Just In
- 11 min ago
கடுமையான கரோனரி நோய்க்குறி என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
- 28 min ago
இந்த பழங்களை ஒன்றாக சாப்பிடுவது விஷத்திற்கு சமமாம்... இது உங்க உயிருக்கே ஆபத்தாகும்... ஜாக்கிரதை!
- 6 hrs ago
இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணம் சம்பந்தமாக ஏதேனும் தகராறு ஏற்படலாம்...
- 14 hrs ago
ஆண்களை விட பெண்கள் எப்படி வித்தியாசமாக கள்ள உறவில் ஏமாற்றுகிறார்கள்? ஏன் ஏமாற்றுகிறார்கள் தெரியுமா?
Don't Miss
- Finance
ரிலையன்ஸ் ரீடைல் சேர்மன் பதிவியை கைப்ற்றினார் ஈஷா அம்பானி.. விரைவில் அறிவிப்பு..!
- Sports
"பொறுமைக்கும் எல்லை உண்டு..." இந்திய வீரர்கள் மீது பிசிசிஐ ஆத்திரம்.. அப்படி என்ன செய்தனர்?
- Technology
ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் இவ்வளவு நாள் வேலிடிட்டி கிடைக்குதா? Bsnl, Airtel இன் சூப்பர் பிளான்கள்.!
- News
டெல்லி மாஸ்டர்கள்.. கொள்ளைப் பணத்தில் அதிமுக குத்தகை.. வெளுத்து வாங்கிய நாஞ்சில் சம்பத்!
- Automobiles
போட்டி அதிகமாயிடுச்சு... 450எக்ஸ் இ-ஸ்கூட்டரின் ரேஞ்சை அதிகப்படுத்தும் ஏத்தர்!!
- Movies
சூர்யா, காஜோலுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
- Travel
இந்தியாவின் மார்பில் சிட்டிக்குள் ஒரு சுற்றுலா – கிஷன்கரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ரிஷபம் செல்லும் சூரியனால் மே 15 முதல் அதிக பிரச்சனைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும். கிரகங்களின் மாற்றம் மனித வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது. அதில் சிலருக்கு அதிர்ஷ்டமானதாகவும், சிலருக்கு மோசமானதாகவும் இருக்கும். ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றும் கிரகம் சூரியன். கிரகங்களின் தலைவராக கருதப்படும் சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் சூரியன் 2022 மே 15 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார். ஜோதிடத்தில் சூரியன் தந்தை, ஆட்சி ஸ்தானம் மற்றும் சமூகத்தில் மரியாதை போன்றவற்றுடன் தொடர்புடையவர். ஆகவே சூரியனின் பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் பாதிக்கும். ஆனால் சூரியன் ரிஷபம் செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பிரச்சனைகள் அதிகம் இருக்கும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
ரிஷபம் செல்லும் சூரியனால் மிதுன ராசிக்காரர்கள் சற்று ஆற்றல் குறைவாக இருப்பார்கள். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுப்பதில் சில சிரமங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். மேலும் இக்காலத்தில் உங்கள் சிறப்பான திறனை வழங்குவதில் சில சிக்கல்களை சந்திக்கக்கூடும். கூடுதலாக, உடன்பிறந்தவர்களுடன் சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இக்காலத்தில் உங்கள் கண்களில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் கண்களில் கவனம் செலுத்துங்கள்.

துலாம்
சூரிய பெயர்ச்சி காலம் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இல்லை. இக்காலத்தில் உடல் வலி, ஆற்றலின்மை, பலவீனம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. நிதி ரீதியாக இக்காலம் உங்களுக்கு சாதகமாக இல்லை. எனவே இக்காலத்தில் எவ்விதமான நிதி முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். இல்லாவிட்டால் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் சற்று கோபமாக நடத்து கொள்வார்கள் மற்றும் இவர்களின் அணுகுமுறையும் சரியாக இருக்காது. அதோடு, தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கையில் பொறுப்பான வேலைகளை எடுக்கும் போது நீங்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்
சூரியனின் ராசி மாற்றத்தால் மகர ராசிக்காரர்கள் தங்களின் நிதி நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் உங்கள் நிதி நிலைமை பாதிக்கப்படும். பெரிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் உயர் அதிகாரிகளுடனான உறவு சற்று மோசமாக இருக்கும். இதனால் பணியிடத்தில் உங்கள் இமேஜ் சற்று பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

கும்பம்
திருமணமான கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி அவ்வளவு நல்லதாக இல்லை. இக்காலத்தில் உங்கள் வாழ்க்கை துணை ஆட்சி செய்வது போன்று இருக்கும். இதனால் நீங்கள் சற்று வருத்தப்படுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலம் உங்களுக்கு சாதகமாக இல்லை. சுவாச பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.