட்டிக்குள் ஒரு சுற்றுலா – கிஷன்கரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 7 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
நவகிரகங்களில் சூரியன் தலைவனாக கருதப்படுகிறார். ஒரு ஆணின் ஜாதகத்தில் சூரியன் தந்தையையும், பெண்ணின் ஜாதகத்தில் சூரியன் கணவனையும் குறிக்கிறது. இத்தகைய சூரியன் 2022 மே 15 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைந்தார். இந்த சூரிய பெயர்ச்சியானது இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நிகழ்வதற்கு முந்தைய நாள் நடைபெற்றது. சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுவார். இப்படி ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. ரிஷப ராசிக்கு சூரியன் செல்லும் போது வைகாசி மாதம் பிறக்கிறது.
சூரியனின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இதில் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களும் கிடைக்கலாம். இப்போது 2022 மே மாதத்தில் சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக் கதவு திறக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
இந்த சூரிய பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். சூரியன் மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றிருப்பதால், இக்காலம் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டிய காலம். உங்களின் நீண்ட நாள் வேலை இக்காலத்தில் முடிக்கப்படும் மற்றும் உங்கள் மனநிலையும் நன்றாக இருக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவுகளில் இருந்த மனக்கசப்புகள் முடிவடையும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் சம்பள உயர்வைப் பெறுவார்கள்.

ரிஷபம்
2022 மே மாத சூரிய பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் நாட்டம் அதிகம் இருக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். அரசு வேலைக்கு திட்டமிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான ஆதாரங்கள் அல்லது புதிய வழிகள் கிடைக்கும். இக்காலத்தில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் மற்றும் புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு இக்காலம் மிகவும் நல்ல காலம். மொத்தத்தில் இந்த சூரிய பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி மிகவும் சிறப்பானது என்பதை நிரூபிக்கும். ஏனெனில் இக்காலத்தில் பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களின் வார்த்தைகளுக்கு உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மதிப்பளிப்பார்கள். உங்களின் கௌரவம் உயரும். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பான காலம். உங்களின் கடின உழைப்பிற்கான நற்பலன் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரிய பெயர்ச்சி மிகவும் சாதகமானதாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்ணைப் பெற்று வெற்றி பெறுவீர்கள். இக்காலத்தில் உங்களின் எதிரிகளை நீங்கள் தோற்கடிப்பீர்கள்.

கும்பம்
இந்த சூரிய பெயர்ச்சி காலம் கும்ப ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். தொழில் வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் மற்றும் வியாபாரிகளுக்கு இது நல்ல காலம். மேலும் இந்த காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு மே மாத சூரிய பெயர்ச்சி நற்பலன்களை வழங்குவதாக இருக்கும். இக்கால கட்டத்தில் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். இது தவிர, உங்களின் திறன் விரிவடையும். இக்கால கட்டத்தில் புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள். நிலுவையில் உள்ள சட்ட விவகாரத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் குடும்பம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.